சரிகிறது தங்க விலை

இலங்கையில் தங்கத்தின் விலை உடன் ஒப்பிடும்போது 2,000 ரூபாவினால் குறைந்துள்ளது. புதன்கிழமை(29)அன்று காலை நிலவரப்படி, செட்டி தெரு தங்க சந்தையில் 22 கரட் தங்கத்தின் ஒருபவுன் 294,000 ரூபாயாக இருந்தது, இது செவ்வாய்க்கிழமை (28) அன்று 296,000 ரூபாயாக இருந்தது. இதேபோல்,24 கரட் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை (28) அன்று 320,000 ரூபாயாக பதிவானதில் இருந்து 318,000 ரூபாய் ஆககுறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதியில் தீ

சம்மாந்துறை தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்கிழக்கு விஞ்ஞான பீடத்தின் மாணவர் விடுதியில் இன்று புதன்கிழமை (29) தீ விபத்து ஏற்பட்டிருந்தது. இந்த தீ விபத்து, மின் கசிவால் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணங்களினால் ஏற்பட்டதா? என விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த தீ விபத்தை கட்டுப்படுத்த அம்பாறை அக்கரைப்பற்று மற்றும் கல்முனை ஆகிய இடங்களிலிருந்து […]

விரைவில் நீதிமன்றங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டம் – பிரதம நீதியரசர்

இந்த காலாண்டுக்குள் குறைந்தபட்சம் 50 அல்லது 60 நீதிமன்றங்களை டிஜிட்டல் மாயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் வழக்கு தொடுப்பவர்களுக்கான செலவும் குறைவடையும் என பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தெரிவித்தார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தேசிய சட்ட மாநாடு கண்டியில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், இலங்கையில் ஒருசில நிறுவனங்கள் தற்போது பகுதியவில் டிஜிடல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, பதிவாளர் நாயகம் […]

ரஷ்யாவின் சுகோய் சூப்பர் ஜெட் விமானம் இந்தியாவில் தயாரிப்பு

இந்தியாவில் ரஷ்யாவின் சுகோய் சூப்பர் ஜெட் SJ-100 விமானங்களை தயாரிப்பதற்காக, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், ரஷ்யாவின் நிறுவனமான யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. சுகோய் சூப்பர் ஜெட் SJ 100 என்பது ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஒரு இரட்டை இன்ஜின் கொண்ட குறுகிய தூர பயணிகள் விமானம். இது முன்னர் ‘சுகோய் சூப்பர்ஜெட் 100’ (SSJ100) என அழைக்கப்பட்டது. இந்த ஜெட் விமானங்களில் 200க்கும் மேற்பட்டவை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு உலகளவில் 16க்கும் மேற்பட்ட வணிக […]

கொள்கலனில் சிக்கி தமிழ் இளைஞன் உயிரிழப்பு

சிலாபத்தில் கூரைத்தகடு தொழிற்சாலையில் பணியாற்றிய இளைஞன், கூரைத் தகடுகள் நிரப்பப்பட்ட கொள்கலனில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஆரச்சிகட்டுவ, அனவிலுண்தாவ பகுதியில் இந்த விபத்து நேற்று மதியம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தில் உடப்புவ பகுதியை சேர்ந்த காந்திபன் சஷிதரன் என்ற 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணி புரிந்தார். மூன்று இளைஞர்களுடன் இணைந்து கூரைத் தகடுகளை கொள்கலனில் ஏற்றி, மற்றுமொரு இடத்தில் இறக்கச் சென்றார். இதன்போது, ​​கொள்கலன் வாகனத்தின் ஓட்டுநர் பிரேக்கை அழுத்தியுள்ளதால் கூரைத் […]

சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. இங்கு அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கை. இந் நிலையில் இன்று அங்குள்ள மலுகு தீவுகளில் அமைந்துள்ள பாண்டா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.6 ஆக பதிவானது.

‘ பேஸ்புக்’ தகவல்கள் கசிவு; ஆஸ்திரேலியர்களுக்கு இழப்பீடு தருகிறது ‘மெட்டா’

பேஸ்புக்’ சமூக வலைதள பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கசியவிட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளான ‘ மெட்டா’ நிறுவனம், பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களுக்கு இழப்பீடாக 288 கோடி ரூபாய் வழங்க உள்ளது. இதற்காக, 3.11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2010ல் உலகம் முழுதும் 8.70 கோடிக்கும் மேற்பட்ட தனிமனிதர்களின் தரவுகளை, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ‘ கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா’ என்ற தகவல் பகுப்பாய்வு நிறுவனத்திற்கு பகிர்ந்ததாக சமூக வலைதளமான பேஸ்புக் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதை ஏற்று, மெட்டா நிறுவனம், […]

காசா அமைதி திட்டத்துக்கு 20 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்புகிறது பாகிஸ்தான்

இஸ்ரேலை இதுவரை முறைப்படி அங்கீகரிக்காத பாகிஸ்தான், அந்த நாட்டின் காசா அமைதி திட்டத்துக்கு உதவுவதற்கு, 20 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே இரண்டாண்டுகள் போர் நடந்து வந்தது. இப்போர் அமெரிக்காவின் 20 அம்ச அமைதி திட்ட முன்மொழிவின் கீழ், இம்மாதம் முதல் வாரத்தில் நிறுத்தப்பட்டது. அமெரிக்காவின் திட்டத்தின்படி, காசாவில் சர்வதேச நாடுகள் அடங்கிய அமைதிப் படை பாதுகாப்புப் பணியில் […]

பிரேசிலில் பொலிசுக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையில் தாக்குதல் – பொலிசார் உட்பட 64 உயிரிழப்பு

போதை கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிசார் நடத்திய சோதனையின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிசார் உட்பட 64 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டனர். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்தது. இதனை தடுக்க 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து பதிலுக்கு பிரேசில் பொலிசார் தாக்குதல் […]

கனமழையால் வெள்ளக்காடானது வியட்நாம்

வியட்நாமில் பெய்து வரும் கனமழையால் ஹியூ மற்றும் ஹோய் ஆன் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் சுற்றுலாத் தலங்கள் மூழ்கியுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின், மத்திய நகரமான ஹியூவில், 24 மணி நேரத்திற்குள் 108 செ.மீ., மழை பதிவானது. இது வியட்நாமில் இதுவரை பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானையும் விட்டு வைக்காத மோந்தா; 23 மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஹியூவின் […]