நடிகை சிம்ரன் வெளியிட்ட ‘ரெட் லேபிள் ‘ பட பதாகை

கே.ஆர்.வினோத் இயக்கத்தில் ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ள படம் ‘ரெட் லேபிள்’. கதாநாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் நடித்துள்ள இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார், கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடித்துள்ளனர். கோவை பின்னணியில் ஒரு கல்லூரியில் நடக்கும் கொலையும் கொலை சார்ந்த சம்பவங்களும் கொண்ட மர்மமான கதையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இப்படம். படப்பிடிப்பு முழுக்க முழுக்க கோவை நகரில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘ரெட் லேபிள்’ படத்தின் முதல்காட்சி பதாகையை […]
“அமரன்” திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். உலகளவில் […]
நடன இயக்குனர் சதீஷ் இயக்குநராகினார்

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ் தற்போது கிஸ் படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரித்துள்ளார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், கிஸ் படத்தின் ஓடிடி வெளியீடு […]
இலங்கை வைத்தியர்களுக்கு அவசர அழைப்பு

பிரித்தானியாவுக்கு சென்ற இலங்கை வைத்தியர்கள் இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரியுள்ளார். இது நாட்டில் உள்ள சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையை எடுத்துக்காட்டுகிறது. அமைச்சர் ஜயதிஸ்ஸ, அண்மையில் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இலங்கை உயர் ஸ்தானிகராலயம் பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை மருத்துவர்களுடன் ஏற்பாடு செய்த சந்திப்பில் கலந்து கொண்டதாகவும், அப்போது தான் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகவும் சுகாதார அமைச்சர் […]
30 கைதிகளின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் […]
தனியார் வைத்தியசாலை மருத்துவ கழிவுகள் வீதியில்…

யாழ்.BA தம்பி வீதியில் தனியார் வைத்தியசாலை மருத்துவக்கழிவுகள் வீசப்படுவதாக பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக மாநகரசபை உறுப்பினர்களான மதுசிகான் சதீஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சுகாதர பரிசோதகருக்கும், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று நிலைமையை அவதானித்தனர். அதன்பின்னர், கழிவுகளை கொட்டிய தனியார் வைத்தியசாலை நிர்வாகத்தினரை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.
PickMe நிறுவனமும் செவ்வந்தி விவகாரத்தில் சிக்கலுக்குள்…

கணேமுல்ல சஞ்சீவ படுகொலையில் பயன்படுத்தப்பட்ட டக்சிகள் குறித்த அறிக்கையை சி.சி.டி.யிடம் சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் PickMe நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் இஷார செவ்வந்தி, கொலைக்குப் பிறகு தப்பிச் செல்வதற்காகப் PickMe நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனங்களை பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில், குறித்த வாகனங்கள் தொடர்பில் ஒக்டோபர் 29ஆம் திகதி கொழும்பு குற்றப்பிரிவுக்கு (CCD) தகவல் அறிக்கையை வழங்குமாறு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். […]
கனடிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ‘தீபாவளித்திருநாள்’ விழா

கனடாவின் தலைநகர் ஒட்டாவா மாநகரில் கடந்த 28-10-2025 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘தீபாவளித் திருநாள்’ விழாவில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்மற்றும் இந்தியச் சமூகம் சார்ந்த பிரதிநிதிகள். சமய ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள். குருமார்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் கனடிய வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் அனிற்றா ஆனந்த்துடன் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரிஉட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். அங்கு உரையாற்றிய அமைச்சர் அனிற்றா ஆனந்த், ஹரி ஆனந்தசங்கரியைப் பாராட்டியும் […]
EPF சட்டத்தில் திருத்தம் செய்வதில் கவனம்

தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு, கடந்த வியாழக்கிழமை நாரஹேன்பிட்டியில் உள்ள தொழிலாளர் செயலாளர் அலுவலகத்தில் மீண்டும் கூடியது. இதன்போது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிவது குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போது, ஊழியர் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் திருத்தங்கள் தொடர்பான முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. EPF உறுப்பினர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் கூடுதல் கட்டண பொறிமுறையை புதுப்பித்தல், வங்கிகள் மூலம் அல்லாமல் EPF இலிருந்து உறுப்பினர்களுக்கு நேரடி […]
ஹுசைன் பைலா கைது

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான ஹுசைன் அகமது பைலா இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டில் அரசுக்கு 9 கோடி 96 இலட்சத்து 79 ஆயிரத்து 799 ரூபா இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின்படி, அவர் தனது பதவிக் காலத்தில் எந்தத் தேவையும் இல்லாமல் 50 தற்காலிக சேமிப்புக் களஞ்சியக் கட்டமைப்புகளை இறக்குமதி செய்தார் எனவும், இதனால் அரசுக்கு […]