புலனாய்வு ஆணைக்குழுவின் போலி அதிகாரி கைது

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரியாகக் காட்டிக் கொண்ட ஒருவர் பொலன்னறுவையில் புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டார். பொலன்னறுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் குழு GPS கண்காணிப்பு மேலாளரான சந்தேக நபர், பொலன்னறுவையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஆணைக்குழுவிற்கு கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய […]

சம நிலையானது பாக் – தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர்!

பாகிஸ்தான், தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரானது சமநிலையில் முடிவடைந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே பாகிஸ்தான் வென்றிருந்த நிலையில், ராவல்பின்டியில் திங்கட்கிழமை (20) ஆரம்பித்து இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்டை தென்னாபிரிக்கா வென்ற நிலையிலேயே தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. போட்டியின் நாயகன்: கேஷவ் மஹராஜ் தொடரின் நாயகன்: செனுரன் முத்துசாமி

தேசிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த போலி வரைவு

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த போலி வரைவு சட்டமூலத்தை சமூக ஊடகங்களில் பரப்பியதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வரைவாக தவறாக முன்வைக்கப்பட்ட ஆவணம், அமைச்சகத்தாலோ அல்லது அதனுடன் இணைந்த எந்தவொரு நிறுவனத்தாலோ வெளியிடப்படவில்லை என்று அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்தார். போலி ஆவணத்தை உருவாக்கி விநியோகித்ததன் பின்னணியில் உள்ள நபர்களை அடையாளம் காண விசாரணைகள் நடந்து வருவதாகவும், […]

இலங்கையில் தங்கத்தின் விலை இன்றும் குறைந்தது!

தங்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகின்றது. அந்த வகையில் இன்று இரண்டு தடவைகள் தக்கம் விலை குறைந்துள்ளது. இன்று நண்பகல் வரை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாயால் குறைந்து விற்பனையாகி வந்த நிலையில், பிற்பகலின் பின்பு மீண்டும் தங்க விலை 5,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் நிலவும் தங்க விலைக்கு ஏற்ப, பாரிய வேறுபாடின்றி இலங்கையிலும் தங்க விலை நிர்ணயிக்கப்படும் என அகில […]

கடற்றொழிலாளர்களின் நலன்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும்!

தற்போதைய அரசாங்கம் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்வதில் ஆர்வம் காட்டுவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சங்கங்களின் இணையத் தலைவர் மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழிலில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செய்ய வேண்டி இருக்கின்றது என்றார். இந்த அரசாங்கத்தை கொண்டு வந்ததில் கடற்றொழில் சமூகமாகிய எங்களுக்கும் ஒரு பங்கு […]

சீரற்ற காலநிலை தொற்றுகளின் பரவல் தீவிரம் : சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மழைக்காலங்களிலும், ஆண்டு இறுதியிலும் பருவகால தொற்றுநோய் மிகவும் தீவிரமாக இருக்கும். பகல்நேர பராமரிப்பு மையங்கள், பாலர் பாடசாலைகள் மற்றும் பாடசாலை சிறுவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர் என குழந்தை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் மகேஷக விஜயவர்தன தெரிவித்துள்ளார். திடீர் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் மற்றும் சோர்வு ஏற்படுவதால் […]

வயாவிளான் தனியார் காணியில் சட்டவிரோத இராணுவ வைத்தியசாலை?

யாழ்ப்பாணம், வயாவிளானில் உள்ள தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வயாவிளானில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைத்திருக்கும் தனியார் காணியில் சட்டவிரோதமான முறையில் இராணுவ வைத்தியசாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண சபை […]

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை நிலவரப்படி, தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவியது. வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. […]

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது!

அம்பாறையில் இடம்பெற்று வரும் தங்கச் சங்கிலி கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை அம்பாறை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வாவின்ன மற்றும் பரகஹகெலே பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. நடத்திய விசாரணைகளுக்கமைய, அம்பாறை, இகினியாகல மற்றும் சம்மாந்துறை போன்ற பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட 4 தங்கச் சங்கிலிகளை அவர்களிடமிருந்து பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.  சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் […]

நாட்டில் நிலவும் கனமழை: 4 பேர் பலி; 12,142 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் கனமழை, பலத்த காற்றுடனான சீரற்ற வானிலை காரணமாக 4 பேர் உயிரிழந்ததாகவும் 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கணக்கெடுப்பின்படி, பலத்த மழை, காற்று முதலான இயற்கை அனர்த்தங்களினால் 14 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 480 வீடுகள் சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இயற்கைப் பேரிடர்கள் நிலவிவரும் இந்நாட்களில் அவசர தேவைக்காக தொடர்புகொள்வதற்கு 117 என்ற இலக்கத்துக்கு அழைக்குமாறு […]