இலங்கைப் பெண் உத்தரபிரதேசத்தில் சடலமாக மீட்பு

உத்தரபிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் 71 வயது இலங்கை பெண் ஒருவர் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் கடந்த புதன்கிழமை (22) தெரிவித்தனர். இறந்த பெண் சுனில் சாந்தி டி சில்வாவின் மனைவி கோத்தாகொட என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, இலங்கையைச் சேர்ந்த 46 சுற்றுலாப் பயணிகள் குழு மாநிலத்தில் உள்ள ஷ்ரவஸ்தியில் உள்ள புத்த மத தலத்தைப் பார்வையிட வந்திருந்தனர். கோத்தாகொட தனது அறையை விட்டு செவ்வாய்க்கிழமை(21), வெளியே வராததால், […]

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை(23) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 30, 988 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 748 கைது செய்யப்பட்டுள்ளனர்.குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும், பிடியாணை உத்தரவுக்கமைய கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 613ஆகவும் பதிவாகியுள்ளது. அதேநேரம், திறந்த பிடியாணை உத்தரவுக்கமைய 348பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

பருத்தித்துறை வியாபாரிகள் போராட்டம்

இன்று காலை பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினர் மற்றும் மரக்கறி சந்தை வியாபாரிகள் இணைந்து பருத்தித்துறை நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நகரின் மீன் சந்தை வீதியில் புதிதாக கட்டடம் ஒன்றை அமைத்து அங்கு மரக்கறிச் சந்தை, பருத்தித்துறை நகரசபை செயலாளரால் மாற்றம் செய்து வைக்கப்பட்டது. எனினும், புதிய சந்தை கட்டடத்தில் போதிய இடவசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ இல்லையென்றும், மழை நேரங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதாகவும், அத்துடன் நகரில் இருந்த குறித்த மரக்கறிச் சந்தை தூரம் என்பதால் பொதுமக்கள் […]

விசேட சுற்றிவளைப்பு

“மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத் என்பவரை சுட்டுக்கொலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற துப்பாக்கிதாரிகளை கைதுசெய்ய பல வீதிகளில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். “மிதிகம லசா” ஒக்டோபர் 22 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் இருக்கும் போது, கருப்பு நிற முகமூடிகளை அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், அலுவலக அறைக்குள் நுழைந்து […]

அமெரிக்காவின் அழுத்தம் பலனளிக்காது – ரஷ்ய அதிபர் புடின்

”ரஷ்யா மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்காவின் அழுத்தம் பலனளிக்காது” என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார். போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா சம்மதிக்காததால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் இரு பெரிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடையை அமல்படுத்தினார். உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் இந்த இரு நிறுவனங்களும், 6 சதவீத பங்கை கொண்டு உள்ளன. ரஷ்ய அரசுக்கான மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக இந்நிறுவனங்கள் உள்ளன. […]

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு

‘தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி வலுவிழந்தது; இது, தெற்கு கர்நாடக பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இது, வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இன்று நகரக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி […]

கம்போடியாவில் இணைய மோசடி; 86 பேர் கைது

கம்போடியாவில் ஆன்லைன் மோசடி மையத்தில் வேலை பார்த்து வந்த, 57 தென்கொரியர்கள், 29 சீனர்களை அந்நாட்டு ஆன்லைன் மோசடி தடுப்பு ஆணைய அதிகாரிகள் கைது செய்தனர். ‘டேட்டா என்ட்ரி’ வேலை என்ற பெயரில், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தாய்லாந்து, கம்போடியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு அவர்கள் மோசடி மையங்களுக்கு அனுப்பப்பட்டு, ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்கள் உள்ளன. திருமணமாகாதவர்கள் அல்லது விவாகரத்தானவர்களை குறிவைத்து […]

ஆந்திராவில் பஸ்சில் தீ; பயணிகள் 25 பேர் பலி

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பஸ் தீப்பற்றிய சம்பவத்தில் பயணிகள் 25 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா மாநிலம் கர்னூலில் பயணிகள் 42 பேருடன் சென்று கொண்டிருந்த சுற்றுலா பஸ் தீப்பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

கொழும்பு துறைமுகத்தில் சடலம்!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள அதானி முனையத்தின் படகுத்துறைக்கு அருகிலுள்ள கடலில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு துறைமுக காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. உடல் மோசமான நிலையில் இருந்ததால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டதாகவும், நீல நிற டெனிம் கால்சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். நீதவான் விசாரணைக்குப் பிறகு, உடல் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு இஷாரா தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் – அராலித்துறை கடற்கரைப் பகுதியில் இருந்தே இந்தப் படகு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இஷாரா இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய ஏ. ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான 400 குதிரைத் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட படகு எனத் தெரியவந்துள்ளது.