பெண்கள் உலக கோப்பை; ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இங்கிலாந்து

உலக கோப்பை லீக் போட்டியில் ஆஷ்லி கார்ட்னர் சதம் கடந்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்தூரில உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறின. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 244 ரன் […]

இலங்கையின் வானிலை இன்று!

மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களி்ல் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் […]

திருநெல்வேலி அரசடி சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய இராஜ கோபுர அடிக்கல் நாட்டல்

யாழ்ப்பாணம் , திருநெல்வேலி அரசடி ஶ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அம்பாளுக்கான இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் ஆலய தர்மகர்த்தாக்கல், அடியவர்கள் கலந்து இராஜ கோபுரத்திற்காக அடிக்கல்லினை நாட்டினர். ஆலயத்தில் பாலஸ்தானம் இடம்பெற்று, ஆலய புனரமைப்பு வேலைகள் துரித கெதியில் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ் வந்தடைந்தார் சூரன்; பிரான்சிலிருந்து துவிச்சக்கர வண்டியில் 10 ஆயிரம் கிலோமீற்றர் பயணம் செய்து சாதனை!

பல்வேறு நாடுகளுக்கு பிரான்சில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து , சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து புதன்கிழமை (22) சூரன் என்ற இளைஞன் யாழ்ப்பணத்தை வந்தடைந்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட 28 வயதுடைய சூரன் என்ற இளைஞன் இலங்கையின் மகத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு பொறிமுறையாகவே இந்த துவிச்சக்கர வண்டி பயணத்தை முன்னெடுத்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்ததாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து தனது பயணம் குறித்து […]

கடல் மூலமாகக் கடத்தப்பட்ட 1416 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்!

கல்பிட்டி-தலவில கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து நானூற்று பதினாறு (1416) கிலோகிராம் பீடி இலைகளைக் கைப்பற்றினர். அதன்படி, தலவில கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதக்கும் நாற்பத்தொரு (41) பைகள் பரிசோதிக்கப்பட்டன. குறித்த நேரத்தில், கடற்படையினரின் நடவடிக்கைகளால் கரைக்கு கொண்டு வர முடியாமல், கடத்தல்காரர்களால் […]

பத்து மில்லியன் ரூபா பெறுமதியான வலம்புரிகளுடன் ஒருவர் கைது

அம்பலங்கொடை கலகொட பகுதியில் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு பழைய துப்பாக்கிகள் மற்றும் பத்து மில்லியன் ரூபாய்க்கு விற்க தயாராக இருந்த இரண்டு வலம்புரிகளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் மிட்டியகொடை, உடகராவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர்.

மாற்றுத்திறனாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்று மின்சாரம் தாக்கி மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த புவனேந்திரன் தேவபாலன் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவருக்குப் பிறப்பிலேயே கை, கால்கள் என்பன செயற்பாடுகள் அற்றுக் காணப்படுகின்றன. தனது வாயினால் மின்சார ஆழியினுள் மின் இணைப்புக்காக வயரைச் செருக முற்படும்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உண்மையை வெளியிட்டார் பியூமி!

பாதாள உலகக் குழுக்களின் தலைவராக கருதப்படும் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக சிஐடியால் விசாரிக்கப்பட்ட பிரபல மாடலும், நடிகையுமான பியூமி ஹன்சமாலி இது குறித்து விளக்கமளித்துள்ளார். தனது அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த அவருக்கு கூறுவதற்கு மட்டுமே தொடர்பில் இருந்ததாக பியூமி கூறினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டுபாயில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்ட புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தான் முதன்முதலில் பத்மேவை சந்தித்ததாகவும் அவர் தனது மனைவி மற்றும் […]

அரச காணிகளில் வசித்துவரும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டும் ஏன் வழக்கு?

மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அரச காணிகளில் வசித்துவரும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டும் வழக்குத் தொடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற் கொள்ளப்படும் என காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண தெரிவித்தார். வாய்மூல விடைக்களுக்கான வினா நேரத்தில் பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பியான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். ஹிஸ்புல்லாஹ் எம்.பி. தனது கேள்வியில் , மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அரச […]