பெரும்போக நெற்செய்கை; திருகோணமலையில் ஆரம்பம்

பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிக்கும் முகமாக, கந்தளாய் குளத்தின் பிரதான மதகுகளில் இருந்து விவசாய நிலங்களுக்கான நீர் நேற்று (24) காலை சுப வேளையில் திறந்துவிடப்பட்டது. கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தின் கீழ் உள்ள சுமார் 22,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்வதற்காகவே இந்த முதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியல் அலுவலக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் விவசாயத் தலைவர்கள் ஆகியோர் இணைந்து மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பிரதான மதகை இயக்கி நீரை […]
மட்டக்களப்பு சிறுதொழில் முயற்சியாளர்களின் விற்பனைக் கண்காட்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் சுப்பர் பெயார் விற்பனை கண்காட்சி நடைபெற்றுள்ளது. இந்த கண்காட்சி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நேற்று (24) இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவிலுமிருந்து உற்பத்தியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு கண்காட்சி நடாத்தப்பட்டது. மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி […]
படகு கவிழ்ந்து 14 அகதிகள் உயிரிழப்பு ; துருக்கியில் சம்பவம்

துருக்கியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஏஜியன் கடல் பகுதியில் மூழ்கிய சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மூழ்கிய படகில் இருந்து தப்பிய ஒருவர் அதிகாரியிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, இந்த விபத்து தெரிய வந்தது. உடனடியாக மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் 14 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. எஞ்சியவர்களின் உடலைத் தேடும் பணி கடலோரக் காவல் படை படகுகள், நீச்சல் வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் நடந்து வருகிறது. சிரியா, ஈராக் மற்றும் […]
அமெரிக்கா – கனடா வர்த்தக பேச்சு விளம்பரத்தால் தடை!

அமெரிக்க வரி விதிப்பை விமர்சித்து கனடாவில் ஒளிபரப்பப்பட்ட, ‘டிவி’ விளம்பரத்தையடுத்து, கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுகளும் உடனடியாக முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். வட அமெரிக்க நாடான கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல் பொருட்களுக்கு, அமெரிக்கா ஏற்கனவே அதிக வரிகளை விதித்துள்ளது. இந்நிலையில், கனடாவின் பெரிய மாகாணங்களில் ஒன்றான ஒன்டாரியோ மாகாணம் அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால், கனடாவிற்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து அமெரிக்க மக்களுக்கு எடுத்துச் […]
விதிகளை மெட்டா, டிக் டாக் மீறுகின்றன – ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு

வெளிப்படைத்தன்மைக்கான விதிகளை சமூக வலைதள நிறுவனங்களான மெட்டா மற்றும் டிக் டாக் ஆகியன மீறி உள்ளதாக ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டியுள்ளது. இதனால், அந்த நிறுவனங்கள் கோடிக்கணக்கில் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகளவில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் இதனை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து, இதனை பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாக இருக்கவும், வெறுப்பு பேச்சு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தகவல்கள் குறித்தும், பயங்கரவாத தகவல்கள் தொடர்பாக […]
3 இந்திய நிறுவனங்களுக்கு தடை – ரஷ்ய ராணுவத்திற்கு உதவி?

ரஷ்ய ராணுவத்திற்கு உதவும் வகையில் செயல்பட்ட மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட 45 நிறுவனங்களுக்கு, ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் நடந்து வருகிறது. இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவிற்கு அழுத்தம் தரும் வகையில், அந்நாட்டின் மீது […]
மாவட்ட அபிவிருத்தித் திட்டக் முன்னேற்ற நிலை – திருமலையிர் கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற நிலை குறித்து பரிசீலிக்கும் கலந்துரையாடல் நேற்று (24) மாவட்ட செயலகத்தின் உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களின் பங்கேற்புடன், மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம், எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் […]
இராணுவ சேவைக்கு பழைய வாகனங்கள் புதுப்பிப்பு!

இலங்கை இராணுவம் முன்னர் பயன்படுத்த முடியாத 76 வாகனங்களை புதுப்பித்து மீண்டும் சேவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனங்கள் பாரவூர்திகள், பேருந்துகள், தண்ணீர் பவுசர்கள் உட்பட்ட வாகனங்களே, இராணுவத்தின் மின் மற்றும் இயந்திர பொறியாளர் படையினரால் பழுதுபார்க்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி, புதிய இறக்குமதிகளைத் தவிர்ப்பதன் மூலம் இராணுவத்திற்கு கணிசமான அளவு அந்நியச் செலாவணியைச் சேமிக்க உதவுகிறது. இந்த நிலையில், இராணுவத்தின் அறிக்கையின் படி இந்த வாகனங்களை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 10 மில்லியன் […]
மேலதிக மரக்கறிகளை சேமிக்க வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு குளீரூட்டப்பட்ட அறைகளை அமைக்குமாறு கோரிக்கை

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு மேலதிக மரக்கறிகளை சேமித்து வைக்கக்கூடிய வகையில் குளிரூட்டப்பட்ட அறைகளை அமைத்துத்தருமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். தனது அமைச்சிற்கு பொருளாதார மத்திய நிலையம் உற்படாது எனினும், விவசாயிகள் நன்மை கருதி 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுப்பதாக விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சு […]
யாழ். குருநகரில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 22 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் […]