கிளிநொச்சியில் காணாமல்போன இளைஞர் சடலமாக மீட்பு

கிளிநொச்சியில் காணாமல்போன இளைஞர் ஒருவர் காட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யூனியன் குளத்தைச் சேர்ந்த அப்சரன் (வயது 26) எனும் இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேற்படி இளைஞர் கடந்த 24ஆம் திகதி வெளிநாட்டுக்குப் பயணமாக இருந்த நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்னர் கடந்த 19ஆம் திகதி முதல் காணாமல்போனார். இந்த நிலையில் இளைஞரின் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள காட்டினுள் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று அவர் கண்டுபிடிக்கப்பட்டார். இந்தச் […]

அணுக்கதிர் வீச்சு; உக்ரைனில் நீல நிறத்திற்கு மாறிய நாய்கள்!

உக்ரைனின் செர்னோபிலில் உள்ள நாய்கள் திடீரென நீலநிறமாக மாறியிருப்பது, விலங்கு பராமரிப்பு குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள செர்னோபில் நகரத்தின் அருகே அணுமின் நிலையம் செயல்பட்டு வந்தது. இதன் ஒரு அணு உலையில், 1986ல் விபத்து ஏற்பட்டது. உலகின் மிகவும் மோசமான அணு விபத்தாக கருதப்படும் இதைத் தொடர்ந்து, அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். விபத்துக்கு பின், அந்நகரத்தின் சுற்றுபுறங்களில் உள்ள பகுதி, செர்னோபில் விலக்கு மண்டலம் என […]

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

வவுனியா நகரப் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் நேற்று தெரிவித்தனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையில், தலைமைப் பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி றிஸ்னி தலைமையில் பொலிஸார் வவுனியா நகரப் பகுதியில் விசேட நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். இதன்போது, 15 கிராம் ஐஸ் போதைப் பொருளை உடமையில வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது […]

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, சப்ரகமுவ, மேல், தென், வடமத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் […]

அநுர அரசுக்கு எதிரான பேரணி; சஜித் அணி இல்லை?

எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள அநுர அரசுக்கு எதிரான பேரணியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்று அந்தக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சுஜீவ சேனசிங்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். எனினும், அநுர அரசின் ஒடுக்குமுறை மற்றும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக எதிரணிகளுடன் இணைந்து பயணிக்கக் கூடிய இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அநுர அரசின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் […]

இளைஞர்களுக்கு புனர்வாழ்வு…

போதைக்கு அடிமையான இளைஞர்களை நீதிமன்றம் அனுப்பாமல் அவர்களுக்கு பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு புனர்வாழ்வு அளிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பூநகரி மடத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட அமைச்சர் அங்குள்ள மக்களோடு கலந்துரையாடிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “உங்களுக்கு நிறைய பிரச்சனை உள்ளது. போதைப்பொருளுக்கு தீர்வு காண பொலிஸ் குழுக்களை நியமிப்போம். அதற்கான சுற்றுநிருபம் வந்துள்ளது. சுற்றிவளைப்பு செய்ய வேண்டுமாக இருந்தாலும் செய்வோம். […]

மிதக்கும் தளங்களுக்கு சூரியசக்தி மின் திட்டங்கள் தொழில்நுட்பம்!

கடலில் காற்றாலை, சூரியசக்தி மின் திட்டங்களை செயல்படுத்த தேவைப்படும் மிதக்கும் தளங்கள் அமைப்பதற்கான, கட்டுமான தொழில்நுட்பத்தை, சென்னையில் செயல்படும், மத்திய அரசின் எஸ்.இ.ஆர்.சி., எனப்படும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் உருவாக்கி உள்ளது. உலகம் முழுதும், சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மத்திய அரசு முடிவு நம் நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய அந்த வகை மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துமாறு, மாநில மின் வாரியங்கள், தனியார் நிறுவனங்களை மத்திய அரசு […]

போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறல்; காசா மீது உடனடி தாக்குதல்

ஹமாஸ் படையினரின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலுக்கு பதிலடியாக காசா மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். தெற்கு காசாவில் தங்கள் படைகள் மீது ஹமாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின் எதிரொலியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாதுகாப்பு ஆலோசனைகளைத் தொடர்ந்து, காசா பகுதியில் உடனடியாக பலத்த தாக்குதல்களை நடத்துமாறு பிரதமர் நெதன்யாகு இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார் என்று […]

வடமாகாணப் பாடசாலைகளிடையே விவாதச் சுற்றுப்போட்டி

தமிழறிஞரும் யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபருமாகிய க. சிவராமலிங்கம்பிள்ளையின் நூற்றாண்டையொட்டி வடமாகாணப் பாடசாலைகளிடையே விவாதச் சுற்றுப்போட்டி ஒன்றை யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தவுள்ளது. இப்போட்டியில் பங்குபற்றும் ஆர்வமுடைய பாடசாலைகள் போட்டியாளர், முழுப்பெயர், பொறுப்பாசியர் பெயர், தொலைபேசி இலக்கம் என்பவற்றைக் குறிப்பிட்டு தமது பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தலுடன் எதிர்வரும் 08.11.2025 இற்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக பொதுச் செயலாளர், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், இல 28, குமாரசாமி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்குமாறும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கச் செயலாளர் […]

தமிழகத்தில் நவம்பர் வரை மழை…

நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, சென்னை எண்ணுாரில், 13 செ.மீ., வரை மிக கனமழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, 16 இடங்களில் கனமழை பெய்துள்ளது. வங்க கடல் பகுதியில் உருவான, ‘மோந்தா’ புயல், நேற்று காலை தமிழக கடலோர பகுதிகளில் இருந்து விலகி, ஆந்திர கடலோர பகுதிக்கு நகர்ந்தது. இது, நேற்று காலை தீவிர புயலாக வலுவடைந்து, ஆந்திர மாநிலம் காக்கிநாடா நோக்கி நகர்ந்தது. மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் […]