மைத்திரிபால சிறிசேனவின்மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனுவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (27) உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த எச்சரிக்கையை புறக்கணித்து அதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அருட்தந்தை சிறில் காமினி மற்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்ஆகியோரால் கோட்டை நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட மனு […]
மேல் மாகாண திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை பார்வையிட்டார் பிரதமர்
மேல் மாகாணத்தின் திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக களனி மற்றும் புத்தளம் அருவக்காடு பிரதேசங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தைப் பார்வையிட, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுண ஆராச்சி, அசித நிரோஷன், அருண பனாகொட, தேவானந்த சுரவீர, அஜித் கிஹான், ஹிருணி விஜேசிங்க, கயான் ஜானக, […]
மட்டு குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!
மட்டக்களப்பு – குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் தொடர்புடைய அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றிற்கு ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் வழக்கானது எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் எடுத்துகொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான எஸ்.எச்.எம்.மனாறுதீன், முபாறக் முஅஸ்ஸம் உட்பட சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர். குருக்கள்மடம் புதைகுழி […]
யாழ்.பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் புலமைத்துவக் கலந்துரையாடல்!
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் அரசகரும மொழிகள் திணைக்களமும் இணைந்து நடத்திய புலமைத்துவக் கலந்துரையாடலின் முதலாவது நிகழ்வு கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தகைசார் விருந்தினர்களாக யாழ். மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன் அரசகரும மொழிகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் திலக் நந்தன கெட்டியாராய்ச்சி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ்ச் சங்க […]
வன்னியில் உள்ள குறைபாடுகள் பற்றிய கலந்துரையாடல்
வடக்கு மாகாண உள்ளூராட்சியின் அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் இன்று திங்கட்கிழமை (27) சத்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வன்னியில் உள்ள குறைபாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. குறிப்பாக உள்ளூராட்சி சபைகளுக்கு கனகரக இயந்திரங்களின் தேவைப்பாடு, பிரதேச சபை ஊழியர்களுக்குரிய மின்னிணைப்புப் […]
பூஸா அதிஉயர் சிறைச்சாலையில் விசேட சோதனை!
பூஸா அதிஉயர் சிறைச்சாலையில் இன்று திங்கட்கிழமை (27) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 14 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பூஸா அதிஉயர் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 10 நவீன கையடக்கத் தொலைபேசிகளும் 4 சாதாரண கையடக்கத் தொலைபேசிகளுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க சீன வர்த்தகப் போரில் தளர்வு?
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில், அமெரிக்காவும் சீனாவும் உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவி வந்த வர்த்தகப் போரில் தளர்வு நிலை எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க திறைசேரியின் செயலாளரும் சீனாவின் உத்தியோகபூர்வ அறிக்கையும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. ரிக்ரொக் செயலியின் அமெரிக்க செயல்பாடுகள் குறித்த இறுதி ஒப்பந்தம் மற்றும் சீனாவின் அரிய மண் தாதுக்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பான விடயங்களும் இதில் உள்ளடங்குவதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இந்த உடன்பாடு குறித்து […]
ஏற்றுமதி அபிவிருத்தி வலயங்களில் கஞ்சா பயிர்ச்செய்கையைக்கு ஆர்வம்!
இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி வலயங்களில் கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாக முதலீட்டு அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஹொங்கொங் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களே பெருமளவில் கஞ்சாப் பயிர்ச் செய்கை தொடர்பில் ஆர்வம் கொண்டுள்ளனர். அதேபோன்று உள்ளூர் முதலீட்டாளர்கள் பலரும் கஞ்சா பயிர்ச்செய்கை தொடர்பில் முதலீடுகளை மேற்கொள்ள விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். […]
கடலில் நோய்வாய்ப்பட்ட கப்பல் பணியாளர் தரையிறக்கப்பட்டார்!
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், திருகோணமலைப் பகுதிக்கு அப்பால் கிழக்குக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த MV IYO என்ற சரக்குக் கப்பலின் மிகவும் நோய்வாய்ப்பட்ட பணியாளர் ஒருவர், இலங்கை கடற்படையின் உதவியுடன் அவசரமாக கரைக்குக் கொண்டுவரப்பட்டு, சிகிச்சைக்காக ஞாயிற்றுக்கிழமை (26) திருகோணமலை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிங்கப்பூரிலிருந்து இந்தியாவின் சென்னைக்கு பயணித்த பெனமா கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலான MV IYO-வில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு […]
அலுவலகம் மூடப்படுவதற்கு எதிர்ப்பு!
ஹட்டன் பிளாண்டேஷன் நிர்வாகத்திற்கு உட்பட்ட தங்கக்கலை தோட்ட அலுவலகம் மூடப்பட்டு ஊவாக்கலை தோட்டத்திற்கு மாற்றப்படுவது தொடர்பாக தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை (27) காலை முதல் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேம்பிரி மேற்பிரிவு, கேம்பிரி கீழ்பிரிவு, தங்கக்கலை மேற்பிரிவு, கெல்சி தங்கக்கலை உள்ளிட்ட பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று தோட்ட முகாமையாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலில், அகில இலங்கை தோட்டத் […]