நீர் மூலங்கள் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும்…

மழை காலத்தை தொடர்ந்து நீர் மூலங்கள் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நுளம்புகள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் டெங்கு, எலிக்காய்ச்சல், ஹெபடைடிஸ் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வேகமாகப் பரவக்கூடும் என்று உடல் நோய்களுக்கான நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். மழைக்காலம் பல தொற்று நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது, டெங்கு காய்ச்சல் ஒரு பெரும் ஆபத்தாக மாறியுள்ளது. வெள்ளம் மற்றும் நீர் தேங்கி நிற்கும் இடங்கள் நுளம்புகள் […]

நாளை ரணிலின் வழக்கு விசாரணை!

பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு நாளை (29.10.2025) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இங்கிலாந்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தனியார் பயணம் மேற்கொண்டு ஒன்றரை நாட்களுக்குள் 1.5 கோடி ரூபாய்க்கு மேல் அரசு பணத்தை வீணடித்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையான அன்று, நீதிமன்ற […]

நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்கள் தான் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள்

ஊழல் மோசடி உட்பட பல குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்கள் தான் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள். பாதாளக் குழுக்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தமது உண்மைகள் வெளிவரும் என்ற அச்சத்தில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்துள்ளார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். கொழும்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வழக்கு ஒன்றுக்காக முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஐக்கிய […]

புதிய தலைவர்

தேசிய புலனாய்வு பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் தனது கடமைகளை, இன்று பொறுப்பேற்றுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவிடம் இருந்து தமது நியமனக் கடிதத்தை மேஜர் ஜெனரல் நியங்கொட நேற்று பெற்றுக்கொண்டார்.

மன்னார் காற்றலை மின் உற்பத்தி ஆலை விவகாரம் – மக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்

மன்னார் காற்றலை மின் உற்பத்தி ஆலை விவகாரம் மக்களின் நலன்களுடன் அவர்களது கருத்துக்களுக்கும் முதன்மை கொடுக்கப்பட வேண்டும் என இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக் குரு கந்தையா ஜெகதாஸ் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். செம்மணி புதை குழி விவகாரம் மன்னார் மக்களின் காற்றாலை விடயங்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் நாமும் இருக்கின்றோம். அவர்களுக்காக தொடர்ந்தும் இருப்போம் என்பதற்காக இன்று யாழ்ப்பாணத்திலும் மன்னாருக்கும் சென்று மக்களுடன் போராடப்போகின்றோம் இதனை […]

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்!

இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்வதற்கு சுவிற்ஸர்லாந்து அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவேண்டும் எனவும் சுவிற்ஸர்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி அதன் மாநாட்டில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பான ‘இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள்’ எனும் அமைப்பினால் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு தொடர்பில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட சட்ட அறிக்கையில் உள்ள விடயங்களை அடிப்படையாகக்கொண்டு வரையப்பட்டிருக்கும் மேற்படி தீர்மானத்தில் […]

யாழ்.பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ்.பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் மாணவர் நலன்சார்ந்த பிரச்சினைகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்வு காணவேண்டும் என கோரியே இப்போராட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்விசாரா பணியாளர் வெற்றிடங்கள் 355 காணப்படுகின்றபொழுதிலும் 117 வெற்றிடங்களே நிர்வாகத்தினால் கோரப்பட்டுள்ளது. அத்துடன் பல்கலைக்கழக சுற்றுநிருபத்திற்கு முரணாக தனியார் நிறுவனங்களூடாகவும் ஊழியர்கள் உள்வாங்கப்பட்டு சேவை ஒப்பந்தத்தினூடாக நியமனம் செய்யப்படுவது தவறு எனவும் சுட்டிக்காட்டி போராட்டத்தில் […]

கரீபிய கடலில் உருவாகியுள்ள ‘மெலிஸா’ புயல்; பேரழிவை ஏற்படுத்தும்!

கரீபிய கடலில் உருவாகியுள்ள ‘மெலிஸா’ புயல் பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கரீபியன் நாடுகளான ஹைதி, டோமினிகன் குடியரசு மற்றும் ஜமைக்கா ஆகிய 3 நாடுகளை இலக்காக கொண்டு கடந்த சில நாட்களாக ‘மெலிஸா’ என பெயரிடப்பட்ட புயல் தாக்கி வருகிறது. இதனால், ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.இந்த புயல் இன்று இரவு(அக்., 28) ஜமைக்கா தீவில் கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 280 […]

இனங்களுக்கிடையிலான பிரச்சினை பற்றி அநுர அரசுக்கு ஒன்றும் தெரியாது!

நாட்டில் இருக்கும் இனங்களுக்கிடையிலான பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட தெரியாத இன்றைய அரசு தீர்வை தரும் என நம்புவது சாத்தியமற்ற ஒன்று என இலங்கை திருச்சபையின் யாழ்.குரு முதல்வர் செல்வன் தெரிவித்துள்ளார். செம்மணிப் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று (28) மெதடிஸ்த திருச்சபையினரால் செம்மணி அணையா தீபம் முற்றத்தில் அடையாளப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாார். அவர் மேலும் கூறுகையில், செம்மணி என்பது இனப்படுகொலை நடத்தப்பட்டதன் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு […]

பலத்த காற்று; அவசர அறிவிப்பு…

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (28) பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கும் இது நடைமுறைக்கு வரும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மொந்தா புயலால் இந்த பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, சில பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 […]