கைதி சிறைச்சாலைக்குள் உயிரிழப்பு!
கஞ்சா செய்கை சுற்றிவளைப்பு; மூவர் கைது

தனமல்வில – நிகவெவ பகுதியில் நேற்று கஞ்சா செய்கையை சுற்றிவளைத்ததில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா செடிகள் மற்றும் 128 கிலோகிராம் உலர்ந்த கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் எம்பிலிப்பிட்டிய மற்றும் மித்தெனிய பகுதிகளை சேர்ந்த 38, 52 மற்றும் 61 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பல்வேறு அளவுகள் மற்றும் உயரங்களைக் கொண்ட பல கஞ்சா செடிகள் மாதிரிகளாக எடுக்கப்பட்டுள்ளதுடன், மீதமுள்ளவை சம்பவ இடத்திலேயே […]
பங்களாதேஷுக்கெதிரான இருபதுக்கு – 20 ; தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்

பங்களாதேஷுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள், சட்டோகிராமில் நேற்று புதன்கிழமை (29) நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் 55 (36), அலிக் அதனஸேயின் 52 (33) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை […]
களனிகங்கை கடலுடன் சங்கமிக்கும் பகுதியில் அதிகளவான குப்பை – சிதம்பரப்பிள்ளை மனோகரன்

காக்கைதீவு (கொழும்பு – 15,)கடற்கரையில் களனிகங்கை கடலுடன் சங்கமிக்கும் பகுதியில் அதிகளவான குப்பைகள் அன்றாடம் கரையொதுங்குவது கடற்கரை பிரதேசத்தின் புனிதத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் காணப்படுவதாக தெரிவித்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிதம்பரப்பிள்ளை மனோகரன், இதன் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பேண க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நீண்டகால பொறிமுறை ஒன்றை அமுல்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு களநிலைமைகளை ஆராய்ந்த பின்னர், சிதம்பரம் மனோகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு […]
முதியோர் தொகை விகிதம்; ஆசியாவில் இலங்கை முதலிடத்தில்

ஆசிய பிராந்தியத்தில் முதியோர்களின் தொகை விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2012ஆம் ஆண்டில் நாட்டின் முதியோர் மக்கள் தொகை 12 சதவீதமாக இருந்தது என்றும், 2024 ஆம் ஆண்டில் அது 18 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் வைத்தியர் நிஷானி உபயசேகர தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2024இல் மக்கள் தொகை கணக்கெடுப்பில், முதியோர் மக்கள் தொகை 18% ஆக அதிகரித்துள்ளது. இது 2040 ஆம் ஆண்டுக்குள், இந்த […]
அதிகமான சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர நடவடிக்கை

ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இதற்காக பல விளம்பரத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருகின்றனர். இலங்கையில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் […]
வவுனியாவில் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடுகிறது

வவுனியாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி கூடவுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது உள்ளடங்கலாக அதனை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி ஆராயப்படவுள்ளது. 2026 நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைத்து விசேட உரையாற்றவுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் […]
சிறுவர்களுக்கு எதிரான வன்முறை; 414 முறைப்பாடுகள்

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர் பாலியல் வன்முறை தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 414 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கடுமையான பாலியல் வன்முறை தொடர்பில் 192 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டெம்பர் 30 வரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 7,677 ஆகும். இவற்றில், 6,296 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைச் சட்டத்தின் கீழ் […]
இலங்கையில் சுவிஸ் உள்ளிட்ட நாடுகளின் விமான சேவைகள்

சுவிஸ் விமான நிறுவனமான எடெல்வைஸ், பெலாருஸ் நாட்டின் தேசிய விமான நிறுவனமான பெலாருஷ்யன் ஏர்லைன்ஸ் மற்றும் ரஷ்ய விமான நிறுவனமான ரெட் விங்ஸ் ஆகியவை நேற்று முதல் இலங்கைக்கான சேவைகளைத் ஆரம்பித்துள்ளன. எடெல்வைஸ் 257 பயணிகளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அதன் குளிர்கால விமான சேவையை ஆரம்பித்துள்ளது. 402 பயணிகளுடன் ரெட் விங்ஸ் மற்றும் 277 வெளிநாட்டு விருந்தினர்களுடன் பெலாவியா ஆகியவை ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கின. பெலாவியா கிழக்கு […]
திருகோணமலை விவசாயிகளின் தொடர் போராட்டம்

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடர்ந்தும் 42 ஆவது நாட்களாக நேற்றும் போராட்டத்தை முன்னெடுத்தனர். திருகோணமலை மாவட்ட செயலகம் முன் தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தை வெயில், மழை பாராது அபகரிக்கப்பட்ட தங்களது விவசாயங்களை மீளப் பெற்றுத் தரக்கோரி போராடி வருகின்றனர். சூரிய மின்சக்தி உற்பத்திக்காக தனியார் கம்பனிகளுக்கு தங்களது விவசாய நிலங்களை வழங்கியதை அடுத்து தொடரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். முத்து நகர் ஒன்றினைந்த விவசாய சம்மேளனம், அகில இலங்கை விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் இணைந்து காணி […]