போதைப்பொருள் கடத்தலுடன் ராஜபக்ச குடும்பத்திற்கு தொடர்பில்லை – அமைச்சர் சமல் ராஜபக்ச
இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதைப்பொருள் கடத்தலுடன் ராஜபக்ச குடும்பத்திற்கு தொடர்பில்லை என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்நிலையில் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்ட இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமையை வரவேற்பதாக அவர் பாராட்டியுள்ளார். ஆனாலும் தற்போது பரவி வரும் தகவல்களுக்கு அமைய ராஜபக்ச குடும்பத்தாருக்கும் இஷாரா செவ்வந்திக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஷாரா செவ்வந்தி குறித்து பொலிஸார் தீவிரமான மற்றும் முறையான விசாரணை […]
புயல் சூறாவளியாக வலு!
வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கூட்டுப் பிரச்சாரத்துக்கு எதிர்க்கட்சிகள் இணைவு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP), தேசிய சுதந்திர முன்னணி (NFF) மற்றும் பிற கட்சிகளை உள்ளடக்கிய கூட்டு எதிர்க்கட்சி, நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் இருந்து தொடங்கும் கூட்டுப் பிரச்சாரத்தை இன்று அறிவித்துள்ளது. அங்கு ஒரு மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லருக்கு எதிராக ஒன்றுபட்ட நட்பு நாடுகளைப் பின்பற்றுவதாகக் கட்சிகள் அறிவித்தன. நாடு முழுவதும் தொடர் பேரணிகளை […]
குடும்ப பெண் வெட்டிக் கொலை
காலியில் குடும்ப பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்தேகம, சந்தரவல பகுதியிலுள்ள இரண்டு மாடி கட்டடத்தின் மேல் தளத்தில் தனியாக தங்கியிருந்த பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டடத்தின் கீழ் மாடியில் அமைந்துள்ள மின் சாதனங்கள் பழுதுபார்க்கும் கடையின் உரிமையாளர் 119 என்ற அவர அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் […]
சீனா புதிய சாதனை; உலகின் வேகமான ரயில்
உலகின் அதிவேக புல்லட் ரயிலின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி சீனா புதிய சாதனை படைத்துள்ளது. மக்களின் தேவைகளுக்கு ஏற்ப உலக நாடுகள் தொழில்நுட்பத்தையும் வளர்த்து வருகின்றன. அதிலும் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான் உள்ளிட்டவை அதிவேக புல்லட் ரயில்களை இயக்கி வருகின்றன. ஜப்பானின் எல்.ஓ., சீரிஸ் மாக்லேவ் ரயில் மணிக்கு 603 கி.மீ., வேகத்தில் பயணித்து சாதனை படைத்திருந்தது. அதனை முறியடிக்கும் வகையில், மணிக்கு 896 கி.மீ., வேகத்தில் இயங்கக்கூடிய […]
ஜப்பானின் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தைச் சென்றடைந்தது!
சர்வதேச விண்வெளி மையத்துக்கு தேவையான பொருட்களுடன், ஜப்பான் ஏவிய எச்.டி.வி., – எக்ஸ் 1 விண்கலம் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. ஆசிய நாடான ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின், எச்.டி.வி., – எக்ஸ் 1 வகை விண்கலம் நவீன தொழில்நுட்பத்துடன் 2009ல் உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம், எச்3 என்ற சக்திவாய்ந்த ராக்கெட் மூலம், ஜப்பானில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 14 நிமிடங்களுக்குப் பின் அது திட்டமிட்ட வட்டப்பாதையை […]
உக்ரைன் தலைநகரில் ரஷ்யா தாக்குதல்!
உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா பெரும் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், ட்ரோன்கள் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளில் விழுந்து, அங்கு தீ விபத்து ஏற்பட்டது. ஹெலிக்கொப்டர்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் காயமடைந்த மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இந்த தாக்குதலில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 […]
அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளவர்களின் விபரம் சேகரிப்பு!
பிரதேச சபைகள் உட்பட உள்ளூராட்சி மன்றத் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பாக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸ்மா அதிபர் கவனம் செலுத்தியுள்ளார். இதன் முதற்கட்டமாக, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள உள்ளூராட்சி மன்றத் தலைவர்களின் பட்டியலை உளவுத்துறையினரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதேச சபையின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அத்துடன், பாதாள உலகக் குழுக்களிடமிருந்தோ அல்லது வேறு ஏதேனும் குழுக்களிடமிருந்தோ மரண அச்சுறுத்தல் அல்லது வேறு ஏதேனும் அச்சுறுத்தல்கள் இருந்தால் உடனடியாக அறிவிக்குமாறு உள்ளூராட்சி மன்றத் தலைவர்களுக்கு […]
அரசாங்கத்தினால் நாமல் உயிருக்கு ஆபத்து
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உயிருக்கு இந்த அரசாங்கத்தினால் ஆபத்து ஏற்படுவதற்கான திட்டம் உள்ளது என்று கடுமையான சந்தேகம் தனக்கு இருப்பதாக வழக்கறிஞர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்களில் நடக்கும் நிகழ்வுகளுடன் இந்த சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இளம் தலைவரான நாமல் ராஜபக்ச எதிர்காலத்தில் ஒரு சவாலாக இருப்பதால், அவரது வாழ்க்கை குறித்து இப்போது அவருக்கு கடுமையான கேள்விகள் இருப்பதாக […]
சட்டவிரோத சொத்துச் சேகரிப்பு: யாழில் 11 பேருக்கு எதிரான விசாரணை தீவிரம்
வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றில் ஈடுபட்டு, சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் சொத்துச் சேர்த்த சந்தேகத்தில் 11 பேருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ்.ஜெயமஹா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, “போதைப்பொருள் கடத்தல், வன்முறைகள், வட்டிக்கு விடுதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்தவர்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் அண்மைக்காலமாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை 11 பேர் இந்த […]