சூறாவளி முல்லைத்தீவிலிருந்து 600 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது!

மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வட மாகாணத்திலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். “மொன்தா” சூறாவளியானது இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்திற்கு மேலாக முல்லைத்தீவில் இருந்து சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருப்பதை இன்று காலை 2.30 மணியளவில் அவதானிக்கப்பட்டது. […]

இலங்கையில் மீண்டும் உயிராபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு பின்னர் வரலாற்றில் ஏற்பட்டுள்ள பயங்கர உயிராபத்தான சூழல் ஏற்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் நேற்று (2025.10.27) நடத்திய ‘மக்கள் குரல்’ என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவர் ஒரு குற்றவாளியாக தான் பார்க்கப்பட்டார்.குற்றம் நிரூபிக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் மரணத்தண்டனை விதிக்கப்பட முடியாது. அதற்கு ஜனாதிபதியின் […]

சுற்றுலா திட்டத்திற்கு எதிராக மனு?

LGBTQ சமூகத்தை உள்ளடக்கிய சுற்றுலா அபிவிருத்தி திட்டத்திற்கு அனுமதி வழங்குவதாகக் கூறப்படும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) தலைவரால் வெளியிடப்பட்ட கடிதத்தை செல்லாததாக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்களில், தேசபக்த தேசிய இயக்கத்தைச் சேர்ந்த கலாநிதி குண்டதாச அமரசேகர மற்றும் கலாநிதி வசந்த பண்டார ஆகியோர் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், SLTDA தலைவர் புத்திக ஹேவாவசம் மற்றும் அரசு சாரா நிறுவனமான ஈக்வல் கிரவுண்டின் நிர்வாக […]

பாதாள உலகக் குழுக்களுடன் காணப்படும் முரண்பாடுகளே எனது உயிர் அச்சுறுத்தலுக்கான காரணம்!

பாதாள உலகக் குழுக்களுடன் காணப்படும் முரண்பாடுகளே எனது உயிர் அச்சுறுத்தலுக்கான காரணம் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை அடிப்படையற்றதாகும். அவ்வாறு கூறி எனது நற்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தியுள்ள பொலிஸ் மா அதிபருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுகிறது […]

மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களை மக்கள் ஒரே நேரத்தில் தோற்கடிக்க முடியும் – அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க

மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களை மக்கள் ஒரே குழுவாக தோற்கடிக்க முடியும் என்பதால், எதிர்க்கட்சிகள் அணிசேர்வது சிறந்தது என்று தொழிலாளர் துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க நேற்று தெரிவித்தார். மக்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துடன் இருப்பதாகவும், அரசாங்கம் மக்களுடன் நிலையான முறையில் முன்னேறும் என்றும் அவர் ஊடகவியலாளர்களிடம் கூறினார். பல எதிர்க்கட்சிகளுடன் இணைந்து உருவாக்கப்பட்ட கூட்டு எதிர்க்கட்சி கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். “எதிர்க்கட்சி கூட்டணி குறித்து எங்களுக்கு […]

தென் பகுதியை கறைப்படிந்த பிரதேசமாகக் காட்டி வடக்கைப் பாதுகாக்கிறது அரசு!

வடக்கை பாதுகாக்கும் அரசாங்கம் தென் பகுதியை கறைப்படிந்த பிரதேசமாக காட்ட முயற்சிக்கிறது என முன்னாள் அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார். தென் பகுதிக்கு போதை பொருள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் என எல்லாவற்றையும் தொடர்புபடுத்தி கறைபடிந்த பிரதேசமாக்குகின்றனர். ஆனால் அனைத்தும் வடக்கில் தான் நடந்துள்ளது. பாதாள குழுவினர் வடக்கில் இருந்தே தப்பிச் சென்றுள்ளனர். இந்தியா, இந்தோநேசியா போன்ற நாடுகளுக்கும் வடக்கில் […]

மாவை சேனாதிராசாவின் ஜனன தினத்தை முன்னிட்டு மரநடுகை

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான மாவை சேனாதிராசாவின் 83 வது ஜனன தினத்தை முன்னிட்டு காங்கேசன்துறை தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளையினரால் மரநடுகை மேற்கொள்ளப்பட்டது. நேற்றையதினம்(27) நண்பகல் 12.00 மணியளவில் வலி வடக்கு தச்சன்காட்டு சந்திக்கு அண்மித்த பகுதியில் வீதியின் இருமருங்கிலும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. இந்த நிகழ்வில் வலி வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன், வலி வடக்கு தமிழரசுக் கட்சிசார் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.

யாழில் இலக்க தகடற்ற புதிய காரில் போதைப்பொருள்

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 11கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பிரபல வர்த்தகரின் மகன் எனவும் ஏற்கனவே ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டவரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கைதிலிருந்து தப்புவதற்காக தமக்கு கையூட்டு வழங்க முயற்சித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைதான சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் […]

புகையிரத சேவைகள் பாதிப்பு

வடக்கு புகையிரத மார்க்க புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. அம்பன்பொல மற்றும் கல்கமுவ புகையிர நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில், காட்டு யானையொன்று புகையிரதத்துடன் மோதியதன் காரணமாக இந்த சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவத்தால் புகையிரதத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வடக்கு மார்க்கத்தின் புகையிரத சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.