உலக உணவுத் திட்டத்தின் வியூகம் – எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துடையாடல்

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியாகப் பதவியேற்ற பிலிப் வார்ட் மற்றும் பிரதி இயக்குநர் ரொபர்ட் ஒலிவர் ஆகிய இருவரும் நாளை திங்கட்கிழமை(27) பிரதமரின் அலுவலகத்தில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியை சந்தித்தனர். 1968ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வரும் உலக உணவுத் திட்டம் (WFP), இலங்கையில் உணவுப் பாதுகாப்பு, போசாக்குப் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் காலநிலைச் சவால்களை எதிர்கொள்ளும் சமூகங்களின் தாங்குதன்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஆதரவை வழங்கி வருகிறது. 2023 – 2027ஆம் ஆண்டுக்கான […]

சட்ட விரோத சொத்துச் சேர்ப்பு; வவுனியாவிலும் விசாரணை…

வவுனியாவில் சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய பொலிசாரின் விசேட பிரிவு ஒன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்த பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணத்தில் பலருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வவுனியாவிலும் மீற்றர் வட்டி மற்றும் போதைப் பொருள் விற்பனை, மக்களிடம் அதிகமான காசோலைகளை பெற்றுக் கொண்டு அதை அடிப்படையாகக் கொண்டு மிரட்டப்பட்டு சொத்துக்களை பெற்றமை, மோசடியான முறையில் […]

பருவகால அடைமழை; கரையோர மீனவர்களின் வாழ்வாதாரத்தில் அரசு கவனம் எடுக்க வேண்டும்

பருவகால அடைமழை ஆரம்பித்து இருப்பதால் திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக வெருகல், ஈச்சிலம்பற்று, மூதூர், சம்பூர், கல்லடி, உப்பூறல், குச்சவெளி, புல்மோட்டை, திருகோணமலை 10 ம் குறிச்சி, சல்லி ஆகிய கரையோர மீனவர்கள் தமது தொழில்களை மேற்கொள்ள முடியாமல் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துவதில் பல கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சின்ன மோகன் தனது ஊடக அறிக்கையில் இன்று செவ்வாய்க்கிழமை (28) இவ்வாறு தெரிவித்துள்ளார். இப்பிரதேசத்தை அண்டிய மீனவக்குடும்பங்களுக்கு அரசினால் […]

புதிய கப்பல் போக்குவரத்து தொடர்பில் கலந்துரையாடல்

தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையேயான புதிய கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதன் மூலம் இந்தியா-இலங்கை கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. மும்பையில் 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் போது துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சர்பானந்த சோனோவால் இடையேயான சந்திப்பின் போது இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த விடயம் தொடர்பில் இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து […]

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை

மதவாச்சி – இசின்பெஸ்ஸகம பகுதியில் வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (27) காலை பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் மதவாச்சி – இசின்பெஸ்ஸகம பகுதியைச் சேர்ந்த 81 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது மகனுடன், அவர் வீட்டில் வசித்துவந்த நிலையில், 26ஆம் திகதி இரவு அவரது தலையில் கோடரியால் தாக்கியதாக, ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் கைது […]

த.வெ.க தலைவர் விஜய் வழங்கிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி அனுப்பிய பெண்

கரூரில் த.வெ.க தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்வில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. இந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இதையடுத்து, நடிகரும் தவெக தலைவருமான விஜய் மிகுந்த வேதனையுடன், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கினார். சம்பவம் குறித்து விஜய் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்ததுடன், பலியான 41 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க முடிவு செய்தார். இந்த தொகை நேரடியாக வங்கி கணக்குகளுக்கு […]

நாட்டின் அபிவிருத்திக்காக ரணில் விக்ரமசிங்கவை பயன்படுத்த வேண்டும்

வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை மீட்டு, வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். அதனால் நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல முடியுமான பாதை அவருக்கே தெரியும். அதனால் நாட்டின் அபிவிருத்திக்காக ரணில் விக்ரமசிங்கவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு வங்குராேத்து அடைந்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பத்தில், […]

வழக்குக்காக விளையாட்டு துப்பாக்கியுடன் நீதிமன்றம் வந்த பெண் கைது

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு ஒன்றிற்காக விளையாட்டுத் துப்பாக்கியுடன் வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் நெடோல்பிட்டியவைச் சேர்ந்தவர். மேற்கூறிய நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு ஒன்றிற்காக நேற்று திங்கட்கிழமை (27) மதியம் அந்தப் பெண் வந்திருந்தார், மேலும் நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் கடமையில் இருந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரின் கைப்பைக்குள் இருந்து மேற்கூறிய விளையாட்டுத் துப்பாக்கியைக் கைப்பற்றினார். சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் கைது […]

மேலும் குறைந்தது தங்கத்தின் விலை!

இன்று (28) தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 322,000 ரூபாயாக பதிவாகி உள்ளது. அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாயாக குறைந்துள்ளதாகவுமு் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரங்களில் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 400,000கடந்த நிலையில் தற்போது சுமார் 80,000 வரை குறைந்துள்ளது. ​நான்கு இலட்சம் என்ற உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை, இனி பழைய நிலைக்கு திரும்பாது […]

இலங்கைக்கு கனடாவில் இருந்து வந்தவர் விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில், 180 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்திலிருந்து போதைப்பொருளை எடுத்துச் செல்ல முயன்றபோது, ​​சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதான கனேடிய பிரஜை என தெரியவந்துள்ளது. அவர் இன்று காலை டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. சந்தேக நபரின் பயணப்பெட்டியில் 6 பொலித்தீன் […]