கென்யாவில் சிறிய ரக விமான விபத்து; 12 பேர் பலி

கென்யாவின் கடலோர பகுதியான குவாலேயில் சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியதில் 12 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோரப் பகுதியான குவாலேயில் மசாய் மாரா தேசிய சரணாலயத்திற்கு சென்று கொண்டிருந்த போது சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த தேசிய சரணாலயம் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். டயானி விமான நிலையத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பாங்கான மற்றும் காட்டுப்பகுதியில் இந்த […]

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மேற்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவானது. இந்த நில அதிர்வால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பாலிகேசிர் மாகாணத்தில் உள்ள சிந்திர்கி நகரத்தின் மையத்தில் பூமிக்கு அடியில் 5.99 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவாகியது. இந்த நில அதிர்வால் கட்டடங்கள் குலுங்கின. இஸ்தான்புல், புர்சா, மனிசா, இஷ்மிர் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களிலும் இந்த நிலஅதிர்வானது உணரப்பட்டது. இதனால், […]

உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியம்…

உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது. இந்த ஸ்டேடியம் தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதனையடுத்து அடுத்த உலக கோப்பை தொடர் 2034-ல் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது பயன்படுத்தப்படும் 15 மைதானங்களில் சவுதி அரேபியாயில் உள்ள நியோம் மைதானமும் ஒன்றாகும். இது ஸ்கை […]

விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோகிபீடியா!

விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோகிபீடியா (GROKIPEDIA) எனும் வலைதளத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். தொழிலதிபரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், கடந்த செப்.,29ம் தேதி க்ரோகிபீடியா பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், விக்கிபீடியாவுக்கு போட்டியாக இன்று க்ரோகிபீடியா வலைதளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளார். விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள தகவல்களை மனிதர்களால் திருத்தம் செய்யவோ, மாற்றியமைக்கவோ முடியும். எனவே, அது சார்புடன் இருப்பதாக எலான் மஸ்க் உள்ளிட்டோர் விமர்சனம் செய்து வந்தனர். தற்போது, அதற்கு மாற்றாக, […]

பாதுகாப்பற்ற சிறுவர் சிறுமியர் தொடர்பில் ஸ்டிக்கர்!

‘சரோஜா’ என்ற தொனிப்பொருளில் பாதுகாப்பற்ற சிறுவர் சிறுமியர் தொடர்பில் முச்சக்கர வண்டி மற்றும் அரச தனியார் பேருந்துகளுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (28) நாடு பூராகவும் நடைபெற்றது.

ஷ்ரேயாஸ் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வெளியேறினார்!

இந்தியாவின் ஷ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலையானது தொடர்ந்தும் இக்கட்டாக உள்ளபோதும் உறுதியானதாகக் காணப்படுகின்றது. ஐயரை நெருக்கமாக அவதானிக்க அணி மருத்துவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நியமித்துள்ள நிலையில் ஐயர் தேறிவருவதாக நம்பப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து ஐயர் வெளியேறியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பிடியெடுப்பொன்றை மேற்கொள்ளும்போது சனிக்கிழமை (25) காயமடைந்த ஐயருக்கு மண்ணீரவில் கிழிவு ஏற்பட்டதாக ஸ்கான்கள் வெளிப்படுத்தியுள்ளன. ஐயர் ஆபத்தை தாண்டியுள்ளபோதும் பிடியெடுக்கும்போது மைதானத்தில் வீழ்ந்ததில் உடலினுள்ளே இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.

குறிஞ்சாக்கேணியில் பெகோ இயந்திரம் புரண்டு கடலில் சாய்ந்தது

பெக்கோ இயந்திரம் தடம்புரண்டு கடலில் குடைசாய்ந்த சம்பவம் கிண்ணியா குறிஞ்சாக்கேணியில், இன்று இடம் பெற்றுள்ளது. கிண்ணியா குறிஞ்சாக்கேணிக்கான புதிய படகு பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வின் போதே குறித்த சம்பவம் இடம் பெற்றது. பாதையை கடலுக்குள் இறக்க பெக்கோ இயந்திரம் ஊடாக முற்பட்ட வேலையில் குறித்த சம்பவம் இடம் பெற்றது. சம்பவத்தில் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார். படகு பாதை சேவையை பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இணைந்து ஆரம்பித்து வைத்தமையும் […]

ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்?

கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு இன்று அதிகாலை மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் சென்னை போயஸ் கார்டனில் அமைந்து உள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளிலும் மற்றும் கீழ்பாக்கத்தில் உள்ள மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. […]

‘இலத்திரனியல் விசா விநியோக விவகாரம் ஜனாதிபதிக்கு அக்கினிப் பரீட்சை’

சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று குறிப்பிடும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலத்திரனியல் விசா விநியோக விவகாரம் குறித்து தனது அரசியல் சகாவான டிரான் அலஸிற்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜனாதிபதிக்கு சவால் விடுக்கிறேன். ஜனாதிபதிக்கு இது அக்கினிப் பரீட்சை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை […]

கானாவில் தங்க மோசடி – ஹிஸ்புல்லா விளக்கம்

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, கானாவில் தங்க மோசடி முயற்சி தொடர்பாக அதிகாரிகளிடம் முறைப்பாடு அளித்ததை ஏற்றுக்கொண்டாலும், அந்த ஒப்பந்தத்தில் தான் ஏமாற்றப்படவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கானாவின் முக்கிய செய்தி நிறுவனம் உட்பட பல கானா ஊடகங்கள் , இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 2 மில்லியன் அமெரிக்க டொலர் தங்க மோசடியில் சிக்கியதாகக் கூறியதைத் தொடர்ந்து அவரது அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த மோசடியை திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 11 சந்தேக நபர்களுக்கு அக்ரா […]