திருகோணமலை முத்துநகர் விவசாயிகள் 39 ஆவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டம்

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்று (25) சனிக்கிழமையுடன் 39 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை திருமலை மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தி வருகின்றனர். தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் நிறுவனங்களுக்கு அடாத்தாக வழங்கப்பட்டதையடுத்து அன்றாட ஜீவனோபாயத்தை இழந்த நிலையில் போராடி வருகின்றனர். இவ்வாறான நிலையில் விவசாயிகள் தங்கள் ஆதங்கங்களை தெரிவிக்கின்றனர். இங்குள்ள பிரதியமைச்சர் ஒருவர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறி விவசாயிகளை ஏமாற்றி வருகின்றார். விவசாய நீர்ப்பாசன […]

ஜனாதிபதியால் இரண்டு உயரிய விருதுகள் நல்லூர் பிரதேச செயலகத்துக்கு வழங்கல்

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகம் ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் விருதுகள் – 2025 இன் சிறந்த அரச அலுவலகத்திற்காக தகுதிசார் விருதினைப் பெற்றுக்கொண்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் விருதுகள் – 2025க்கான விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தொடர்ச்சியாக கடந்த 11 ஆண்டுகளாக விருது வழங்கி வருகின்றது. இந்நிலையில் இம்முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த சமூக வலைத்தளத்திற்கான ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் விருதுகள் – […]

பொலித்தீன் இல்லாத சூழலை உருவாக்கும் முயற்சி திருமலையில் ஆரம்பம்

திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் இல்லா சூழல் ஒன்றை உருவாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நேற்று(24) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார வழிகாட்டுதலுக்கிணங்க மாவட்ட சமுர்த்தி முகாமையாளரும் நலன்புரி சங்க தலைவருமாகிய எச்.சஞ்ஜீவ உட்பட நலன்புரி சங்க குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. இதன்போது சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் பொருட்கள் திருகோணமலை மீள்சுழற்சி மையத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மூலம், நலன்புரி சங்கத்தின் நிதிக்கு […]

மீற்றர் வட்டி மாபியாவுக்கு எதிராக செயற்படுங்கள் – யாழ் மக்களிடம் கோரிக்கை

யாழில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மாபியாவுக்கு எதிராக மக்கள் தகவல்களை எனக்குத் தரலாம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, மக்களிடம் அதிகமான காசோலைகளை பெற்றுக் கொண்டு அதை அடிப்படையாகக் கொண்டு மிரட்டி அல்லது சொத்துக்களை இழக்கச் செய்தவர்களும் என்னுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார். பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் […]

கோப்பாய் சந்தியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து !

கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்து, ஹையேஸ் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன குறித்த சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக சுமத்ரா தீவில் அதிகரிக்கும் நிலநடுக்கங்கள்!

சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக அதிகளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால், நாடளாவிய ரீதியில் பொதுமக்களுக்கு சுனாமி விழிப்புணர்வு குறித்த ஒத்திகை பயிற்சியை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே ஏற்பட்ட […]

தேசிய காலநிலை நிதியியல் செயற்திட்டம் வெளியீடு

இலங்கையின் காபன் பயன்பாட்டை பூச்சியமாக்குதல் மற்றும் செயற்திறன்மிக்க காலநிலைசார் முதலீடுகளை ஊக்குவித்தல் எனும் இலக்குகளை அடைவதற்கான வழிவகைகளை உள்ளடக்கிய ‘2025 – 2030 க்கான தேசிய காலநிலை நிதியியல் செயற்திட்டம்’ சர்வதேச காலநிலை நடவடிக்கை தினமான கடந்த வியாழக்கிழமை (24) வெளியிடப்பட்டது. உரியவாறான நிதியியல் திட்டமிடல் மூலம் காலநிலைசார் பாதிப்புக்களில் இருந்து மீண்டெழும் தன்மையை மேம்படுத்தல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தியை ஊக்குவித்தல் என்பவற்றுக்கான உத்திகளை உள்ளடக்கியிருக்கும் இச்செயற்திட்டமானது பிரிட்டன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் காலநிலைசார் நிதியிடல் செயற்திட்டத்தின் […]

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரத்திற்கான பொது தகவல் தொழில்நுட்ப (GIT) தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து அதிபர்களும் தங்கள் பாடசாலைக்குறிய அனுமதி அட்டைகளை அந்தந்த வலயக் கல்வித் உதவி கல்வி பணிப்பாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம், அவர்களின் தனிப்பட்ட தபால் முகவரிகளுக்கு […]

ஆக்கப்பூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு கனடா தயார்!

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா வரிகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய வரிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கனடா ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தை வெளியிட்டது. அந்த வீடியோ விளம்பரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் வரிவிதிப்புகள் வர்த்தக போர்களை உருவாக்கலாம் என்று பேசியதாக காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இது ஒரு மோசடியான வீடியோ என்று ரீகன் அறக்கட்டளை தெளிவுப்படுத்தி விட, கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதாக அதிபர் டிரம்ப் […]

பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: ஐநாவில் இந்தியா

பாகிஸ்தானால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் வலியுறுத்தி உள்ளார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த கூட்டத்தில், பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது: ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். பாகிஸ்தானால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள பகுதிகளில் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு வர கொண்டு வேண்டும். ஜம்மு […]