“மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே” – தம்பாட்டி கிராமிய கடற்றொழில் அபிவிருத்தி சங்கம்

ஒப்பந்த காலம் நிறைவடைந்து வெளியேறாமல், தம்பாட்டி கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் கட்டிடத்தில் இருந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் தனியார் நிறுவனத்தை உடனடியாக வெளியேறுமாறு கோரி தம்பாட்டி கிராமிய கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தினர், குறித்த கட்டிடத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, “தனியார் நிறுவனமே உடனடியாக வெளியேறு”, “எங்கள் வீட்டில் உங்கள் ஆட்சியா?”, “ஒப்பந்தகாலம் நிறைவடைந்தும் வெளியேறாமல் இருப்பது அராஜகமான செயற்பாடு”, “மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே”, “எமது கட்டிடம் […]

பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு கோரிக்கை

மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறைமையின் கீழ் விரைவில் நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும். பழைய முறைமையின் கீழ் அந்தத் தேர்தலை நடத்தலாம். அவ்வாறு இல்லையேல் தேர்தல் மேலும் இழுத்தடிக்கப்படக்கூடும். விரைவில் தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு ஐக்கிய […]

மருத்துவர்களுக்கு தன்னிச்சையான இடமாற்ற நடைமுறை; தொழிற்சங்க நடவடிக்கை?

மருத்துவர்களுக்கு அமல்படுத்தப்படும் தன்னிச்சையான இடமாற்ற நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை நாளை (31) தொடங்குவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. இந்த இடமாற்ற வழிமுறை இன்று (30) அமல்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் சேவைகளில் ஏற்படும் எந்தவொரு இடையூறுகளுக்கும் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்று GMOA வலியுறுத்தியது. தன்னிச்சையான இடமாற்றங்களைச் செயல்படுத்துவதற்கான சுகாதார அமைச்சின் முடிவை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட […]

நெடுஞ்சாலை பாதுகாப்பு; விசேட கலந்துரையாடல்

நாட்டின் அதிவேக நெடுஞ்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை “ரக்னா” லங்கா பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்க பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அண்மையில் சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் அதிவேக நெடுஞ்சாலையின் வலையமைப்பின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், தற்போதுள்ள பாதுகாப்பு கட்டமைப்பை மதிப்பிடுவதற்கும் “ரக்னா” லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் செயற்பாட்டு நிபுணத்துவத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை மதிப்பிடுவதற்கும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. ஓய்வுபெற்ற பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் […]

இஸ்ரேல் காசாவில் தாக்குதல்; 104 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 46 சிறுவர்கள், உட்பட 104 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன், 253 பேர் காயமடைந்துள்ளனர்., மருத்துவமனைகளில் போதிய மருந்து பொருள்களின் இருப்பு இல்லாதமையினால், பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. இஸ்ரேல் காசா இடையே கடந்த 10 ஆம் திகதி போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்று கொள்ளப்பட்டது. எனினும், போர் நிறுத்தத்தை ஹமாஸ் மீறியதாக தெரிவித்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 211 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். […]

அணு ஆயுத சோதனை வெற்றி -ரஷ்ய அதிபர் புடின்

அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது என அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்து உள்ளார். ரஷ்யா, உக்ரைன் – இடையிலான போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், அணுசக்தி ஏவுகணையான புரெவெஸ்ட்னிக் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிபர் […]

கனடாவில் உள்ள பஞ்சாபி பாடகர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

கனடாவில் உள்ள பஞ்சாபி பாடகர் சானி நாட்டனின் வீட்டின் மீது, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில், சமீப காலமாகவே சீக்கியர் மற்றும் இந்திய வம்சாவளியினர் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில், பாலிவுட் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் உணவகத்தில், நான்கு மாதத்தில் மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், பஞ்சாபி பாடகர் சானி நாட்டனின் வீட்டின் […]

யாழ்.நகர்ப்பகுதியில் போதைப்பொருளுடன் நால்வர் கைது

யாழ்ப்பாண நகர் பகுதியில் இன்றையதினம் நான்கு இளைஞர்கள் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து ஏழு போதை மாத்திரைகள் மற்றும் 90 மில்லிகிராம் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை […]

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்: வாக்குறுதியை நிறைவேற்றுவோம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக 1700 ரூபாவைப் பெற்றுக் கொடுப்பதற்கு தலையிடுவோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். ஆனால் சம்பளத்தை அதிகரிப்பதாக சட்ட ரீதியாக எம்மால் கூற முடியாது. வீதிக்கிறங்கி, உற்பத்திகளை குறைத்து, அசௌகரியங்களுக்கு மத்தியில் சம்பளத்தை அதிகரிக்க வேண்டிய நிலைமைக்கு தொழிலாளர்களை உள்ளாக்குவதற்கு நாம் தயாராக இல்லை என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார். அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் தேயிலை தொழில்துறை சார்ந்த தோட்டத் தொழிலாளர் தரப்பினரின் […]

மூன்று வாகனங்கள் மோதி விபத்து ; ஒருவர் பலி!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டாவை – எம்புல்தெனிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர். எம்புல்தெனிய நோக்கிப் பயணித்த கார், கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் கார் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் ஓட்டுநர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் கோட்டை – தலவதுகொட பகுதியை சேர்ந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சடலம் களுபோவில வைத்தியசாலையின் […]