வங்கக்கடலில் உருவாகிறது ‘மோந்தா’ புயல்!

‘வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் 27ம் தேதி புயலாக வலுவடையும்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று காலை 5:30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, மேற்கு – […]

நெடுந்தூர பேருந்து பயணிகளுக்கு உணவு?

நெடுந்தூர பேருந்து பயணிகளுக்கு உணவு வழங்கும் வீதியோர உணவகங்களை ஒழுங்குபடுத்தும் திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அறிமுகப்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான புத்தளம் பாதையில் முதலில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சேனா நானாயக்கரா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதி அமைச்சர், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நெடுந்தூர பேருந்துகள் நிறுத்தப்படும் 73 உணவகங்கள் அடையாளம் […]

கச்சாய் துறைமுகப் பகுதியில் துப்பாக்கிச் சூடு

யாழ். தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. தென்மராட்சி கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழ்ந்த மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் இடைமறித்தனர். பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார். மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார மேற்கொண்டு […]

சுற்றுலாப்பயணிகள் எல்ல பிரதேசத்திற்கு வருகை தர அச்சம்?

சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தரும் எல்ல பிரதேசத்தில் அதிகரிக்கும் வீதி விபத்துக்களினால் சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, எல்ல பிரதேசத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய லொத்தர் சபையுடன் இணைந்து எல்ல பிரதேசத்தில் உள்ள வீதிகளை புனரமைத்து சீரமைப்பதற்கு இன்னும் கொஞ்சம் கவனமாக என்ற வீதி பாதுகாப்பு திட்டத்தை மேற்கொள்ள உள்ளோம் என எல்ல பிரதேச சபையின் தவிசாளர் வெனுர மலிந்த திசாநாயக்க தெரிவித்தார். தேசிய லொத்தர் சபை மற்றும் எல்ல […]

சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்காகப் பெறப்படும் – நீதி அமைச்சர்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும். ஏனெனில் உண்மையைக் கண்டறிவதற்கு இது முக்கியம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.