Dude படம் 100 கோடியை கடந்து வசூல்

கடந்த 17ஆம் தேதி திரைக்கு வந்த Dude படம் சர்ச்சையில் சிக்கினாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. குறிப்பாக இப்படத்தை இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள். 5 நாட்களில் இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. லவ் டுடே, டிராகன் படங்களை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் மூன்றாவது திரைப்படமும் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் க்ளப்பில் இணைந்து சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த […]

அஜித்தின் 64வது படம்

குட் பேட் அக்லி திரைப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன்தான் அஜித்தின் 64வது படத்தையும் இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்றாலும், படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அறிவிப்பு எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் AK 64 படத்தின் […]

உலக பாரிசவாத தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்வு

உலக பாரிசவாத தினம் அக்டோபர் 29ஆம் திகதி அனுசரிக்கப்படும் நிலையில் இதனை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு கல்முனை பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது. நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. “ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியானது” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், […]

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட வழக்கு; டிசம்பரில் விசாரணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல்போனமை தொடர்பாக இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை டிசம்பர் 5ஆம் திகதி மீண்டும் விசாரணைக்குட்படுத்த கொழும்பு உயர் நீதிமன்றம் சட்ட மாஅதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை (30) மூன்று நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் உறுப்பினரான நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வில் மீதமுள்ள வெற்றிடமாக உள்ள பதவிகளுக்கு தற்போது வரை […]

பருத்தித்துறை நகரசபை நீதிமன்றம் செல்கிறது!

பருத்தித்துறை நகரசபையினாரால் பணியாளருக்கு வழங்கப்படவேண்டும் என்ற 40 வீத சம்பள அதிகரிப்புக்கு நிதியின்மை காரணமாக சபையால் நிதி வழங்க முடியாதுள்ளதனால் நீதிமன்றை நாடுவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு அதன் தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலமையில் இன்று(30) காலை 9:15 மணியளவில் ஆரம்பமானது. இதில் முதலாவதாக கடந்த கூட்ட அறிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட. நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதனையடுத்து, ஊழியர்களுக்கான 40 வீதமான கொடுப்பனவு அதிகரிப்பை வழங்கவேண்டும் என்று வழங்கப்பட்ட […]

போதைப் பொருள்களுக்கு எதிரான பொதுமக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி

போதைப் பொருள்களுக்கு எதிரான பரந்த பொதுமக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், நிச்சயமாக போதைப் பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, எதிர்கால சந்ததியினரையும் சமூகத்தையும் அதிலிருந்து மீட்டெடுப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (30) முற்பகல்நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரைப் பறித்து, […]

2 மில்லியன் ரூபா செலவில் பரந்தனில் கிராம சேவையாளர் கட்டிட தொகுதி!

2 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட பரந்தன் பொது நோக்கு மண்டபம் கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் இன்று(30) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், மாவட்ட அரசாங்கதிபர், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட பிரதேச மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது, போதைப்பொருளுக்கெதிராக சத்தியப்பிரமாணமும் செய்யப்பட்டது.

இலங்கையைச் சேர்ந்த பிக்குவுக்கு அவுஸ்திரேலியாவில் சிறை!

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண கோவிலின் தலைமை துறவியான 70 வயதான நாவோதுன்னே விஜிதா என்பவரே குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார். மெல்போர்ன் வசித்து வரும் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மெல்போர்ன் விகாரையில் ஆறு சிறுமிகளுக்கு எதிரான வரலாற்று பாலியல் குற்றங்களில் தேரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். 1994 மற்றும் 2002 […]

தமிழர் இனப்படுகொலைக்கு நீதி ; “செம்மணி உடனிருப்பு வேண்டுதல்” !

“செம்மணி உடனிருப்பு வேண்டுதல்” என்ற தொனிப்பொருளில் தமிழர் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி, தேசிய கிறிஸ்தவமன்ற ஆயர் பேரவையினரால் இன்றைய தினம் வியாழக்கிழமை (30) யாழ்ப்பாணம் வளைவுக்கு அருகில், அணையா தீபம் சுற்றுவட்டப் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த அடையாளப் போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களின் மறைமாவட்ட ஆயர்கள், அருட்சகோதரர்கள் என பல கத்தோலிக்க பிரமுகர்கள் பங்கெடுத்தனர். முன்னதாக அணையா தீப தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையினர் அங்கிருந்து ஊர்வலமாக, […]

தமிழ் வித்தியாலய காணியை அபகரிக்க முயலும் அரசியல்வாதியை கைது செய்!

நாவலப்பிட்டிய, தொலஸ்பாகை தமிழ் வித்தியாலயத்துக்கு சொந்தமான காணியை அபகரிக்க முற்படும் அரசியல்வாதியை உடனடியாக கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (30) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தொலஸ்பாகை நகரில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் இணைந்து பல மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தொலஸ்பாகை நகரில் இருந்து குறுந்துவத்த, கம்பளை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து நீண்டநேரம் தடைபட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருடன், குறுந்துவத்த பொலிஸார் கலந்துரையாடி, முறைப்பாடுகளை பதிவு செய்து கொண்டனர். முறைப்பாட்டுக்கு […]