புளியம்பொக்கணை கிராமத்திற்கு செல்கின்ற வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்

கிளிநொச்சி- புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து புளியம்பொக்கணை கிராமத்திற்கு செல்கின்ற வீதி புனரமைப்பு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிகழ்வு இன்று(30) கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. குறித்த வீதியானது 1.3 KM தூரம் கொண்ட காப்பற் வீதியாக புனரமைக்கப்படவுள்ளதுடன் 5.5 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவுள்ளது. வடமாகாணத்திற்கு குறித்தொதுக்கப்பட்ட நிதியில் குறித்த வீதி புனரமைக்கப்படவுள்ளது. குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர் கண்டாவளை பிரதேச செயலாளர் ,தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போதைப்பொருள் தகவல்; 1818 க்கு அழைக்கவும்

விஷ போதைப்பொருள் பற்றிய தகவல் வழங்குவதற்கான உடனடி 1818 என்ற தொலைபேசி இலக்கத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 24 மணி நேர ஹாட்லைனை அறிமுகப்படுத்தியுள்ளது

பெருந்தொகை சிவப்புநிற நண்டுகள் கரையொதுங்குகின்றன

திருகோணமலை உட்துறைமுக கடற்கரையில் பெருந்தொகையான சிவப்புநிற நண்டுகள் நேற்று புதன்கிழமை (29) முதல் கரை ஒதுங்கி வருகின்றன. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும் சில நண்டுகள் உயிருடனும் கரை ஒதுங்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள்

கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் சுமார் 2.37 பில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் நிதியுதவியுடன் வழங்கப்படும் புலமைப்பரிசில்கள் இன்று (30.10.2025) வழங்கப்பட்ட நிலையில், நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளாார். இந்திய அரசின் உதவியுடன், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு மொத்தம் ஒன்பது மில்லியன் ரூபா […]

இலங்கை மின்சார சபை பற்றிய விசாரணை…

இலங்கை மின்சார சபை தொடர்பான விசாரணையின் தொடர்ச்சியாக, இலங்கை மின்சார சபையின் பங்குகளை வைத்திருக்கும் ஒரு நிறுவனமான LTL ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் அண்மையில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவிற்கு அழைக்கப்பட்டன. அந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர தலைமையில் கடந்த 24ஆம் திகதி கூடியபோதே இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தன. இந்நாட்டில் மின்சாரத் துறையை விஸ்தரிப்பதற்குத் தேவையான மின்மாற்றிகளை (Transformers) உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்கும், 1980 ஆம் […]

வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர வதிவிடத்திற்கான அழைப்புகளை அனுப்பியது கனடா

2025 ஒக்டோபர் 27 ஆம் திகதி, கனடா அரசாங்கம் தனது Express Entry அமைப்பின் மாகாண நியமனத் திட்டம் (PNP) வழியாக 302 வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர வதிவிடத்திற்கான (PR) அழைப்புகளை அனுப்பியுள்ளது. இந்த அழைப்பு, draw number 374 என அழைக்கப்படுகிறது. இதில் குறைந்தபட்ச விரிவான தரவரிசை அமைப்பு (Comprehensive Ranking System) (CRS) மதிப்பெண் 761-ஆக இருந்தது, இது கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதியிலிருந்து 17 புள்ளிகள் குறைந்துள்ளது. இந்த PNP திட்டம், கனடாவின் […]

சனத்தொகை தரவுகள் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை தரவுகள் மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டம் மற்றும் இனத்தொகுதிக்கு ஏற்ப சனத்தொகையின் வீதாசாரப் பரம்பல் 2021 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட வித்தியாசத்தை காட்டுகின்றது. மாவட்டங்களின் படி சிங்களவர், இலங்கைத்தமிழர், இந்தியத்தமிழர்/ மலையகத்தமிழர், இலங்கைச் சோனகர்/ முஸ்லிம் மற்றும் ஏனையோர் என்ற பிரிவுகளில் இந்த தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

15 வயது சிறுமிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மூதூரில் கடந்த 2025.03.14 அன்று நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (30.10.2025) திருகோணமலை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான 15 வயது சிறுமி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி தன் பாட்டியையும் (அம்மம்மா) அவரது சகோதரியையும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி N. M. முகமட் அப்துல்லா, சிறுமியின் கல்வி கற்கும் உரிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிணையில் செல்ல உத்தரவிட்டார். நீதிமன்றம் […]

பைசன் படத்தின் சாதனை!

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் முக்கியமானவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கிய பைசன் படம் சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிலர் எதிர்மறையான விமர்சனங்களை வைத்தாலும், மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால், அமீர் ஆகியோர் நடித்திருந்தனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். முதல் நாளில் இருந்து பைசன் படத்தின் […]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து ஓய்வு?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 74 வயதிலும் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். அடுத்தடுத்து அவர் படங்கள் கமிட் ஆகி நடித்து வருகிறார். ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து அவர் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். கலகலப்பாக படம் எடுக்கும் இயக்குனர் உடன் ரஜினி கூட்டணி சேர்ந்து இருப்பதால் ரசிகர்களும் அந்த படத்தின் மீது அதிகம் எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். சுந்தர் சி படத்தை முடித்தபிறகு ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் உடன் கூட்டணி சேர்கிறார். ரஜினி […]