புதையல் தோண்டிய மூவர் கைது

பொலன்னறுவை பிரதேச குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால், புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, தியபெதும பொலிஸ் பிரிவின் நுவரகேயாய பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து, புதையல் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றை தியபெதும பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபர்கள் 20, 22 மற்றும் 43 வயதுடைய புத்தளம் மற்றும் அத்தனகடவல பகுதிகளை சேர்ந்தவர்கள் […]

‘தேச ஒருமைப்பாடு – தேசிய இயக்கம்’ – போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார். குறித்த வேலைத்திட்டமானது, ‘தேச ஒருமைப்பாடு – தேசிய இயக்கம்’ என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ளதோடு அங்குரார்ப்பண நிகழ்வு காலை10மணிக்கு சுகததாச மைதானத்தில் நடைபெறவுள்ளது என்றும் அவர் அறிவித்துள்ளார். போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்த தேசிய சபை, மாவட்ட சபைகள், பிராந்திய சபைகள், மற்றும் பொதுப்பாதுகாப்புக் குழுக்கள் ஆகிய நான்கு முக்கிய துறைகள் ஒன்றிணைந்து ஆதரவளிக்கும் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு ஒன்றிணையவுள்ளதாகவும் அவர் […]

2026 முதற்காலாண்டில் தேர்தல்?

சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக எமக்கு தெரியவில்லை. தேர்தலை நடத்துவதற்குரிய சூழலை ஏற்படுத்திக்கொடுத்தால் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவறுகளினால் மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்படவில்லை. பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட புதிய தேர்தல் முறைமையினால் ஏற்பட்ட சட்ட சிக்கலினால் மாகாண சபைத் […]

வாகனேரியில் இரு கைக்குண்டுகள் மீட்பு!

வாழைச்சேனை பொலன்னறுவை பிரதான வீதியிலுள்ள வாகனேரி 125 வது மையில் கல் பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த இரு கைக்குண்டுகளை ஞாயிற்றுக்கிழமை (26) பிற்பகல் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை அரச புலனாய்வு துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய விசேட அதிரடிப்படையினருடன் அரச புலனாய்வு பிரிவினர் பொலிசாருடன் இணைந்து சம்பவதினடான நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) பிற்பகல் 2.50 மணியளவில் குறித்த இடத்தில் கைவிடப்பட்ட இரு கைக்குண்டுகளை […]

இ-வீசா சேவை வழங்குநர்கள் வரியை செலுத்த தவறிவிட்டனர்

இலத்திரனியல் வீசா (இ-வீசா) திட்டத்துடன் தொடர்புடைய சேவை வழங்குநர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செலுத்த வேண்டிய 1.4 மில்லியன் டொலருக்கும் அதிகமான வரிகளைச் செலுத்தத் தவறியுள்ளதாக இ-விசா ஒப்பந்தம் குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த அறிக்கைக்கமைய வி.எப்.எஸ். வேல்ட்வைட் ஹோல்டிங்ஸ் (VFS VF Worldwide Holdings Ltd) நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஜி.பி.எஸ். தொழிநுட்ப சேவைகள் மற்றும் ஐ.வி.எஸ். க்ளோபல் நிறுவனமானது, 2024 ஏப்ரல் – ஆகஸ்ட்டுக்கு இடையில் விசா விண்ணப்பதாரர்களிடமிருந்து 2.5 சதவீத […]

தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் திரு. லசந்த விக்ரமசேகரவின் இல்லத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். அன்னாரது இந்த கொலை தொடர்பில் பாக்கசார்பற்ற விசாரணையை முன்னெடுத்து, அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதியை நிலை நாட்ட வேண்டும் […]

தொடர்கிறது வளிமண்டலவியல் சீர்கேடுகள்!

வடக்கு, வடமத்திய, மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, சப்ரகமுவ, மேல், தென், வடமத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். பலத்த காற்றும் […]

வடகிழக்கு பருவமழை – இந்திய – இலங்கை படகு சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால் இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையேயான படகு சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் படகு சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டிருந்த பயணங்களை இரத்துச் செய்வதாக சுபம் படகு நிறுவனம் அறிவித்துள்ளது. நவம்பர் முதல் வருடாந்திர சேவைகளை இடைநிறுத்துவதற்கு முன்னர், 28 ஆம் திகதி வரை இயக்க நிறுவனம் திட்டமிட்டிருந்தது. படகின் இருக்கைத் திறனை […]

இலங்கையில் 12 வயதுக்குட்பட்டவர்கள் போன் பயன்படுத்த விரைவில் தடை

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலைக் குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா போல்ராஜ் அறிவித்தார். பாடசாலை சிறார்கள் கலந்து கொண்ட விழாவில் பேசிய அமைச்சர், 12 வயதுக்குட்பட்ட எந்தப் பிள்ளையும் மொபைல் போன் வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும் என்றார். இந்த நடவடிக்கை, குழந்தைகளை அதிகப்படியான திரை நேரத்திலிருந்தும், தீங்கு விளைவிக்கும் ஒன்லைன் உள்ளடக்கத்திற்கு ஆளாகாமல் பாதுகாப்பதையும், ஆரோக்கியமான குழந்தைப் […]

ஏறாவூரில் பெண் போதைப்பொருள் வியாபாரி கைது

ஏறாவூர் பிரதேசத்தில் போதை பொருள் வியாபார விற்பனை நிலையமாக செயற்பட்டுவந்த வீடு ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) முற்றுகையிட்ட பொலிசார் பெண் வியாபாரி ஒருவரை 5350 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 3 இலட்சத்து 61 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் நேற்று பிற்பகல் […]