பொருளாதார வளர்ச்சி; காத்திருக்கும் பாரிய சவால்!

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வீதம் 8-9 சதவீதத்துக்குள் நிலையாக கொண்டு செல்ல முடியாவிட்டால் 2028ஆம் ஆண்டு கடனை மீள செலுத்துவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிவரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் நடத்திய ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர், “2028ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாம் சர்வதேச நாணய நிதியத்தில் பெற்றுக் கொண்ட கடனை செலுத்த ஆரம்பிக்க வேண்டும். எமக்கு கிடைக்கும் வருமானம் மட்டும் […]
கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் கவனம் எடுக்க வேண்டும் என கோரிக்கை

அடைமழை ஆரம்பித்து இருப்பதால் திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக வெருகல், ஈச்சிலம்பற்று, மூதூர், சம்பூர், கல்லடி, உப்பூறல், குச்சவெளி, புல்மோட்டை, திருகோணமலை 10ம் குறிச்சி, சல்லி ஆகிய கரையோர கடற்தொழிலாளர்கள் தமது தொழில்களை மேற்கொள்ள முடியாமல் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துவதில் பல கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சின்ன மோகன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வெளியிட்ட தனது ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அதில் மேலும், […]
லசந்த விக்ரமசேகர கொலை பின்னணியில் நெருங்கிய நண்பர்?

பூசா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மிதிகம ருவான் என்ற பாதாள உலகத் தலைவர் துபாயில் மறைந்திருக்கும் டுபாய் லொக்கா என்ற பாதாள உலகக் குற்றவாளிக்கு வழங்கிய ஒப்பந்தத்தின் பேரில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இரண்டு மில்லியன் ரூபாய் ஒப்பந்தப் பணம், டுபாயில் மறைந்திருக்கும் ‘ரன் பாட்டியா’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் இந்த கொலையை செய்த சந்தேநபருக்கு வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. வெலிகம பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தாரக நாணயக்காரவின் […]
3 மாத பெண் குழந்தை திடீர் மரணம்

பிறந்து 3 மாதங்களோயான பெண் குழந்தை ஒன்று இன்றையதினம் (29.10.2025) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை 23.07.2025 அன்று பிறந்துள்ளது. இன்றையதினம் தாயார் குறித்த குழந்தைக்கு பாலூட்டிய பின்னர் சிறிது நேரத்தில் மூக்காலும் வாயாலும் இரத்தம் வந்த நிலையில் குழந்தை மயங்கியது. பின்னர் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் சடலம் […]
பலாலியில் காணி விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் – பலாலிப் பிரதேசத்தில் உயர் பதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள காணிகளை அவற்றின் தனிப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு துரிதமாகக் கையளிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று நேற்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்றுள்ளது. பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உட்பட சிரேஷ்ட பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அதற்கமைய குறித்த […]
நாட்டில் இந்தளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் இதுவரை ஏற்படவில்லை

நாட்டில் இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நாட்டில் ஏற்படவில்லை. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிக்கு என்ன ஆனது? எங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டாலும் அது பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையது எனக் கூறி தப்பிக்க முற்பட வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் […]
இலங்கையின் சுபீட்சத்துக்கான கதவுகளை சீனா திறக்கும்

சீனாவின் நீண்டகால ஒத்துழைப்புப் பங்காளி என்ற ரீதியில், அடுத்த 5 வருடகாலத்தில் சீனா அடையவிருக்கும் வளர்ச்சியானது இலங்கையின் அபிவிருத்திக்கும், சுபீட்சத்துக்கும் அவசியமான வாய்ப்புக்களை வழங்கும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 15ஆவது தடவையாக நடைமுறைப்படுத்தப்படும் ஐந்தாட்டுத் திட்ட அமுலாக்கத்தை அடுத்து ‘புத்தாக்கம் பகிரப்பட்ட அபிவிருத்திக்கு வாய்ப்பளிக்கிறது’ எனும் தலைப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) கொழும்பிலுள்ள மரினோ ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே சீனத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் […]
ஒருநாள் சர்வதேசப் போட்டிக முதலாமிடத்தில் றோஹித் ஷர்மா

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் றோஹித் ஷர்மா முன்னேறியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது, மூன்றாவது போட்டிகளில் 73, 121 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே மூன்றாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார். இங்கிலாந்துக்கெதிரான முதலாவது போட்டியில் 78 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் டரைல் மிற்செல், ஆறாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது போட்டியில் 61 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் ஷ்ரேயாஸ் ஐயர், 10ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
பிரதேச செயலகங்களில் நலன்புரிப் பயனாளிகளின் பெயர்ப் பட்டியல்

‘அஸ்வெசும’ இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்றும், இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகளின் பெயர் பட்டியல் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இவ்வாறு ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, இதுவரை வங்கிக் கணக்கு திறக்காத பயனாளிகள், தமது பிரதேச செயலகத்திற்குச் சென்று வங்கிக் கணக்குகளைத் திறப்பது தொடர்பான கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் கடிதத்தை மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி அல்லது பிரதேச […]
’’முழு நாடுமே ஒன்றாக’’ நாளை தொடக்கம்!

தேசிய அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப் பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிக்கும் நோக்கத்துடன், “முழு நாடுமே ஒன்றாக” என்ற தலைப்பில் ஆரம்பிக்கப்படும். இந்த தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி நடைபெறும் என தேசிய செயற்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.