சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் – உலக வங்கி
அஸ்வெசும சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சர்வதேச அனுபவத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கியின் […]
யாழ்.பிரதேச செயலகத்திற்கு புதிய செயலாளர்
யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட சிவகாமி உமாகாந்தன் இன்றையதினம் (27.10.2025) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார். இவர் 2019.4.12 -2025.10.24 வரை கடந்த ஆறு வருட காலமாக கரவெட்டியில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றி இன்றையதினம் (27.10.2025) யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இராணுவ பேருந்து விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தானது நேற்று(26) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெல்லவாய நோக்கிச் சென்ற இராணுவப் பேருந்து, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய வெல்லவாயவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்
கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உபஅதிபர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய அதிபர் ஓய்வு வயதையும் தாண்டி கடமையாற்றுகின்ற நிலையில் துடிப்புடன் செயற்பட்ட எமது உபஅதிபர் இடமாற்றம் செய்யப்பட்டமையானது. மாணவர்களின் நலன் பாதிக்கும் என்றும் இடமாற்றத்தை இரத்து செய்ய வலியுறுத்தி குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சந்தேக நபரை பகிரங்கமாக விசாரித்ததற்காக பொலிஸார் மீது கடும் விமர்சனம்
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பகிரங்கமாக விசாரித்ததற்காக பொலிஸாரின் சமீபத்திய நடவடிக்கைகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் விமர்சித்துள்ளார். சந்தேக நபர் கைது செய்யப்பட்ட உடனேயே பொலிஸ் அதிகாரிகள் அவரை விசாரிப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கைதுகள் மற்றும் குற்றவியல் விசாரணைகள் சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் […]
கடலில் மாற்றம்; கரையை நோக்கி படையெடுக்கும் நண்டுகள்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் சிலபகுதிகளில் உள்ளகடல் பகுதியில் நண்டுகள் கரையொதுங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட சில கடற்பகுதிகளில் இவ்வாறு நண்டுகள் கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓந்தாச்சிமடம்,களுவாஞ்சிகுடி,களுதாவளை,தேற்றாத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள கடற்பகுதிகளில் இவ்வாறான நண்டுகள் கரையொதுங்கிவருகின்றன. சிவப்பு நிறத்திலான சிறியஅளவிலான நண்டுகளே இவ்வாறு கரையொதுங்கி வருவதாகவும் காலநிலை மாற்றங்களினால் இவ்வாறு நண்டுகள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர். சில காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறும் எனவும் கடலில் ஏற்படும் மாற்றங்களினால் இவ்வாறு […]
தெற்காசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கைக்கு இரண்டாம் இடம்
இந்தியாவின் ரான்ச்சியில் நேற்றைய தினம் நிறைவடைந்த தெற்காசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. பல போட்டிகளில் இலங்கை இந்தியாவிற்கு கடும் சவால் விடுத்து வெற்றிகளை ஈட்டிக் கொண்டது. இந்த போட்டி தொடரில் இலங்கை அணி 16 தங்கம் 14 வெள்ளி 10 வெண்கலம் உள்டங்களாக 40 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது. இதேவேளை, 20 தங்கம் 20 வெள்ளி 18 வெண்கலம் என்ற அடிப்படையில் இந்தியா முதல் இடத்தை […]
தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச கூடைப்பந்தாட்டப் போட்டிக்கு மட்டு சென்.மைக்கல்
தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்காக மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட கூடைப்பந்தாட்ட அணியானது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை பயணமாகினர். தாய்லாந்தில் இலங்கை, பூட்டான், மாலைதீவு, தாய்லாந்து ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்குபற்றும் இந்த சர்வதேச கூடைபந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெறவுள்ளது. இந்த சுற்றுப் போட்டியில் இலங்கையில் இருந்து மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரி அணியும் கொழும்பு ஆனந்தா கல்லூரி அணி […]
களுத்துறை பொலிஸ் பாதாள குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது?
களுத்துறை தெற்கு முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி பாதாள உலக குழுவினருக்கு பொலிஸ் துப்பாக்கியை வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி களுத்துறை தெற்கு பகுதியில் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்துக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. அன்றைய தினமே களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பில் கிடைபெற்ற தகவல்களின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் விசாரணையை மேற்கொண்டனர். ஆயுதங்களுடன் பாதாள குழுவை சேர்ந்த ‘ஜப்பனா’ என்பவர் கைது செய்யப்பட்டார்.இவரிடம் […]
விகாரைக்கு சொந்தமான காணி குத்தகையில் மோசடி – ஜனாதிபதி செயலகம் மீது குற்றச்சாட்டு
தம்புள்ள ராஜமஹா விகாரைக்கு சொந்தமான காணிகள், அபிவிருத்தி என்ற பெயரில் கொள்ளையிடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் தலையீட்டில் இவ்வாறு கொள்ளை இடப்படுவதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. விகாரையின் பொறுப்பாளராக செயல்பட்டு வரும் தண்டுபந்திருப்பே மஹிந்த தேரர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி அவர் இந்த தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளார். தம்புள்ள விகாரைக்கு சொந்தமான காணிகள் முதலில் தம்புள்ள நகரின் அபிவிருத்திக்காக கையளிக்கப்பட்டதாகவும் தற்பொழுது அந்த காணிகள் குத்தகைக்கு விடப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். […]