சீனா அல்லது ரஷ்யாவைப் போன்ற ஆட்சியை இலங்கையில் ஏற்படுத்த முயற்சி

சீனா அல்லது ரஷ்யாவைப் போன்ற ஆட்சி முறையொன்றை இலங்கையில் அறிமுகப்படுத்த அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று (29.10.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சீனாவில் அல்லது ரஷ்யாவில் நடப்பதைப் போன்ற தனிக்கட்சி ஆட்சி முறையொன்றை இலங்கையிலும் அறிமுகப்படுத்த இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. அதன் பின் நாட்டில் […]

நீர்வேலியில் கசிப்புடன் பெண்ணொருவர் கைது

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நீர்வேலி மேற்குப் பகுதியில் கசிப்பை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் 36 வயதுடையவர் என்றும், அவருடைய உடமையில் இருந்து 5 லீற்றர் கசிப்பும், 20 லீற்றர் கோடாவும் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். சந்தேகநபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

பின்னவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளவத்தர பகுதியில் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று புதன்கிழமை (29) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காயமடைந்த குறித்த நபர், பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் பின்னவல – பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழீழத்தை உருவாக்குவதே ஐ.நா.வின் நோக்கம்

இலங்கையில் மீண்டும் இனப்பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழீழத்தை உருவாக்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாகும் என ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “இம்முறை இடம்பெற்ற ஐ.நா. கூட்டத் தொடரில் அதிக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கின்றது என்று மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார். எவ்வாறிருப்பினும் அவரது உரையை வெளிவிவகார […]

இந்தியாவுக்கு கைமாறுகிறது இலங்கையின் சீனிக் கைத்தொழிற்சாலை – விமல் வீரவன்ச

பெலவத்த சீனிக் கைத்தொழிற்சாலையின் நிதி நெருக்கடியை தீவிரப்படுத்தி தொழிற்சாலையை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த முறையற்ற செயற்பாட்டுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வலியுறுத்தினார். கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணி காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நட்டத்தை எதிர்கொண்டுள்ள பெலவத்த சீனி கைத்தொழிற்சாலையை அபிவிருத்தியடைய செய்வதற்கு அரசாங்கம் […]

போதைப்பொருள் கைப்பற்றல்; பியல் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

மித்தெனிய – ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பியல் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு வலஸ்முல்ல நீவான் மல்ஷா கொடித்துவக்கு முன்னிலையில் நேற்று(29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இவரை 12ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மித்தெனிய – தலாவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான சம்பத் மனம்பேரிக்கு பாதுகாப்பு […]

மத்தள விமான நிலையம் பாதுகாப்பாக உள்ளது!

மத்தள சர்வதேச விமான நிலையம் வன விலங்குகளின் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக உள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது. மத்தள விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் ருவான் கொடித்துவக்கு தெரிவித்தார். குறித்த விமான நிலையத்திற்கு தற்போது 04 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. புதிய விமான நிறுவனங்கள் வருவதன் மூலம் விமான நிலையத்தின் செயற்பாட்டு நட்டங்களைக் குறைத்துக்கொள்ள முடியுமெனவும் பிரதிமைச்சர் குறிப்பிட்டார்.

நுகேகொடை கூட்டத்தில் மலையகக் கட்சிகள் பங்கேற்காது?

நுகேகொடையில் எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படவுள்ள அரச எதிர்ப்புக் கூட்டத்தில் மலையகக் கட்சிகள் பங்கேற்காதென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அரசின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராகவே நவம்பர் 21 ஆம் திகதி இந்த கூட்டம் நடத்தப்படுகின்றது என எதிரணிகள் அறிவித்துள்ளன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா […]