வட மாகாணத்தில் உயிர்கொல்லியான போதைப்பொருளை அடியோடு ஒழிக்க வேண்டும்!

முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு எதிராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை நாமும் சரிவரப் பயன்படுத்தி எமது வடக்கு மாகாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளை அடியோடு ஒழிக்க வேண்டும். இளைய சமூகத்தை அதிலிருந்து பாதுகாப்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மக்களை நோக்கிய நிர்வாகம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்திப்பு, ‘அபிவிருத்தி நோக்கிய பயணம் – […]

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகம் யாழில்!

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 3 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இலக்கம் 58, இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் குறித்த அலுவலகம் அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அந்தக் கட்சியின் உப செயலாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 2018ஆம் […]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் செல்ல அனுமதித்தார். சந்தேக நபருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் அறிவித்தார். பின்னர் வழக்கை ஜனவரி மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு […]

நல்லதண்ணி இ.போ.ச பேருந்து சாரதி கைது!

நல்லதண்ணி பகுதியில் உள்ள பேருந்து நிலைய தங்குமிட விடுதியில் அரச பேருந்தின் சாரதி ஒருவர் போதைப் பொருள் வைத்திருந்த போது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைத்த இரகசிய தகவல்களை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக சந்தேக நபரை கண்காணித்து வந்த வேலையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சாரதியிடம் 2 போதை வில்லைகள், ஹேரோயின் 77 மில்லி கிரேம் வைத்திருந்துள்ளார். இவ்வாறு கைது செய்ய பட்டவர் ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் சாரதியும் வட்டவளை […]

ரஷ்யாவின் நீர் மூழ்கி ஏவுகணை சோதனை!

நீர் மூழ்கி கப்பலில் இருந்து செலுத்தப்படும், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும், அணுசக்தியில் இயங்கும், ‘போஸைடான்’ என்ற ஏவுகணை சோதனையை ரஷ்யா நடத்தியுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கு இடையே கடந்த மூன்றரை ஆண்டு களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இதற்காக ரஷ்யாவுக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. வலியுறுத்தல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினுடன் […]

சகோதரன் அரச பட்டங்களை பிரிட்டன் மன்னர் சார்லஸ் முயற்சி?

பிரிட்டனின் மன்னர் சார்லஸ் தனது தம்பி இளவரசர் ஆண்ட்ரூவின் அரச பட்டங்களை பறிப்பதற்கான முறையான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார். மேலும் அவரது வின்ட்சர் இல்லத்தை காலி செய்ய பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த வர்ஜீனியா கியூப்ரே என்ற பெண், பிரபல தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்த […]

தென் கொரிய விமானப்படை தளத்தில் ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (30) தென் கொரிய விமானப்படை தளத்தில் சீனத் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்துள்ளார். இந்த சந்தித்த பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பிரச்சினைகள் குறித்து முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார். இரு நாடுகளும் ஏறக்குறைய எல்லாவற்றிலும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளன என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆசியாவில் தனது மூன்று நாடுகளுக்கான பயணத்தை முடித்த பிறகு பேசிய ட்ரம்ப், சோயாபீன்ஸ் இறக்குமதி, அரிய மண் […]

யாழ். பல்கலை வளாகத்தில் துப்பாக்கியின் பாகங்கள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்றையதினம் பல்கலைக்கழக நூலக பகுதியை சுத்தம் செய்தவேளை குறித்த பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு நேற்று இரவு முதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அந்த துப்பாக்கி பாகங்கள் இரண்டையும், வயர்களையும் மீட்டுச் சென்றுள்ளனர்.

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக்; லிவர்பூல், டொட்டென்ஹாம் வெளியேற்றம்

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரிலிருந்து லிவர்பூல், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகியன வெளியேற்றப்பட்டுள்ளன. தமது மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை (30) நடைபெற்ற கிறிஸ்டல் பலஸுடனான விலகல் முறையிலான இத்தொடரின் நான்காவது சுற்றுப் போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து லிவர்பூல் வெளியேறியது. பலஸ் சார்பாக இஸ்மைலா சார் இரண்டு கோல்களையும், யெரெமி பினோ ஒரு கோலையும் பெற்றனர். இதேவேளை நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் நியூகாசில் […]

தீவிர பயிற்சியில் இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக விசேட பாதுகாப்பு குழுவொன்றை (Special Security Team) பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) முடிவு செய்துள்ளதாக கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் முத்தரப்பு தொடரை இலக்காகக் கொண்டு, இலங்கை அணி வீரர்கள் தற்போது ஹம்பாந்தோட்டையில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் அணி இந்தப் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது 3 ஒருநாள் […]