வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் முன்னேற்றம் – கலந்துரையாடல்

2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில், அமைச்சுக்கள் சிலவற்றுக்கான முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் மற்றும் இந்த வருடம் டிசம்பர் 31வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. ஹெக்டர் அப்புஹாமியின் தலைமையில் பாராளுமன்றத்தில் இந்த குழு கூடிய போதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதற்கமைய, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு […]
நடிகை மனோரமாவின் மகன் மற்றும் இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் மரணம்!

மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி மற்றும் இசையமைப்பாளர் தேவா தம்பி சபேஷ் ஆகியோர் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத எவர்கிரீன் நடிகை மனோரமா. பெண் நடிகைகளில் 1000 படங்களுக்கு மேல் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து சாதனை படைத்தவர். 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம், மனோரமா மறைந்தார். இவரது ஒரே மகன் பூபதி(70), உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். மூச்சு திணறல் பிரச்சினையால் அவதிப்பட்ட வந்தார். கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
லசந்த விக்ரமசேகர கொலை: பாராளுமன்றில் எதிரொலி

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் ‘மிடிகம லாசா’ என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர (வயது 38) படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கறுப்பு ஆடையை அணிந்து இன்று வியாழக்கிழமை (23) எதிர்ப்பு தெரிவித்தனர். தனது காரியாலயத்தில் கடமையில் இருந்த போது, இனந்தெரியாத ஒருவர், நேற்று புதன்கிழமை (22) அன்று மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் லசந்த விக்ரமசேகர மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வட மாகாணசபையின் திணைக்களங்கள் அனைத்திலும் நேர முகாமைத்துவம் பின்பற்றப்பட வேண்டும் – ஆளுநர்

வட மாகாணசபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும் நேர முகாமைத்துவம் பின்பற்றப்பட வேண்டும் எனவும் திணைக்களத் தலைவர்கள் அதற்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் எனவும் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சிறப்பாகச் செயற்படும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கான கௌரவிப்புக்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், 2026ஆம் […]
பாராளுமன்றில் சிறப்பு பாதுகாப்பு ஆய்வு?

சிறப்பு பாதுகாப்பு ஆய்வுக்கு பாராளுமன்றம் உட்படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் இந்த ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் ஓய்வறைகள் மற்றும் அலுமாரிகள் உட்பட முழு நாடாளுமன்ற கட்டடமும் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். நவம்பர் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்ற கட்டடத்தின் உயர் பாதுகாப்பு பகுதிகளும் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அன்றையதினம் விருந்தினர்களுக்கு மட்டுமே […]
வடக்கு மற்றும் கிழக்கில் 672 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

வடக்கு மற்றும் கிழக்கில் 2025ஆம் ஆண்டு இதுவரை இராணுவம் கையகப்படுத்திருந்த 672 ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், விடுவிக்கப்பட்ட காணிகளில் 86.24 ஏக்கர் தனியார் காணிகளும், இராணுவப் பயன்பாட்டில் இருந்த 586 ஏக்கர் காணிகளும் அடங்கும் என்று தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் […]
பக்கவாதம் குறித்து சுகாதார நிபுணர்கள் இலங்கையருக்கு எச்சரிக்கை

25 வயதிற்கு மேற்பட்டவர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் (Stroke) ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்படவுள்ள உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், களுத்துறை போதனா வைத்தியசாலையின் விசேட நரம்பியல் வைத்தியர் சுரங்கி சோமரத்ன இந்தத் தகவலை வெளியிட்டார். பக்கவாத நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 30 வீதமானவர்கள் 20 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று வைத்தியர் சுரங்கி சோமரத்ன சுட்டிக்காட்டினார். உயர் […]
பந்துவீச்சாளர் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறினார் நொமன் அலி

டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு பாகிஸ்தானின் நொமன் அலி முன்னேறியுள்ளார். தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே ஆறாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை அடைந்துள்ளார். முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு, 1.ஜஸ்பிரிட் பும்ரா, 2. நொமன் அலி. 3. மற் ஹென்றி, 4. பற் கமின்ஸ், 5. ககிஸோ றபாடா, 6. ஜொஷ் ஹேசில்வூட், 7. ஸ்கொட் போலண்ட், 8. நேதன் லையன், 9. மிற்செல் ஸ்டார்க், குஸ் அட்கின்ஸன்.
வெள்ளவத்தையில் ரயில் மோதி ஒருவர் பலி

வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதியுள்ளார். ஆனால் அவர் யார் என்பது குறித்த அடையாளம் இன்னமும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். சடலம் களுபோவில மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனமழையால் ராவணா எல்ல பகுதியில் நீர்வரத்து அதிகரிப்பு

எல்லா-வெல்லவாய சாலையில் உள்ள ராவணா எல்ல பகுதியில் பெய்து வரும் கனமழையால் ராவணா எல்லையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிரிந்தி ஓயாவிலிருந்து சுமார் 25 மீட்டர் உயரத்தில் தொடங்கும் ராவண எல்ல நீர்வீழ்ச்சியின் நீர்ப்பாசனப் பகுதிகளில் உள்ள எல்லா மலைத்தொடரில் பெய்து வரும் கனமழையால், ராவண எல்லவுக்குள் நுழையும் நீர் அதிகரித்து நீர்வீழ்ச்சி நிரம்பி வழிகிறது. அங்குள்ள பாறைகள் வழுக்கும் தன்மை கொண்டவை என்பதைக் கருத்திற் கொண்டு அருவிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதைத் தவிர்க்குமாறு எல்ல […]