தேசிய வேலை திட்டம் – முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கான பயிற்சி செயலமர்வு
கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலை திட்டத்தின் கீழ் சுற்றுலாத் துறையில் பணிபுரியும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களின் நெறிமுறைகள் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காக மனப்பான்மை மேம்பாட்டுப் பயிற்சி கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையில் இடம் பெற்றது. சுற்றுலாப் பயணிகளுக்கு நட்பு மற்றும் பாதுகாப்பான சேவையை வழங்கும் நோக்கில், 2025 ஆம் ஆண்டில் முழு நாட்டையும் உள்ளடக்கிய மாகாண மட்டத்தில் தொடர்ச்சியான பயிற்சித் திட்டங்களை கிளீன் சிறிலங்கா செயலகம் ஏற்பாடு செய்துள்ளது. கிழக்கு மாகாண பயிற்சித் திட்டத் தொடரின் தொடக்க […]
மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நேற்றிரவு மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால், குறித்த வீதியூடான போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டிருந்ததாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் நுவரெலியா பொலிஸாரின் உதவியுடன் ஒரு மணி நேரத்தில் மரத்தை முழுமையாக வெட்டி அகற்றியுள்ளனர். வாகனங்களை பழமையான மரங்களுக்கு அடியில் நிறுத்த வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
கந்தளாயில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்
கந்தளாய் பிரதான வீதியில் உள்ள 91ஆம் கட்டைப் பகுதியில் மோட்டார்சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி மோதி நேர்ந்த விபத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று(28) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே பலத்த காயமடைந்துள்ளதுடன் அவர்கள் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டி சாரதியும் சிறு காயங்களுக்கு இலக்கானதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு
பொத்துவில்- கோமாரி களுகொள்ள பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பேருந்து தரிப்பு நிலையம் என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வை நேற்று (28) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். கோமாரி மக்கள் தமது குடிநீர் வசதிகளை செய்து தருமாறு இந்திய அரசிடம் கோரியதற்கு அமைய நீண்டகாலமாக குடிநீர் இன்றி பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் களுகொள்ள பிரதேசத்தில் சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டத்தின் கீழ் […]
எதிர்க்கட்சியினர் குறுகிய அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள் – சட்டத்தரணி ஹர்ஷன
நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது எதிர்க்கட்சியினர் குறுகிய அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள். பலவீனமான எதிர்க்கட்சியே இன்று உள்ளது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பிரித்தானியாவுக்கு சென்றுள்ள அமைச்சர்களான நளிந்த ஜயதிஸ்ஸ,சரோஜா சாவித்ரி போல்ராஜ் மற்றும் ஹர்ஷண நாணயக்கார ஆகியோர் லண்டன் நகரில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடிக்கு […]
தாயைக் கோடாரியால் வெட்டிக்கொன்றார் மகன்!
அனுராதபுரம், மதவாச்சி, இசென்பெஸ்கல பகுதியில் உள்ள வீடொன்றில் மகனின் கோடாரி தாக்குதலால் 81 வயதுடைய தாய் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த , 7 பிள்ளைகளின் தாயான 81 வயதுடைய பண்டாகே ஹின்னிஹாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தாயின் ஆறு பிள்ளைகளும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் அவர், 59 வயதுடைய தனது மகனின் வீட்டில் வசித்து வந்துள்ளார். மகன் தொடர்ந்து தாயைத் துன்புறுத்தி, பணம் கேட்டு தகராறு செய்துள்ளதுடன் நேற்று […]
பெண் சட்டத்தரணி கைது; செவ்வந்திக்கு உதவினார்!
கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்பாக இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இஷாராவிடம் பிஸ்டல் துப்பாக்கியை மறைக்க ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில், குறித்த சட்டத்தரணி கடவத்தை பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.