விமானம் செங்குத்தாக புறப்பட, தரையிறங்க புதிய தொழில்நுட்பம்!

விமானம் செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கவும் உதவும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில், விமானங்கள் தரை இறங்குவதற்கு பல ஆயிரம் அடி நீளம் கொண்ட நீண்ட ஓடுபாதைகள் தேவையாக உள்ளன. ஓடுபாதை நீளம் அதிகமாக இருந்தால் மட்டுமே, பெரிய அளவிலான விமானங்கள் தரை இறங்கவும், புறப்படவும் முடியும். இதனால் இடப் பற்றாக்குறையுள்ள நகரங்களில் விமான நிலையம் அமைப்பது பெரும் சவாலாக இருக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை […]
பாகிஸ்தானுக்கு தலிபான் அரசு எச்சரிக்கை

‘சிலர் தெரிந்தோ, தெரியாமலோ, நெருப்புடன் விளையாடுகிறார்கள்’ என்று பாகிஸ்தானுக்கு ஆப்கன் தலிபான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஆப்கனுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட எல்லையில் இருதரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தன. கடந்த 9ம் தேதி காபூலில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று தலிபான்கள் […]
மக்களுக்கான அறிவிப்பு

வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு செய்யப்படும் போது வழங்கப்படும் ஷொப்பின் பைகளுக்கு நாளை முதல் பணம் அறவிடப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. அதன்படி வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது நாளை முதல் இலவசமாக ஷொப்பின் பைகள் வழங்கப்படாது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஷொப்பின் பைகளின் விலையும் நாளை முதல் விலைப்பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை முதல் ஷொப்பின் பைகள் வழங்கப்படாது […]
யாழ். நகரில் சுற்றிவளைப்பு; போதைப்பொருளுடன் 8 பேர் கைது

யாழ்ப்பாணம் பொலிஸார், யாழ். நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளின்போது கடந்த 3 நாள்களில் போதைப்பொருள்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். 160 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 2 சந்தேகநபர்களும், போதை மாத்திரை, ஹெரோயின், மாவா என்பனவற்றுடன் 6 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை நடத்தி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கழுத்தில் பந்து தாக்கியதால் இளம் ஆஸி.வீரர் மரணம்

பயிற்சியின் போது பந்து கழுத்தில் தாக்கியதால் இளம் வீரர் பென், மரணம் அடைந்தார். ஆஸ்திரேலியாவின் 17 வயது கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின். பெர்ன்ட்ரீ கல்லி, ராவ்வில்லே, எடிசன் பார்க் கிளப் அணிகளுக்காக விளையாடினார். ‘டி-20’ போட்டிக்கு தயாராகும் வகையில், மெல்போர்னின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள பெர்ன்ட்ரீ கல்லி மைதானத்தில் சக வீரர்களுடன் இணைந்து, கடந்த அக். 28ல் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது ‘த்ரோ டவுன்’ முறையில் சக வீரர் ஒருவர் வீசிய பந்தை […]
தோஹாவில் ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட்!

ஆசிய கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் போட்டிகள் 2025 நவம்பர் 14 முதல் 23 வரை தோஹாவில் நடைபெறுகின்றன. இந்தப்போட்டிகள், வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்றன. ஆசியக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கும் எட்டு அணிகளும் இதில் பங்கேற்கவுள்ளன. புதிய வடிவமைப்பின் கீழ், டெஸ்ட் விளையாடும் ஐந்து நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தங்கள் “யு” அணிகளை களமிறக்கவுள்ளன. அதே நேரத்தில் இணை உறுப்பினர்களான ஓமன், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஹொங்கொங் […]
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது

திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், 5 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முனைந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
“கரும்புலி மில்லர்” என்ற மாவீரரின் பெயரை வர்த்தகச் சினிமாவிற்கு பயன்படுத்துவது, தமிழர்களின் தியாக வரலாற்றை அவமதிக்கும் செயல்

வர்த்தக நோக்கில் எடுக்கப்படும் ஒரு சினிமாவிற்குப் “கரும்புலி மில்லர்” என்ற பெயர் பாவிக்கப்படுவதை ஈழத்து நிலவன் வன்மையாகக் கண்டித்துள்ளார். மேற்படி விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில்… தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் “கரும்புலி மில்லர்” என்ற பெயர் என்றும் அழியாத வீரத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது. தன் உயிரை அர்ப்பணித்து, போராட்ட வரலாற்றில் அழியாத சின்னமாக மாறிய கரும்புலி மில்லர் அவர்கள், ஒரே நபரின் தைரியத்தின் மூலம் நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு ஊக்கமாக இருந்தார். அவரின் பெயர் இன்று […]
சாட்சியங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அநுரவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு விதிக்கப்பட்ட வரிகளைக் குறைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ.1590 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் தங்கள் சாட்சியங்களை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவில் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு, அத்தகைய ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு நேற்று (30) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர் […]
இலங்கையில் பாதுகாப்புக்கு உறுதியில்லை – ஜேர்மனி எச்சரிக்கை

இலங்கையில் அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைகள், இறுக்கமான நுழைவு விதிகள் மற்றும் அரசியல் அமைதியின்மை அச்சுறுத்தல் காரணமாக ஜேர்மனி , தன் நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கான பயண ஆலோசனைகளை ஜேர்மனி புதுப்பித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி இலங்கை, கனடா, பிரான்ஸ், மொராக்கோ, டென்மார்க் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கே பயண ஆலோசனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டங்கள் முதல் மொராக்கோவின் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் வரை, […]