தேசிய மருத்துவமனை உதவியாளரிடம் ஆயுதங்கள்?

கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவமனை உதவியாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து T-56 தோட்டாக்களையும் மூன்று 9mm தோட்டாக்களையும் கண்டுபிடித்ததாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர். மருத்துவமனை உதவியாளர் ஒருவர் போதைப்பொருள் வைத்திருப்பதாக மருதானை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மருதானை பொலிஸார் நடத்திய விசாரணையில், கொழும்பு தேசிய மருத்துவமனையின் பழைய வெளிநோயாளர் பிரிவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவமனை உதவியாளருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் வெள்ளைப் […]

பிரதேச சபைத் தலைவர் லசந்த கொலை: விசாரணைகள் ஆரம்பம்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை நடந்த போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நான்கு பொலிஸ் குழுக்கள் மூலம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்தார். வெள்ளை சட்டை அணிந்து கருப்பு நிற முகக்கவசத்துடன் வந்த துப்பாக்கிதாரி, தலைவரின் அலுவலகத்திற்குள் நுழைந்து லசந்த விக்ரமசேகரவை நான்கு முறை சுட்ட பின்னர், மற்றொரு நபருடன் மோட்டார் […]

அச்சுறுத்தல்களை அறிய AI அமைப்பைப் பயன்படுத்த முடிவு

அச்சுறுத்தல்களை அறியும் வகையில், தேசிய கிளவுட் சேவைகளைப் பாதுகாக்க AI மூலம் இயங்கும் அச்சுறுத்தல் கண்டறிதல் அமைப்பைப் பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று டிஜிட்டல் பொருளாதாரத் துணை அமைச்சர் எரங்க வீரரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துணை அமைச்சர், கிளவுட் சேவைகளின் கீழ் வரும் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கும் தரவுகளைப் பாதுகாப்பதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிப்பு!

ரஷ்யாவின் மிகப்பெரிய 2 எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவுக்கு கொண்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். தற்போது ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் இரண்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நீண்ட நாட்கள் நீடிக்காது என்று நாங்கள் நம்புகிறோம். போர் விரைவில் தீர்க்கப்படும், […]

நைஜீரியாவில் பெட்ரோல் தாங்கி வெடித்து 31 பேர் பலி!

நைஜீரியாவில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி வெடித்துச் சிதறியதில் 31 பேர் உடல் கருகி பலியாகினர். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள நைஜர் மாநிலத்தின் பிடா பகுதியில் டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்து பெட்ரோ சிந்தத் துவங்கியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் லாரியில் இருந்து கொட்டிய பெட்ரோலை பிடிக்கக் குவிந்தனர். அந்த சமயம் திடீரென்று டேங்கர் வெடித்துச் சிதறியது. இதில் 31 பேர் பலியாகினர்; […]

2045ம் ஆண்டுக்குள் விண்வெளியில் லட்சக்கணக்கான மக்கள் வசிப்பார்கள்!

2045ம் ஆண்டுக்குள் லட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள் என அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெஜோஸ் கூறியுள்ளார். உலகின் 3வது கோடீஸ்வரர், அமேசான் நிறுவனர், பிரபல தொழிலதிபர் என்ற பெருமைக்குரியவர் ஜெப் பெஜோஸ். இத்தாலிய தொழில்நுட்ப வார விழாவில் அவர் பேசியதாவது: அடுத்த ஓரிரு தசாப்தங்களில் லட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள். இது வேகமாக நடக்கப்போகிறது. இது தேவை காரணமாக நடக்காது. மக்களாகவே விரும்பி விண்வெளியில் வசிப்பார்கள். நிலவின் தரைபரப்பு அல்லது வேறு எங்கும் பணியாற்றுவதற்கு ரோபோக்களை அனுப்பி […]

தமிழகத்தில் ஆணவ படுகொலையை தடுக்க ஆணையம்?

ஆணவ படுகொலையை தடுக்க ஆணையம்’ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையிலான ஆணையத்தை உடனடி யாக கலைத்துவிட்டு, ஆணவ படுகொலை தடுப்பு சட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் இயற்ற வேண்டும்’ என, பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. தமிழகத்தில் கலப்பு திருமணம் செய்யும் காதல் ஜோடிகளை, ஜாதி காரணமாக பெற்றோர் ஆணவ படுகொலை செய்வது, கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. கடந்த 2013ல், தர்மபுரியில் நடந்த இளவரசன் ஆணவ படுகொலைக்கு பின், ஜாதி அடிப்படையிலான ஆணவ படுகொலைகள், மாநிலம் முழுதும் […]

தமிழகத்தில் ஏரிகளுக்கு அருகில் செல்ல நீர்வளத்துறை தடை விதிப்பு!

தமிழகம் முழுதும் நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள், 14,141 ஏரிகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சேலம், ஈரோடு, தேனி, மதுரை, திருவண்ணாமலை, கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பல அணைகளில் இருந்து பாதுகாப்பு கருதி, உபரி நீர் வெளியேற்றும் பணிகளில், நீர்வளத்துறையினர் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். அணைகள் திறப்பையும், நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதையும் பார்ப்பதற்காக, பொது மக்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்கு செல்வது வழக்கம். அசம்பாவித சம்பவங்கள் […]

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது ஜிம்பாப்வே

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அசத்திய ஜிம்பாப்வே அணி இன்னிங்ஸ், 73 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே சென்ற ஆப்கானிஸ்தான் அணி, ஒரே ஒரு டெஸ்டில் விளையாடியது. ஹராரேயில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 127, ஜிம்பாப்வே 359 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 34ஃ1 ரன் எடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 159 ரன்னுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. யாமின் அஹமத்சாய் (13) அவுட்டாகாமல் இருந்தார். […]

இந்தியா நியூசிலாந்துடன் இன்று மோதல்

உலக கோப்பை தொடரில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. காலிறுதி போன்ற இந்த சவாலில் வெல்லும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு அதிகம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இன்று நவி மும்பையில் நடக்கும் லீக் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இரு அணிக்கும் காலிறுதி போன்ற இந்த மோதலில், வெல்லும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும்.