தேங்காய் திருடியவரைக் கொன்றவருக்கு மரண தண்டனை!

இரண்டு தேங்காய்களைத் திருடியதற்காக ஒருவரை தேங்காய் உமி இரும்புக் கருவியால் அடித்துக் கொன்றதற்காக, பிரதிவாதிக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க மரண தண்டனை விதித்தார். 2001 ஒக்டோபர் 30 அன்று நியதகல நெல் வயலில் தேங்காய் உமி இரும்புக் கருவியால் அடித்துக் கொன்றதற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் மீதான நீண்ட விசாரணைக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் முதல் குற்றவாளியான ரஞ்சித் தர்மசேனவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, இலங்கை […]
வளிமண்டலவியல் திணைக்கள அறிவித்தல்!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 – 50 km வேகத்தில் அடிக்கடி […]
வெற்றிலைக்கேணி பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர் உயிரிழப்பு

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை (23) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகு மூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜோசேப் துரைராசா அன்ரனி ஜோசப் (44 வயது) என்பவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. குறித்த குடும்பஸ்தர் தனக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தனது மனைவிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து உதவிக்கு சிலரை அழைத்துள்ளார். உடனடியாக இன்னொரு படகு மூலம் தரையில் […]
சட்ட விரோத பிரமிட் திட்டம்; 7 பேர் கைது

சட்டவிரோத பிரமிட் திட்டத்தை நடத்திய 7 சந்தேக நபர்கள், நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, பிரமிட் திட்டத்தை நடத்துதல், ஊக்குவித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகிய குற்றங்களுக்காக நேற்று வியாழக்கிழமை (24) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரத்மலானை, பன்னிப்பிட்டிய, கல்னேவ, ஹோகந்தர, பேராதெனிய மற்றும் கொழும்பு 04 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என […]
ஸ்ரீலங்கா மகளிர் கிரிக்கெட் அணி – பிரதமர சந்திப்பு

ஸ்ரீலங்கா மகளிர் கிரிக்கெட் அணி, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரை நேற்று (23) அலரி மாளிகையில் சந்தித்தது. தற்போது நடைபெற்று வரும் மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண தொடர் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. வீராங்கனைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தில் தேவைப்படும் வசதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிவநகர் கிராம மூத்தோர் சங்க முதியோர் கௌரவிப்பு

தற்போதைய சமூகம் முதியோரை தங்கள் தேவைக்குப் பயன்படுத்திய பின்னர் அவர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சென்று விடும் போக்குத்தான் இப்போது இங்கு அதிகரித்து வருகின்றது. அதனால்தான் முதியோர் இல்லங்கள் உருவாகிக்கொண்டு செல்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி சிவநகர் கிராம மூத்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் தனது உரையில், நல்லது, கெட்டதைச் சொல்லி எங்களை […]
செவ்வந்திக்கு உதவி; மேலும் சிலர் யாழில் கைது செய்யப்படலாம்?

செவ்வந்தி விவகாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்ற தறுவாயில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வந்திக்கு உதவியதற்காக அரியாலையில் வசித்த ஆனந்தன் என்பவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆனந்தனின் மாமா நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. செவ்வந்தி விவகாரத்தில் யாழ்ப்பாணத்தில் இன்னும் சிலர் கைதாகும் சந்தர்ப்பம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, இந்தியாவிற்கு தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டிலேயேஆனந்தன் […]
இலங்கையின் பாதாள உலகக் குற்றவாளி ரஷ்ய பாதுகாப்புப் பிரிவு காவலில்…

ரஷ்ய பாதுகாப்புப் பிரிவுகளின் வசம் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ரொட்டும்ப அமிலவுக்கு எதிராக ரஷ்ய நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் வழக்கு முடிவடையும் வரை அவரை இலங்கையிடம் ஒப்படைக்க முடியாது என, அந்த நாட்டின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி ரஷ்யாவிற்குள் நுழைந்த அவரை, சர்வதேச பொலிஸின் சிவப்பு அறிவித்தல் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம், ரஷ்ய பொலிஸார் கைது செய்தனர். ரொட்டும்ப அமில எனப்படும் பாதாள […]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்காக புதிய வசதி

கட்டுநாயக்க விமான புதிய சுய-பரிசோதனை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் செக்-இன் செயல்முறையை சீரமைக்கவும், உச்ச பயண நேரங்களில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. 20 புதிய சுய-பரிசோதனை இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு வசதியான அனுபவத்தை வழங்கும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தரை கையாளுதலின் விமான நிலையத் தலைவர் தீபால் பல்லேகங்கொட தெரிவித்துள்ளார்.
சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபடும் முத்துநகர் விவசாயிகள்!

திருகோணமலை – முத்துநகர் விவசாயிகள் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருகோணமலைக்கு வருகை தந்த ஜனாதிபதியை சந்திப்பதற்கு தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குறித்த விவசாயிகள் தெரிவித்தனர். முத்துநகர் விவசாயிகள்,தங்களது விவசாய நிலத்தை அபகரித்து தனியார் கம்பனிகளுக்காக சூரிய மின் சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டதை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 37 ஆவது நாளாகவும் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபடும் முத்துநகர் விவசாயிகள் | ஆரவாரயெபயச குயசஅநசள ளுயவலயபசயாய Pசழவநளவ பரம்பரை பரம்பரையாக விவசாயம் […]