ஐசிங் கேக்கில் இறந்த பல்லி
பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற ஐசிங் கேக்கில் இறந்த பல்லி ஒன்று இருந்தமையை கண்டு அதிர்ச்சி அடைந்த இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், மஸ்கெலியா ப்ரௌன்லோ தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) பிறந்த நாள் கொண்டாடுவதற்காக, மஸ்கெலியா நகரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றிலிருந்து ஐசிங் கேக் ஒன்றை வாங்கி சென்றுள்ளனர். அந்த பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டப்பட்டு, அனைவருக்கும் ஊட்டப்பட்டுள்ளது. அதன்பின்னர் மீதமிருந்த கேக்கை பார்த்தபோது, அதில் […]
பாதுகாப்பான படகு பாதை பயணம் குறிஞ்சாக்கேணியில் ஆரம்பம்
கிண்ணியா மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு மிகவும் அவசியமான தேவையாக இருந்த, குறிஞ்சாக்கேணி கடல் நீர்ப்பரப்பில் பயணிப்பதற்கான படகுப்பாதையான “கங்கை” என்ற பெயரிடப்பட்ட பாரிய படகு பாதையின் பயணம்,பிரதி அமைச்சர்அருண் ஹேமச்சந்ராவால் இன்று திங்கட்கிழமை (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2021 நவம்பரில்பாடசாலை மாணவர்கள் உட்பட எட்டு விலைமதிப்பற்ற உயிர்களை காவு கொண்ட துயரமான கிண்ணியா படகு விபத்துக்குப்பின்னர் தற்போது இப்படகு பாதை சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ள “கங்கை” என்ற இப்புதிய […]
இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு
வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் மொன்தா புயல், அதன் கிழக்கு கடற்கரையில் பலத்த காற்று மற்றும் மழையை ஏற்படுத்தவுள்ள நிலையில், திங்கட்கிழமை (27) இந்தியா 50,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு ஆந்திரா மற்றும் கிழக்கு மாநிலமான ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் அவசரகால ஊழியர்களுக்கான விடுமுறைகளை அதிகாரிகள் இரத்து செய்து, பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டனர். இந்த புயல் செவ்வாய்க்கிழமைக்குள் கடும் புயலாக மாறி, பின்னர் ஆந்திரப் பிரதேசத்தின் கரையைக் […]
உலகில் சிறந்த 25 நகரங்களில் யாழ்ப்பாணமும்…
2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண வெளியீட்டாளரான லோன்லி பிளானட்டால் இது பெயரிடப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் இலங்கைக்கு ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்த ஒரு இடமாக அதன் சர்வதேச ஈர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. யாழ்ப்பாணத்தைத் தேர்ந்தெடுத்தது, நகரத்தின் கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது மற்றும் சுற்றுலாவில் பிராந்திய பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளை பிரதிபலிக்கிறது. லோன்லி பிளானட்டின் சிறந்த […]
15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்!
மொனராகலையில் பிபில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அந்த சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர். மெதகம பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவரே பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார். இந்த சிறுமி கடந்த 19 ஆம் திகதி இரவு வீட்டிற்குள் வைத்து தனது தாயின் இரண்டாவது கணவனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார். இதனையடுத்து இந்த சிறுமி இது […]
சாவகச்சேரியில் குமாரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு மீண்டும் நினைவுத் தூபி
சாவகச்சேரியில் வீதியோரத்தில் இருந்த நிலையில் இடித்தழிக்கப்பட்ட குமாரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபியை மீளவும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிஷோர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வீதியில் இருந்து 4 அடிகள் தூரத்திலும், தனியார் காணியின் எல்லைக்கு வெளியே குமாரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபி இருந்தது. தனது காணியை பிரித்து விற்பனை செய்யும்போது அந்த இடத்தில் வாசல் வரும் என்ற காரணத்திற்காக சுயநலநோக்குடனே இந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டது. குமாரப்பா […]
எதிர்காலத்தில் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்குரிமை?
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொதுநிர்வாக அமைச்சின் கீழ் ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருவதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40வது வருட நிறைவை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (27) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் அனைவருக்கும் வாக்களிக்க தேவையான வசதிகளை வழங்கவும், தேவையான சட்ட நிலைமைகளை உருவாக்கவும் […]
இலங்கை சமூகத்தினரை இங்கிலாந்தில் சந்தித்த இலங்கை அமைச்சர்கள்!
ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் அறக்கட்டளையின் அழைப்பின் பேரில், இலங்கையின் சுகாதார, ஊடக மற்றும் அஞ்சல் சேவைகள் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ், மற்றும் நீதித்துறை அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார ஆகியோர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னருடன் இணைந்து இந்த பயணத்தில் பங்கேற்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) பிற்பகலில் லண்டனில் வந்தடைந்தவுடன், அவர்களின் முதல் உத்தியோகபூர்வ நிகழ்வாக லண்டன் ஆல்பர்டன் பாடசாலை அரங்கில் கூடிருந்த இலங்கை சமூகத்தினரைச் சந்தித்தனர். ஐக்கிய […]
15 மாதங்களாக ஊதியம் இல்லை ; புல்மோட்டை பணியாளர்கள் பேராட்டம்
திருகோணமலை புல்மோட்டை கணிய மணல் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என கோரி தொடர்ச்சியாக இன்று (27) திங்கட் கிழமை 14 ஆவது நாளாகவும் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் பெரிதும் பொருளாதார ரீதியாக தங்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டும் பாடசாலை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் உரிய துறை சார் அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித தீர்வும் […]
ஆசிய இளையோர் விளையாட்டு; காயாவுக்கு வெண்கலப் பதக்கம்
ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில், கோல்வ் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கையின் காயா தலுவத்த திங்கட்கிழமை (27) காலை நாடு திரும்பினார். பஹ்ரெய்னில் நடைபெற்றுவரும் 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில், கொல்வ் போட்டிகள் அக்டோபர் 23ஆம் திகதி ஆரம்பமாகி 25ஆம் திகதி நிறைவுபெற்றது. இரண்டு சுற்றுகளைக் கொண்ட பெண்களுக்கான தனிநபர் கோல்வ் போட்டியை 133 நகர்வுகளில் நிறைவு செய்த காயா தலுவத்த 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். […]