SLS தயாரிப்பு சான்றிதழ் முத்திரையை கட்டாயம்!

தண்ணீர் போத்தல்களில் SLS தயாரிப்பு சான்றிதழ் முத்திரையை கட்டாயமாக்கும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புதிய உத்தரவு, ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை, குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுப்புற அதிகாரசபை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. CEA இன் படி, SLS சான்றிதழ் முத்திரையைக் கொண்டிருக்க வேண்டிய தயாரிப்புகள் பின்வருமாறு; திரவ பானங்களை எடுத்துச் செல்வதில் மீண்டும் மீண்டும் […]

கொழும்பில் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் மீட்பு

அரகலய காலத்தில் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கண்ணீர் புகைக்குண்டு 10 அடங்கிய பை, கொழும்பு-07, சேர் ஏனஸ் டி சில்வா மாவத்தையில் உள்ள கட்டடமொன்றின் கூரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர். உணவு வகையை பொதிச்செய்யும் ஒரு பையில் இருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகம் அருகே போராட்டக்காரர்கள் நடத்திய போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினரால் கண்ணீர் புகைக்குண்டுகள், போராட்டக்காரர்களின் கைகளில் விழுந்து வீசப்பட்டபோது இந்தக் கட்டிடத்திலேயே இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக மூத்த […]

பருத்தித்துறை நகர சபையின் அதிரடி நடவடிக்கை

பருத்தித்துறை நகரசபை ஏல்லைக்குள் வெடி கொழுத்துவோருக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபை எல்லைக்குள் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் வகையிலும், சூழலை மாசுபடுத்தும் வகையிலும் பொது இடங்களில் வெடிக்கொழுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியில்(01.11.2025) இருந்து இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வரவுள்ளது.

வலுவான மக்கள் இயக்கம் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க உருவாக்கப்படும்

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க ஒரு வலுவான மக்கள் இயக்கம் உருவாக்கப்படும் என்றும், போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் தங்கள் சட்டவிரோத நடைமுறைகளை நிறுத்த அழைப்பு விடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று வலியுறுத்தினார். சுகததாச உட்புற அரங்கில் நடைபெற்ற ஒன்றுபட்ட ஒரு தேசம் தேசிய மிஷனின் தொடக்க விழாவில் பேசிய அவர், அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் தனியாக அதை எதிர்கொள்ள முடியாது என்று கூறி, அழிவுகரமான அச்சுறுத்தலை ஒழிப்பதில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் […]

முதல் அணியாக மகளிர் உலகக் கிண்ண இறுதிக்குள் நுழைந்தது தென் ஆபிரிக்கா

குவாஹாட்டி, பர்சாபரா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (29) நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அத்தியாயத்தின் முதலாவது அரை இறுதியில் இங்கிலாந்தை நொக்-அவுட் செய்த தென் ஆபிரிக்கா, முதாலாவது அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. இந்தப் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய தென் ஆபிரிக்கா 125 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. அணித் தலைவி லோரா வுல்வார்ட் குவித்த அபார சதம், மாரிஸ்ஆன் கெப் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல் என்பன தென் ஆபிரிக்காவின் […]

மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20; சிம்பாப்வேயை வென்ற ஆப்கானிஸ்தான்

சிம்பாப்வேக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஹராரேயில் புதன்கிழமை (29) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான முதலாவது போட்டியில் சிம்பாப்வே வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான்: 180/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: இப்ராஹிம் ஸட்ரான் 52 (33), ரஹ்மனுல்லா குர்பாஸ் 39 (25), அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 27 (21), செதிகுல்லா அடல் 25 (22), ஷகிடுல்லா ஆ.இ 22 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: சிகண்டர் ராசா 3/20 […]

IVS ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் இந்தியா!

விசா, கடவுச் சீட்டு மற்றும் தூதரக சேவைகளுக்கான அவுட்சோர்சிங் சேவை வழங்குநரான IVS லங்காவின் செயற்பாடுகளை, 2025, ஒக்டோபர் 31ம் திகதியுடன் நிறுத்தபோவதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நவம்பர் 3, 2025 முதல், அனைத்து விசா, கடவுச் சீட்டு மற்றும் தூதரக தொடர்பான சேவைகளையும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் (கொழும்பு), உதவி உயர் ஸ்தானிகராலயம் (கண்டி) மற்றும் இந்திய துணைத் தூதரகம் (யாழ்ப்பாணம்) ஆகியவற்றை நேரடியாகக் கையாளும் என […]

சம்பளத்தில் முரண்பாடு: டெஸ்லாவில் இருந்து விலகுகின்றாரா எலான் மஸ்க்?

1 ட்ரில்லியன் டொலர் ஊதியம் வழங்கவில்லை எனின் டெஸ்லாவில் இருந்து எலான் மஸ்க் வெளியேறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் spaceX, X, உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருந்து வருகின்றார். சமீபத்திய காலாண்டில் டெஸ்லா நிறுவனத்தின் லாபம் கணிசமாக குறைந்ததுள்ள நிலையில் விற்பனையை அதிகரிக்கும் முடிவில் டெஸ்லா நிறுவனம் உள்ளது. அதற்கு எலான் மஸ்க்கை மேலும் 10 ஆண்டுகளுக்கு தலைமை பொறுப்பில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக […]

வைரஸ் பாதித்த குரங்குகள் தப்பி ஓட்டம்!

அமெரிக்காவில் மிசிசிப்பி நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் கொவிட்-19 போன்ற வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருந்த குரங்குகள் தப்பி ஓடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் மிசிசிப்பி நெடுஞ்சாலையில் லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் துலேன் பல்கலைக்கழகத்தில் (Tulane University) இருந்த ஆய்வகக் குரங்குகளை ஏற்றிச் சென்ற ட்ரக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் குரங்குகள் ஹெபடைடிஸ் சி (Hepatitis C) மற்றும் கொவிட்-19 (Covid-19) போன்ற பல வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதால், இவை பொதுமக்களுக்குச் சுகாதார அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று அதிகாரிகள் […]

குருணாகல் விகாரையில் 9 வயது பிக்கு உயிரிழப்பு!

குருணாகலில் வெல்லவ கினிகாராவ ரஜமஹா விகாரையில் உள்ள குளத்தில் தவறி விழுந்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 9 வயதுடைய பிக்கு ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவு வழங்கிக்கொண்டிருந்த போது குளத்தில் தவறி விழுந்துள்ள நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாணைகளை வெல்லவ பொலிஸார் […]