மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான குண்டுகள்; கட்டுநாயகவில் மூவர் கைது

செட்டிகுளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான குண்டுகள் குறித்து பொலிஸா் விசாரணைகள் தொடங்கியதைத் தொடர்ந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று தமிழ் பிரஜைகள் இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டனர். இன்றுபுதன்கிழமை (29) அன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர், அவர்களை, விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் வவுனியா, செட்டிகுளம், காந்தி நகரில் வசிக்கும் 30 வயதுடையவர். மற்றை இருவரும் வவுனியா, செட்டிகுளம், […]

வடமேல் மாகாணசபை தொடர்பான கோபா குழு அறிக்கை

வடமேல் மாகாணசபை தொடர்பான 2023, 2024ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் கூடியபோதே இந்த விடயங்கள் தெரியவந்தன. வடமேல் மாகாணசபை மற்றும் குருநாகல் மாநகரசபை ஆகியன இணைந்து ஆறுமாடிக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக கேள்விப் பத்திரங்களைக் கோரி ஒப்பந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்ததுடன், இது தொடர்பில் காணப்படும் மேற்பார்வை நடவடிக்கைகள் காரணமாக […]

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின் கீழ் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கை, மேலும் விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக ஜனவரி 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான், புதன்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார்.

குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவுசார் விற்பனை நிலையங்களுக்கு சீல்

மன்னார் நகர சபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம்,வெதுப்பகம் உட்பட வர்த்தக நிலையம் ஒன்றுமாக இவ்வாரம் மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சபை எல்லைக்குள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் உணவகங்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கையின் போது பல்வேறு சுகாதார குறைபாடுகள் உள்ளடங்களாக மருத்துவ சான்றிதழ், உரிய அனுமதியின்றி இயங்கி வந்த வெதுப்பகம், உணவகம் மற்றும் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் உணவகங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக நகரசபைக்கு கிடைக்க […]

இரண்டு வழக்குகள்; எம்.பிக்கு பிடியாணை

இரண்டு வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய, தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று புதன்கிழமை (29) பிடியாணை பிறப்பித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பிலே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியுள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ​​சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அவர் சார்பாக நீதிமன்றத்தில் […]

முன்னணி நடிகை மீனா இரண்டாம் திருமணம்?

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகத் திகழும் 49 வயது மீனாவின் வாழ்க்கையைச் சுற்றி மீண்டும் ஒரு பரபரப்பான வதந்தி பரவுகிறது. ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, மீனா 45 வயது அமைச்சர் ஒருவரின் மகனைத் திருமணம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அமைச்சர் மகன் தனது முன்னாள் மனைவியை விவாகரத்து செய்தவர் எனவும், அவருக்கு 15 வயது மகள் ஒருவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வதந்திகளுக்கு மத்தியில், மீனாவின் தனிப்பட்ட வாழ்க்கை மீண்டும் ஊடக கவனத்தின் […]

ரவிமோகன் தயாரித்த ‘ப்ரோகோட்’ பட தலைப்புக்கு இடைக்கால தடை!

ரவிமோகன் தயாரித்து நடிக்கும் ‘ப்ரோகோட்’ படத்தின் தலைப்புக்கு புதுடெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நடிகர் ரவிமோகன் தனது பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் சார்பில் ‘டிக்கிலோனா’ பட இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் ‘ப்ரோகோட்’ படத்தை ரவிமோகன் தயாரித்து நடிக்கிறார். இதில் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன், கன்னட நடிகர் உபேந்திரா, கவுரி பிரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஐஸ்வர்யா ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்க […]

இனப்பிரச்சினைக்குதீர்வு காண பிரிட்டன் அழுத்தம்கொடுக்க வேண்டும்

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன சிக்கலானதும், சர்ச்சைக்குரியதுமான விடயங்களாகக் காணப்படுவதனால், அவை சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அரசாங்கம் தாமதித்துவருவதாக இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கிடம் சுட்டிக்காட்டியுள்ள சிவில் சமூகப்பிரதிநிதிகள், இருப்பினும் அந்நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு அரசாங்கத்தின்மீது பிரிட்டன் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகரகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் சிவில் சமூகத்தின் சார்பில் […]

ஆசிரிய இடமாற்றத்தில் முறைகேடு?

வட மாகாணம் கிளிநொச்சி வலயம் ஒன்றில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபராக அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட ஒருவருக்கு ஆசிரியர் இடமாற்ற பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவது, ஏற்கனவே அதிபர் பட்டியலில் உள்ளீர்க்கப்பட்ட ஒருவரை 2026 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் வகையில் வட மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இடமாற்றப்பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஆசிரியர் இடமாற்றத்திற்கு பெயர் பரிந்துரைக்கப்பட்ட அதிபர் இரண்டு வருடங்களுக்கு முன்பு அதிபராக கிளிநொச்சி […]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு; 23 உயிரிழப்புகள் பதிவு

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் இதுவரை 22 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்தியநிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். டெங்கு பரவல் தொடர்பில் நேற்று  செவ்வாய்க்கிழமை (28) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில், இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 41 […]