`உலகம் முழுதும் ஒளிரும் தமிழின் பெருமை’ – Behind Me Media இலங்கைக் கிளை ஆரம்ப நிகழ்வு!

இணையத்தின் ஊடாக சர்வதேச தரத்திலான புதிய வெகுஜன ஊடகமான Behind Me Mediaஇலங்கைக் கிளை அலுவலகத்தின் திறப்பு விழா இன்றைய தினம் வவுனியா நகரில் நடைபெற்றது. Behind Me Media சர்வதேச நிறுவனத்தின் செயற்பாடுகள் ஒரு தளத்தில் பல் விடயங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தனது செயற்பாடுகளை தற்போது ஆரம்பித்துள்ளது. உள்ளூர் தொடக்கம் உலகம் வரையிலான செய்திகள், சம கால நிகழ்வுகள், அரசியல், கலை, கலாசாரம், அறிவியல், தொழில் நுட்பம், விழிப்புணர்வுத் தகவல்கள் மற்றும் பொழுபோக்கு […]

சுற்றுலா மேம்பாடு எனும் போர்வையில் யாழில் காணி அபகரிப்பு நடைபெறுகின்றது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் 600 ஏக்கர் காணிகளை சுற்றுலா மேம்பாடு எனும் போர்வையில் அபகரிக்கும் முயற்சியை கைவிடுமாறு மணக்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணக்காட்டு பகுதியில் கற்கோவளத்திற்கும் மணல்காட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் 300 ஏக்கர் காணியும், மணக்காட்டுக்கும் பொற்பதி கிராமத்துக்கும் இடைப்பகுதியில் 300 ஏக்கர் காணியிலும் சுற்றுலா தேவைகளுக்காக அபகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெற உள்ளன. இதனை உடனடியாக கைவிடுமாறு மணக்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணக்காடு கிராம […]

வடக்கு, வடமத்திக்கு தம்புள்ளையில் இருந்து போதைப்பொருள் கைமாறுகின்றது!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்திற்கு போதைப்பொருள் தம்புள்ளையில் இருந்தே கைமாற்றப்படுவதாக மாத்தளை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். மாத்தளை மாவட்டத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸாருக்கு சன்மானம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. கடந்த காலங்களில் தம்புள்ளையில் மட்டும் மேற்கொண்ட சோதனைகளில் பிடிப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் […]

களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு

களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு – மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதிக மழையின் காரணமாக களு கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இரத்தினபுரி களுகங்கையின் நீர்மட்டம் நேற்றையதினத்தைவிட இன்றையதினம் தொடர்ந்து அதிகரித்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தால் வெள்ள நிலைமைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால், களு கங்கை அண்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் இது தொடர்பாக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய […]

வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

இரத்மலானை – கொளுமடம சந்தியில், வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்றும் குறிப்பிட்டார். பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்றதாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அனுமதிப்பத்திரக் கட்டணத்தில் திருத்தம்?

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு கட்டண உயர்வுக்கு விதிக்கப்பட்ட வரம்பு 15% ஆக இருந்தாலும், அது திருத்தத்திற்கான அதிகபட்ச வரம்பு மட்டுமேயாகும் அன்றி, தீர்மானிக்கப்பட்ட மதிப்பு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீத கட்டணத் திருத்தம் பொதுவாக மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தாலும், இந்த ஆண்டுக்கான கட்டணத் திருத்தம் தொடர்பில் இதுவரை […]

தாழமுக்கமாக வலுக்கிறது சூறாவளியாகச் சாத்தியம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு திசையில் நகர்ந்து ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து, இன்று அதே பிராந்தியத்திற்கு மேலாக மட்டக்களப்புக்கு கிழக்காக சுமார் 900 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இத்தொகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நாளைய தினம் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அக்டோபர் 27ஆம் திகதி காலையளவில் தென்மேற்கு மற்றும் அண்மையாகவுள்ள மேற்கு – […]

கந்தரோடையில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இன்று(25) அதிகாலை 12.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், அத்துமீறி உள்நுழைந்த குழு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிவிட்டு பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம் பொலிஸாரும், தடயவியல் பொலிசாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புற்றுநோய் காரணிகளாக அமையும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள்!

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களைப் பயன்படுத்துவதற்குப் பின்னால் கடுமையான புற்றுநோய் ஆபத்து இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன என்று புற்றுநோயியல் நிபுணர் சிதத் விஜேசேகர எச்சரித்துள்ளார். இந்த கிரீம்களில் உள்ள சில இரசாயனங்கள் புற்றுநோய் காரணிகளாக செயல்படுகின்றன என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார். இது ‘அரை மற்றும் அரை நகங்கள்’ என்று அழைக்கப்படும் ஒரு நிலை, இது இளம் மற்றும் நடுத்தர வயதினரின் நகங்களில் காணப்படுகிறது.

அமெரிக்காவின் இறக்குமதி தடை; பாதிப்படையும் வடக்கு மக்கள்

2026 ஜனவரி மாதம் முதல் ஐக்கிய அமெரிக்க நாடுகள் இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதியை இடைநிறுத்தவுள்ள நிலையில், நண்டுத் தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.​ கடல் பாலூட்டிகளைப் பாதுகாக்கும் ஒரு அமெரிக்க முயற்சியின் பகுதியாக இந்த ஏற்றுமதித் தடை விதிக்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 7,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகின்றது. கடல் பாலூட்டிகள் பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்குவதைக் குறிக்கும் சான்றிதழை வழங்குவதில் இலங்கை தாமதம் காட்டியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேவையான […]