இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் சில இடங்களில் சுமார் 75 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஜனவரி முதல் கல்விச் செயற்பாடுகளில் மாற்றம்?

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு 2026 ஜனவரி மாதம் அமுலுக்கு வரும் கல்வி சீர்திருத்தங்களில் தரம் 2 முதல் 5 மற்றும் 7 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் அவர்களுக்கு வழக்கம்போல் புத்தகங்கள் வழங்கப்படும். அத்துடன் கல்வி சீர்திருத்தங்களின் அடிப்படையில் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது. அதற்குப் பதிலாக எளிமைப்படுத்தப்பட்ட கற்றல் […]
சீரற்ற காலநிலை : மலையக ரயில் சேவை பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக மலையக ரயில் சேவைகள் இன்று புதன்கிழமை (22) நண்பகல் 12.00 மணி வரை நிறுத்தப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதனால் திட்டமிடப்பட்ட தபால் ரயில் சேவையும் இயங்காது. கொழும்பிலிருந்து ரயில் சேவைகள் ரம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் பதுளையிலிருந்து கொழும்புக்கு செல்லும் ரயில்கள் பேராதனை வரை மட்டுமே இயங்கும்.
வவுனியா மாநகர சபை நிர்வாகத்துக்கு இடைக்காலத் தடை!

வவுனியா மாநகர சபையின் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகம், உத்தியோகபூர்வமாகச் செயல்படுவதற்கு அடுத்த மாதம் 19 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (21) உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வவுனியா மாநகர சபையின் பிரதி மேயர் பரமேஸ்வரன் கார்த்தீபன் வவுனியா மாநகர சபை எல்லைக்குள் இல்லாமல் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைக்கு உட்பட்ட எல்லைக்குள் வசிப்பவர் எனத் தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வவுனியா மாநகர சபை எல்லைக்குள் வசிக்காத ஒருவர் […]
மூளையில் கிருமித் தொற்று; குழந்தை மரணம் – யாழில் சம்பவம்

யாழ். போதனா வைத்தியசாலையில் மூளைக் கிருமித் தொற்று ஏற்பட்டு பிறந்து 25 நாளேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. உயிரிழந்த சிசு கந்தர்மடம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களுடையதாகும். கடந்த மாதம் 27 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் சிசு பிறந்த நிலையில் காய்ச்சல் ஏற்பட்டதால் யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த முதலாம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்க் கிழமை சிசு உயிரிழந்துள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இந்த மரணம் […]
சீரற்ற காலநிலை: டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம்!

தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இலங்கை முழுவதும் நுளம்புகளின் அடர்த்தி அதிகரித்துள்ளது என்று சமூக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி, இந்த ஆண்டு மொத்தம் 40,538 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 44.3% பேர் மேல் மாகாணத்திலும், 13.9% பேர் சப்ரகமுவ மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. தற்போதைய வானிலை காரணமாக டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) […]
‘பலஸ்தீனத்துக்கு விடுதலை’ கோரி கொழும்பில் பேரணி!

பலஸ்தீனத்துக்கு ஆதரவாக நேற்று செவ்வாய்க்கிழமை (21) கொழும்பில் ஒன்றுகூடிய பெண் செயற்பாட்டாளர்கள், பலஸ்தீன மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்ளையும், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களையும் புரிந்த இஸ்ரேலியக் குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதுடன் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். நீண்டகாலமாக காஸா மீது இஸ்ரேல் நடத்திவந்த தாக்குதல்கள் அண்மையில் அமெரிக்காவின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து இடைநிறுத்தப்பட்டன. இந்நிலையில் இதுவரை காலமும் பலஸ்தீனத்தில் பாரிய மனிதப்பேரழிவு நிகழ்வதற்குக் காரணமாக இருந்த போர்க்குற்றங்களையும், மனிதகுலத்துக்கு எதிரான […]
சட்டத்தரணிகள், வைத்தியர்கள் வாகன அடையாள ஆவண நீக்கல் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி!

சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள ஆவணங்களை (பாஸ் ஸ்டிக்கர்களை) அகற்றுவது தொடர்பாக அரசினால் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லையென சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார். எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகவே சுகாதார அமைச்சர் மேற்படி பதிலை வழங்கியுள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜெயதிஸ்ஸ, மோட்டார் போக்குவரத்து மற்றும் பொலிஸ் உட்பட எந்தப் பிரிவினராலும் ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் வைத்தியர்களை அடையாளம் காணவும் மருத்துவமனைகளுக்கு எளிதாகச் […]