இலங்கை மத்திய வங்கிக்கு புதிய துணை ஆளுநர்கள் இருவர்

சந்திரநாத் அமரசேகர மற்றும் கே.ஜி.பி. சிறிகுமாரா ஆகியோரையே நிதி அமைச்சகம் துணை ஆளுநர்களாக நியமித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கிச் சட்ட விதிகளின்படி, மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமரசேகர இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மத்திய வங்கியில் பணியாற்றியுள்ளார், சிறிகுமார மத்திய வங்கியில் நாணய மேலாண்மை, பொதுக் கடன், வைப்புத்தொகை காப்பீடு, நிதித்துறை தீர்வு மற்றும் பெருநிறுவன சேவைகள் உள்ளிட்ட துறைகளில் 25 […]
சுன்னாகத்தில் தனிமையில் வசித்த பெண் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் ஆறுமுகம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்த வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த நடராஜா சந்திரா (வயது-70) என்பவராவார். சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று திங்கள் கிழமை (27) மாலை சம்பவ இடத்துக்கு சென்ற யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளுக்குத் தேவை – தலதா அத்துகோரல

சபாநாயகரின் செயற்பாடுகள் சண்டித்தனமானவை.பொலன்னறுவையில் உள்ள பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அழைத்து வந்து பாராளுமன்ற சமையலறையை துப்பரவு செய்கிறார்.கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமை காணப்படவில்லை. சபாநாயகரின் செயற்பாடுகள் பாராளுமன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளை அவமதிப்பதாகவுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரல தெரிவித்தார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (27) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மாறுப்பட்ட அரசியல் கொள்கை மற்றும் நிலைப்பாட்டை கொண்டுள்ள […]
ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை தேவையில்லாதது…
ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை தேவையில்லாதது. இதற்கு பதிலாக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ரஷ்ய அதிபர் புடினை அதிபர் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார். ரஷ்யா, உக்ரைன் – இடையிலான போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், அணுசக்தி ஏவுகணையான புரெவெஸ்ட்னிக் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக […]
அமெரிக்க போர் விமானமும் உலகுவானூர்த்தியும் விபத்து!
அமெரிக்காவும் சீனாவும் வர்த்தக போரில் ஈடுபட்டுள்ள சூழலில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸில் இருந்து புறப்பட்ட ஒரு போர் விமானமும் உலகுவானூர்த்தியும் தென் சீனக் கடலில் 30 நிமிட இடைவெளியில் விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்துக்குள்ளான எம்ஹெச்-60ஆர் சீ ஹாக் உலகுவானூர்த்தியின் மூன்று பணியாளர்களும், எஃப்/ஏ-18எஃப் சூப்பர் ஹார்னெட் போர் விமானத்தின் இரண்டு விமானிகளும் விபத்துக்கு முன் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இரண்டு விபத்துகளுக்கான காரணங்களும் விசாரிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க கடற்படை ஒரு அறிக்கையில் […]
உலகம் பயங்கரவாத அச்சுறுத்தலை சகித்துக் கொள்ளக்கூடாது!
” பயங்கரவாதம் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனை உலகம் சகித்துக் கொள்ளக்கூடாது,” என மலேசியாவில் நடக்கும் ஆசியான் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். மலேசியாவில் நடக்கும் ஆசியான் மாநாட்டில் இந்தியா சார்பில் கலந்து கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: எரிசக்தி வர்த்தகம் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக சந்தைகள் சிதைக்கப்படுகின்றன. கொள்கைகள் பாரபட்சமாக அமல்படுத்தப்படுகின்றன. கொள்கைகள் அனைத்தையும் அமல்படுத்த வேண்டியது இல்லை. புதிய சூழ்நிலைகளுக்கு உலகம் தவிர்க்க முடியாமல் எதிர்வினையாற்றுகிறது. […]
பிரிட்டனில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது
பிரிட்டனில் 20 வயது இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, 32 வயது நபரை போலீசார் கைது செய்தனர். பிரிட்டனின் வால்சலில் நேற்று மாலை 20 வயது இந்திய வம்சாவளி பெண்ணுக்கு, அங்கு வந்த ஒரு நபர் இன ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் போலீசிடம் புகார் அளித்த நிலையில் சந்தேகத்தின் பேரில் 32 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். வால்சால் காவல்துறையின் தலைமை கண்காணிப்பாளர் பில் டால்பி கூறுகையில், குட்டையான கூந்தல் […]
அதிகார பூர்வ கோப்பில் இருந்தது காணாமல் போன கடித விசாரணைகள் தீவிரம்

கொழும்பு நிலப் பதிவேட்டின் அதிகார பூர்வ கோப்பில் இருந்த ஒரு கடிதம் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். கொழும்பு நிலப் பதிவேட்டின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்த கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்ற அனுமதி கோரியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன கடிதம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், […]
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் கண்ணீர்மல்க மன்னிப்பு கோரினார் விஜய்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அவர்களிடம் விஜய் மன்னிப்பு கோரிஉள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். கரூர் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சி.பி.ஐ. விசாரணை […]
தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி ஓய்வு
தேசிய புலானய்வு பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார். நேற்றைய தினம் 60 வயது பூர்த்தியடைந்ததைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு பிரிவு பிரதானியாக தலைவராக பணியாற்றிய வனிகசூரிய ஓய்வு பெற்றுக்கொண்டார். இலங்கை இராணுவத்தின் முக்கிய பதவிகளை வகித்துள்ள மேஜர் ஜெனரல் வனிகசூரிய, கடந்த ஜனவரி மாதம் தேசிய புலனாய்வு பிரிவு பிரதானியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் நாட்டின் புலனாய்வு வலையமைப்பை வலுப்படுத்துவதிலும், பல்வேறு அரச மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்பை […]