உலகச் சந்தையில் நுழைவதற்கு அரசாங்கமும் தனியார் துறையும் ஒன்றிணைய வேண்டும் – பிரதமர்

உள்நாட்டு கைத்தொழில்களை பலப்படுத்தி, உலகச் சந்தையில் நுழைவதற்கு அரசாங்கமும் தனியார் துறையும் ஒன்றிணைந்து செயற்படுவது அத்தியாவசியம் என்றும், உள்நாட்டு தொழில்முனைவோரை (Entrepreneurs) மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற “2025 CNCI கைத்தொழில் மற்றும் சேவை மதிப்பீட்டு விருது விழாவில்” கலந்துகொண்டபோதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். இலங்கை தேசிய கைத்தொழில் சம்மேளனத்தினால் (Ceylon National Chamber of Industries […]
தற்போதைய அரசாங்கத்தின் முன்னுரிமை சுகாதார சேவைகளே – நளிந்த ஜெயதிஸ்ஸ

இரத்தினபுரி பிராந்திய சுகாதார அதிகாரி அலுவலகக் கட்டடம் பொதுமக்களின் பாவனைக்கு வழங்கப்படவுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மக்கள் தொகையில் 6 சதவீதமானோர் ஒவ்வொரு ஆண்டும் அரசு மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவுகளிலிருந்து சிகிச்சை பெறுகின்றனர். இதனை மாற்றி அமைப்பதற்காக “சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள்” என்ற ஒரு சிறந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். புதிதாக கட்டப்பட்ட இரத்தினபுரி பிராந்திய சுகாதார அதிகாரி அலுவலகக் கட்டடத்தினை ஸ்ரீவனகரயாவில் அண்மையில் பொதுமக்களுக்கு […]
கிழக்கு மீனவர் தொழிற்சங்கத் தலைவர் கண்டனம்

மீனவர்களின் வளர்ச்சிக்கு கடந்த காலத்தில் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறித்து மீனவர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு சிலர் நாசகார வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் வடக்கு, கிழக்கு மீனவர் தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிழக்கு மாகாண மீனவர் தொழிற்சங்கத்தின் தலைவர் ரத்தினம் பத்மநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு வெய்ஸ்ஒப் மீடியா கற்கை நிலையத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற ஊடக மாநாட்டில் […]
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உலகம் மீண்டும் உறுதிபூண வேண்டும் – ஐ. நாடுகள் சபையின் பொதுச்செயலாளர்

இப்போது, முன்பை விட அதிகமாக, எந்த ஒரு நாடும் தனியாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உலகம் மீண்டும் உறுதிபூண வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவு பெறுவது மற்றும் இலங்கையுடனான அதன் கூட்டாண்மைக்கு 70 ஆண்டுகள் […]
பெண் வைத்தியர் தற்கொலை; பொலிசார் பலாத்காரம்?

மஹாராஷ்டிராவில் பெண் வைத்தியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்னர், பொலிசார் தன்னை பலாத்காரம் செய்ததுடன், மனரீதியாக துன்புறுத்தியதாக கையில் குறிப்பு எழுதி வைத்தார். மஹாராஷ்டிராவின் சதாராவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன்னர் அந்த பெண் வைத்தியர் தனது இடது கையில் தனது மரணத்துக்கு காரணம் […]
விரைவில் தேசிய பெண்கள் ஆணைக்குழு செயற்படும் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பமாகும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சில் நேற்று வியாழக்கிழமை (23) அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜுக்கும் தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கம் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேலும் தெரிவிக்கையில், […]
மனிதநேய நெறிமுறைகளை நிலைநிறுத்துதல் மாநாடு – இலங்கைப் பாராளுமன்றக் குழு பங்கேற்பு

ஜெனீவா நகரில் “மனிதநேய நெறிமுறைகளை நிலைநிறுத்துதல் மற்றும் நெருக்கடி காலங்களில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் 2025 ஒக்டோபர் 19 முதல் 23 வரை நடைபெற்ற 151வது அனைத்துப் பாராளுமன்றங்களின் ஒன்றியத்தின் (IPU) மாநாட்டில் இலங்கை பாராளுமன்றக் குழுவினர் கலந்துகொண்டனர். தொடர்ச்சியான உலகளாவிய மனிதாபிமான சவால்களின் பின்னணியில், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தைப் பாதுகாத்தல், பல்தரப்பட்ட உறுதிப்பாடுகளை வலுப்படுத்தல், மற்றும் மோதல் மற்றும் நெருக்கடி காலங்களில் பயனுள்ள மனிதாபிமானப் பதிலளிப்பை உறுதிசெய்தல் என்பவற்றில் பாராளுமன்றங்களின் பங்கு […]
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபை அமர்வில் அமளி!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசசபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (24) தவிசாளர் இராசையா நளினி தலைமையில் இடம்பெற்று கொண்டிருந்தபோது, ஆரம்பத்திலிருந்தே அமளி நிலவிய நிலையில் சபை உறுப்பினர்கள் சிலர் சபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர். இந்நிலையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த சத்தியமூர்த்தி சத்தியவரதன் (உபதபிசாளர்), செல்லையா அமிர்தலிங்கம், தமிழரசுக் கட்சியை சேர்ந்த வைரமுத்து ஜெயரூபன், சிவஞானசுந்தரம் நிக்சன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த நடராசா மகிந்தன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். 13 […]
சீரற்ற காலநிலை; 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை

பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி, வங்காள விரிகுடா கடற்பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இன்று (24) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாலுள்ள ஆழமற்ற கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் […]
கழிவுகளால் யாழ் மக்கள் அசௌகரியம்!

யாழ்ப்பாண பிரதான அங்காடி கடைகள் அமைந்த இடமான கந்தப்பசேகர வீதி, பழைய கரன் தியேட்டர் அருகாமையில் உணவுக்கழிவுகள் போடப்படுவதால் அங்கு துர்நாற்றம் வீசுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாநகரசபை உறுப்பினர்களான பிரதி மேயர் தயாளன், சாருஜன் மற்றும் சதீஸ் ஆகியோர் குறித்த இடத்திற்கு நேரில் நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போது, உடனடி நடவடிக்கையாக கழிவுகள் அகற்றப்பட்டு, காணி உரிமையாளர்கள் இல்லதாவிடத்து மாநகரசபையால் சுற்றிவர வேலி அமைக்க மாநகரசபை தீர்மானித்துள்ளது. கேமரா மூலமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகரசபை […]