பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்கு பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம் நன்கொடை
இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம் மைக்கேல் கோர்ஸ் 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் இந்த செயலை ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) வரவேற்றுள்ளது. நீண்டகாலமாக செயற்பட்டு வரும் “பசிப்பிணி நீங்குதலை காண்போம்” பிரச்சாரத்தின் (Watch Hunger Stop campaign) மூலம் வழங்கப்படும் இந்த உதவியானது, உலக உணவுத் திட்டத்தின் உலக உணவு திட்டத்தின் பாடசாலை முதல் […]
அரச போக்குவரத்து சேவை திணைக்களம் ஆகும் பட்சத்தில் எதிர்பார்க்கும் சேவையை நடத்த தயார்
தமக்கான ஊதியத்தை குறித்த காலப்பகுதியில் மாதாந்தம் வழங்குவதுடன் அரச போக்குவரத்து சேவையை திணைக்களம் ஆகும் பட்சத்தில் அதிகாரிகள் கூறுவது போன்று இணைந்து சேவையை முன்னெடுக்க தாம் தயாராக இருப்பதாக இ.போ.சபையின் யாழ் பிராந்திய நேர கணிப்பாளர் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை (29) அன்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவின் பேருந்து நிலைய கள விஜயம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துக் கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் […]
போலி ஆவணங்களை தயாரித்த நபரை கைதுசெய்ய உதவி கோரல்!
போலி ஆவணங்களை தயாரித்து, 150 மில்லியன் ரூபா மதிப்புள்ள காணி ஒன்றை விற்பனை செய்ததாக கூறப்படும் பெண் ஒருவரை கைதுசெய்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். சந்தேக நபரான பெண் பொலிஸில் முன்னிலையாகாமல் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளதால் பொதுமக்களிடம் உதவி கோரி, பெண்ணின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 011 – […]
இலங்கையில் எவரும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிய அனுமதிக்க கூடாது – ஞானசார தேரர்
முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இலங்கையில் பொது இடங்களில் எவரும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவதற்கு அனுமதிக்க கூடாது. அவ்வாறு அனுமதியளித்தால் அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் அடிபணிய கூடாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு […]
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் பல தடைகள்?
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில், ஒரு நிலத்தை வாங்குவது மிகவும் கடினமாகவுள்ளது. 30 ஆண்டுகள், 50 ஆண்டுகள் அல்லது 70 ஆண்டுகளுக்கு அதை குத்தகைக்கு எடுப்பது தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் உள்ளன. ஜெர்மன் முதலீட்டாளர் ஒருவர் இலங்கையில் குத்ததைக்கு நிலத்தை பெற்று முதலீடு செய்யும்போது சங்கடப்படுகிறார். அதாவது தான் நிறைய பணம் முதலீடு செய்ய வேண்டும். இது ஜெர்மனியில் இருந்து வெகு தொலைவில் உள்ளது, அதை நான் எனக்கு சொந்தமில்லாத நிலத்தில் முதலீடு செய்யவேண்டுமா? என்று ஜேர்மன் முதலீட்டார்கள் […]
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 தொடர் இன்று ஆரம்பம்
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது கன்பெராவில் இன்று ஆரம்பிக்கின்றது. அடுத்தாண்டு உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள நிலையில் பலமான எதிரணியுடன் தம்மை பரிசோதித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக இத்தொடர் காணப்படுகின்றது. ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கிய நிலையில் இத்தொடரில் அவர் களமிறங்காமல் ஷிவம் டுபேயும் அணியில் இருக்கின்ற நிலையில் அவரின் இடத்தை ஹர்ஷித் ரானா எடுத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அக்ஸர் பட்டேல், வொஷிங்டன் சுந்தர், […]
இங்கிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து
இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த நியூசிலாந்து, ஹமில்டனில் புதன்கிழமை (29) நடைபெற்ற இரண்டாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்துள்ளது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமெனத் தெரிவித்தார். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஜேக்கப் டஃபி, ஸகரி போக்ஸ், பிளையர் டிக்னர் (4), நாதன் […]
சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி; தங்க பதக்கத்தை தந்தைக்கு அணிவித்த இலங்கை வீராங்கனை
இந்தியாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தெற்காசியாவின் வேகமான தடகள வீராங்கனையாக மகுடம் சூடிய சஃபியா யாமிக்கை வரவேற்கும் நிகழ்வு கண்டியின் கட்டுகெல்லேயில் நடைபெற்றது. தனது சொந்த ஊரான கண்டியின் கட்டுகெல்லேக்கு சஃபியாவை வரவேற்பதற்காக பிரதேசவாசிகளால் எளிமையான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த நிகழ்வில் கண்டி நகராட்சி ஆணையர் இந்திகா குமாரி அபேசிங்க மற்றும் பலர் கலந்து கொண்டதுடன் இதன்போது சஃபியா தனது தங்கப் பதக்கங்களை தனது தந்தை ஜே.எம். யாமிக், […]
இத்தாலியக் கால்பந்தாட்டத் தொடர் சமநிலையில் மிலன் – அத்லாண்டா
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், அத்லாண்டாவின் மைதானத்தில் இன்று புதன்கிழமை (29) நடைபெற்ற அவ்வணிக்கும் ஏ.சி மிலனுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை சாமுவேலே றிச்சி பெற்றதுடன், அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை அடெமோலா லுக்மன் பெற்றிருந்தார்.
3 சிப்பாய்கள் கைக்குண்டு வெடித்ததில் காயம்
கைக்குண்டு வெடித்ததில் மூன்று சிப்பாய்கள் காயமடைந்த சம்பவம் மாதுஓயாவில் இடம்பெற்றுள்ளது. மாதுஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே கைக்குண்டு வெடித்ததில் சிப்பாய்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.