வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பிரதான துப்பாக்கிதாரி மஹரகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காற்றழுத்தத் தாழ்வு நிலை; பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 31 000ஆக உயர்வு!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 6 மணியுடனான கடந்த 6 மணித்தியாலங்களில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வலுவடைந்து ஆழ்கடல் காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு அதே பிராந்தியத்தில், திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 720 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, […]

கிராம மட்டத்திலிருந்து போதைப் பொருள் ஒழிப்புக்கு சகலரும் இணைய வேண்டும்

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு பொலிஸ் நடவடிக்கை மட்டும் போதாது என்று கூறிய அமைச்சர் விஜித ஹேரத், கிராம மட்டத்தில் உள்ள சமூகங்கள் போதைப்பொருள் விற்பனை மற்றும் நுகர்வைத் தடுக்க தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தில் நடைபெற்ற சிவில் சமூகத் தலைவர்களுடனான சமீபத்திய கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பணிப்பெண்களை தாக்கிய பயணி கைது

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சவுதி அரேபியா பிரஜை ஒருவர், விமான பணிப்பெண்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளதுடன் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து மலேசியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்துள்ளார். விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க தயாராகும் போது, விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளும் தங்களது இருக்கை பெல்ட்கள் அணிந்து தங்கள் இருக்கையில் அமர […]