கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா இன்று (24.10.2025) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான எஸ்.முரளிதரன் தலைமையில், இரனைமடு நெலும் பியச (தாமரைத் தடாகம்) மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு குறித்த விழா பாரம்பரிய கலை கலாச்சார பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில், பிரதம விருந்தினர்களாக கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட […]
மத்திய வங்கி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வாகனக் கடன்கள் ரூ. 1.16 டிரில்லியனாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதனால் வாகன இறக்குமதியின் அளவு அதிகரித்ததாகவும் அரச வருமானம் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் அரசின் 2025 ஆம் ஆண்டிற்கான நிதி இலக்குகளை விஞ்சியுள்ளது. முன்னதாக, கடந்த பெப்ரவரியில் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய பின்னர் எதிர்பார்த்ததை விட கேள்வி அதிகரித்துள்ளது. இதுவே வாகனக் கடன்களில் அதிகரிப்புக்கு வழிவகுத்தது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்தக் கடன்களில் […]
இலங்கை இராணுவத் தளபதி ஐ.நா. படை பங்களிப்பு மாநாட்டில்…

2025 ஆம் ஆண்டிற்கான ஐ.நா. படை பங்களிப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாடு ஒக்டோபர் 14 முதல் 16 ஆம் திகதி வரை இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்றது. இந்திய இராணுவத்தின் அனுசரணையில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ பங்குபற்றியிருந்தார். 32 படைகளைச் சேர்ந்த சிரேஷ்ட இராணுவத் தளபதிகள் இந்த மாநாட்டில் பங்குபற்றியிருந்தார். இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து […]
அரசாங்க நிதி ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அனுமதி

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நேற்று வியாழக்கிழமை (23) கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நிதி அமைச்சின் அதிகாரிகள், 2026ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஒவ்வொரு துறைக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்த விபரங்களை முன்வைத்தனர். இவ்விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு இதற்கான […]
போதைப்பொருள் மாதிரிகளை அகற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவிப்பு

அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் குவிந்துள்ள ஒரு கிலோகிராமுக்கு குறைவான போதைப்பொருள் மாதிரிகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிச் சேவை ஆணைக்குழு அனைத்து நீதவான்களுக்கும் அறிவித்துள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி அயிஷா ஜினசேன விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்த போதிலும், திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த மாதிரிகளால் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மேலதிக சேமிப்பு வசதிகளை வழங்க முடியவில்லை என்றும் நீதி […]
கணவனை கொலை செய்ய முயற்சி: யாழ்ப்பாணப் பெண் முறைப்பாடு!

பளையினை சேர்ந்த நபர் ஒருவர் தனது கணவனை கொலை செய்ய முயற்சி செய்து வருவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் தெரிவிக்கையில், கடந்த 19ஆம் திகதி செம்பியன்பற்று வடக்கு கடற்கரை பகுதிக்கு எனது கணவன் சென்றுகொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து எனக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் எனது கணவன் விபத்துக்குள்ளாகி உள்ளார் என்று தெரியவிக்கப்பட்டது. உடனடியாக விபத்து நடைபெற்ற இடத்திற்கு எனது மகள் சென்றார். விபத்து […]
இந்திய கடல்சார் வார நிகழ்வில் இலங்கை அமைச்சர்!

இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தால் மும்பையில் உள்ள பம்பாய் கண்காட்சி மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய கடல்சார் வாரத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை அரசின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக 2025 ஒக்டோபர் 27-28 திகதிகளில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மத்திய கிழக்கின் அமைதிக்கு இந்தியா முழு ஆதரவு

இந்த மாத தொடக்கத்தில் கையெழுத்தான வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதி ஒப்பந்தத்தை வரவேற்றதுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான ராஜதந்திர முயற்சிகளை ஐநாவில் இந்தியா பாராட்டியது. பாலஸ்தீனப் பிரச்னை உட்பட மத்திய கிழக்கின் நிலைமை குறித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது: இந்த மாத தொடக்கத்தில் கையெழுத்தான வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதி ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்கிறது. மத்திய கிழக்கில் அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு […]
10 பில்லியன் ரூபா அபராதத் தொகை நிலுவையில்…

மதுவரித் திணைக்களத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய நிலுவையில் உள்ள மதுவரி மற்றும் அபராதத் தொகைகள் 10 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். 90 நாட்களுக்கு மேலாக வரி நிலுவை வைத்துள்ள உற்பத்தியாளர்களின் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் சட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். நிலுவையில் உள்ள மதுவரித் தொகை 4.7 பில்லியன் ரூபா எனவும், நிலுவைத் தொகைக்கான 3வீத அபராதத் […]
தங்க விலையில் திடீர் மாற்றம்

தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாக சரிந்து வருகிறது. அதற்கமைய, ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை 77,000 ரூபாய் குறைந்துள்ளது. உள்ளூர் சந்தையில் கடந்த வாரம் சாதனையாக 24 கரட் தங்கத்தின் விலை 410,000 ரூபாயாக உயர்ந்தது. எனினும் நேற்று, செட்டியார் தெரு தங்க சந்தையில் 24 கரட் தங்கத்தின் விலை 330,000 ரூபாயாகவும் 22 கரட் […]