கன மழை; வெள்ள அபாய எச்சரிக்கை!

பெய்து வரும் கன மழை காரணமாக களு, களனி, ஜின் ஆறுகள் மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக அத்தனகலு ஓயாவை அண்டிய மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. பல தாழ்வான பகுதிகள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல மாகாணங்களில் அவ்வப்போது மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் […]

தெற்காசிய மெய்வல்லுநர் போட்டி; இலங்கைக்கு பல பதக்கங்கள்!

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்றுவரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் 2025க்கான போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் பல பதக்கங்களை வென்றுள்ளனர். தங்கப் பதக்கங்கள் மற்றும் சாதனைகள்: முப்பாய்ச்சல் (Triple Jump): பசிந்து மல்ஷான் (Pasindu Malshan) 16.19 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இது இலங்கையின் முதல் தங்கப் பதக்கமாகும். ஆண்கள் 100 மீ ஓட்டம்: சமோத் யோதசிங்க (Chamod Yodasinghe) 10.30 வினாடிகளில் ஓடி, தங்கப் பதக்கம் வென்றதுடன், “வேகமான மனிதன்” (Fastest […]

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசேகர அனுப்பிய கடிதம்…

படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, கொலை மிரட்டல்களின் பின்னர் பாதுகாப்பு கோரி செப்டெம்பர் தொடக்கத்தில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதியதை பொலிஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது. 2025, செப்டெம்பர் 6 என திகதியிடப்பட்ட விக்ரமசேகரவின் கடிதம், பொலிஸ் அதிபரால் தெற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த அதிகாரிக்கும், பின்னர் மாத்தறை-ஹம்பாந்தோட்டை மூத்த அதிகாரிக்கும் மற்றும் மாத்தறை அதிகாரிக்கும் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. இதனையடுத்து குறித்து, வெலிகம மற்றும் மிதிகம பொலிஸ் […]

பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்திக்கிறார் விஜய்?

கரூரில் த.வெ.க. பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை பனையூருக்கு வரவழைத்து சந்திக்க த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் கடந்த செப்ரெம்பர் .27 இல் நடந்த த.வெ.க. பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிந்தனர். 110 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில், கடந்த 18 […]

பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம்

அடுத்த ஆண்டுக்குள் சுமார் 3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் உள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரிக்கையை விடுத்துள்ளார். திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இந்த நெரிசல் காரணமாக பேருந்துகளின் எரிபொருள் செலவு உயருவதுடன், ஒரு நாளைக்கு இயக்கப்படும் பயணங்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக, பேருந்து உரிமையாளர்கள் தொழிலில் இருந்து வெளியேறி வருவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் […]

நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இது ஒரு தீவிர பிரச்சினையாக கருதப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டிய அவர், வெலிகம பிரதேச சபைத் தலைவர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்த போதிலும், அவருக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படாததால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இதே போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இது […]

பல இடங்களில் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப் பகுதிகளில் சில இடங்களில் 75 mm இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், மேற்கு, வடக்கு, வடமத்திய, வடமேல் […]

செவ்வந்தி விவகாரம்: அரசாங்கத்தையும் விசாரியுங்கள் – நாமல் ராஜபக்ஷ

மஹிந்த ஜயசிங்கவுக்கு கனவிலும் ராஜபக்ஷர்கள் தான் தோன்றுகின்றனர். அதனால் அதனால் தான் அவர் அதிகளவில் ராஜபக்ஷர்கள் குறித்து பேசுகின்றார். செவ்வந்தி தனது தொலைபேசியில் பதிவு செய்திருப்பது எந்த நாமலுடைய இலக்கம் என்பதை அதனை பரிசோதித்தவர்களே கூற வேண்டும். ஆனால் அரசாங்கத்திலும் நாமல் கருணாரத்ன என்ற ஒருவர் இருக்கின்றார் என்பதை நினைவுபடுத்துகின்றேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (24) பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து […]

பாதுகாப்புச் சட்டத்தை நிறுவ முயற்சி?

2022ஆம் ஆண்டின் 09ஆம் எண் கொண்ட தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமானது இலங்கையில் தனிப்பட்ட தரவுகளைச் செயன்முறைப்படுத்துவதனை ஒழுங்கு படுத்துவதற்கும் அவற்றை பாதுகாப்பதற்கும் தரவோடு தொடர்புபட்டோரது உரிமைகளை அடையாளம் காண்பதற்கும் பலப்படுத்துவதற்கும்; தரவுப் பாதுகாப்பு அதிகார சபை ஒன்றை நிறுவுவதற்கும் அவற்றோடு தொடர்புபட்ட கருமங்களுக்களை ஆற்றுவதற்கும் ஆன ஒரு சட்டமூலமாகும். இந்தச் சட்டமூலமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR) மற்றும் சிங்கப்பூரின் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் மாதிரியைப் பின்பற்றி இலங்கையில் […]

விமான நிலையத்தின் பாதுகாப்பினை பலப்படுத்த விசேட உயர்மட்ட கூட்டம்

விமானப் போக்குவரத்தின் பிரதான நுழைவாயிலான பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பான விடயங்களை மதிப்பாய்வு செய்வதற்காக விசேட கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடிதுவக்கு மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரின் இணைத் தலைமையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றுள்ளது. உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உச்சகட்ட […]