வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பண மோசடி சம்பவங்கள் அதிகரிப்பு!
சமூக ஊடகங்கள் மற்றும் பல்வேறு யூடியூப் தளங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், பணியகத்தின் எந்தவித அனுமதியுமின்றி சமூக ஊடகங்கள் ஊடாக கலந்துரையாடல்களை நடத்தி இந்தப் பண மோசடிகள் நடைபெறுகின்றன. இந்த விளம்பரங்களில் பெரும்பாலானவை போலி விளம்பரங்கள். அவற்றுக்கு பணியகத்தின் அனுமதி பெறப்படவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதால், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என […]
தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவை குளிரச்செய்யும் கார்த்திகை மரநடுகை
கார்த்திகையில் மரநடுகை தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவை குளிரச்செய்யும் என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். மரநடுகை மாதத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், பூமி விரைந்து சூடேறி வருவதால் காலநிலையில் படுபாதகமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதிவேகத்துடன் நீண்ட நேரம் நின்று தாக்கும் சூறாவளிகள், காலம் தப்பிக் கொட்டித் தீர்க்கும் அடை மழை, காடுகளில் தீ மூட்டும் கடும் வறட்சி, உயர்ந்து செல்லும் கடல் மட்டம், உயிரினங்களின் […]
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்
இன்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்வதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, இரண்டு பிரதான எரிபொருள் வகைகளின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 294 ரூபாவாகும். அதேபோல், லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றரின் விலை […]
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் தொடர்ந்து தடுப்புக்காவலில்…
பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை மேலும் 21 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற காரணத்தினால் மேலும் 21 நாட்கள் கால அவகாசம் தேவைப்படுவதாக குற்றப் புலநாய்வுப பிரிவினர் மன்றுக்கு அறிவித்ததற்கு அமைவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதன் நிமித்தம் பிள்ளையானின் சட்டத்தரணியான முன்னாள் அமைச்சர் […]
பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மேவுடன் சுற்றிய 5 நடிகைகள்?
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச் சென்று தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து நடிகைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக அத்திணைக்களம் இன்று (31) நீதிமன்றத்தில் அறிவித்தது. இந்த நடிகைகள் கெஹெல்பததர பத்மேயுடன் தொடர்பு வைத்துக்கொண்டு சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பணச் சலவை அல்லது ஆயுதங்கள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட […]
இலங்கைத் தமிழ் இளைஞன் ஐரோப்பிய எல்லையில் சடலமாக மீட்கப்பட்டார்!
ஐரோப்பிய நாடான லாட்வியா எல்லையில் இலங்கை அகதியின் சடலம் மீட்கப்பட்ட அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த 28ஆம் திகதி பெலாரஸ் எல்லைக் காவலர்கள் லாட்விய எல்லையில் இரண்டு வெளிநாட்டவர்களைகண்டுபிடித்தனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக பெலாரஸின் மாநில எல்லைக் குழு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவரும், மற்றொருவரும் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டனர். அதற்கான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த இருவரும் லாட்வியன் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. லாட்விய எல்லை பாதுகாப்பு படையினரிடம் சிக்கிய இலங்கையர்கள், […]
வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பான துறைசார் வல்லுநர்களின் கலந்துரையாடல்!
வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பாக துறை சார் நிபுணத்துவம் உள்ளவர்களுடனான கலந்துரையாடல் கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான சொன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் வட மாகாணத்தில் கல்வி அபிவிருத்தி தொடர்பான இடர்பாடுகள் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக துறை சார்ந்த நிபுணர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. வட மாகாண பாடசாலைகளில் மாணவர்கள் வரவு பாடநீதியாக மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை மற்றும் முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக […]
வரவு செலவுத் திட்டத்திற்கான பிரேரணைகள் தொடர்பாக உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், யாழ் தேர்தல் மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நேற்று முன்தினம் பாராளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார், பாராளுமன்றில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான பிரேரணைகள், விவாதங்களின் போது உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள், விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. தவிசாளர்களினால் ஆரோக்கியமான கருத்துக்களை தெரிவித்ததுடன் ஒவ்வொரு விடயத்தையும் தனித்தனியாக ஆராய்ந்து […]
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் பகுதிகளில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை! நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றல் முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டங்களினை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது. அது மிகப்பெரிய சவாலாக காணப்படுகின்ற போதும் அசாத்தியமானதை […]
விக்ரமின் 63வது திரைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் ஆரம்ப காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கென அடையாளம் தந்தது ‘சேது’ படம் தான். அப்படத்தில் விக்ரம் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். ரசிகர்களால் அன்போடு ‘சியான்’ என்று அழைக்கப்படுகிறார். படத்திற்காக தனது கடின உழைப்பை கொடுத்து தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுபவர் விக்ரம் என்றால் மிகையாகாது. இதனிடையே, ‘வீர […]