தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் நுவரெலிய வீரர்

இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் 10,000 மீற்றர் நிகழ்வில் நுவரெலியா அக்கரபத்தனை புதிய பிரஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த சசிகுமார் ரொஷான் பங்கேற்கவுள்ளார். அகில இலங்கை தடகளப் போட்டியில் 10,000 மீற்றர் தூரத்தை 30 நிமிடங்கள் 55 செக்கன்களில் நிறைவு செய்து முதலாமிடத்தை றொஷான் பெற்றிருந்தார். நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகும் நிகழ்வுக்காக நேற்று இந்தியாவுக்கு பயணமாகியிருந்தார்.

படுகொலை செய்யப்பட்ட “மிதிகம லசா”வுக்கும் “ஹரக் கட்டா”வுக்கும் இடையில் தொடர்பு?

படுகொலை செய்யப்பட்ட “மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத் என்பவருக்கும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன என்பவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். “மிதிகம லசா” இன்று புதன்கிழமை (22) காலை 10.30 மணியளவில் வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் இருக்கும் போது, மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத […]

நெதன்யாகுவை கைது முடிவைக் கைவிடுமாறு கனடாவுக்கு இஸ்ரேல் வலியுறுத்தல்

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான கைது அமல்படுத்தும் முடிவை கைவிடுமாறு கனடாவை இஸ்ரேல் வலியுறுத்தி உள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.இதில் குழந்தைகள், பெண்கள் ஆகியோரும் அடங்குவர். எனவே போர்க்குற்றம் செய்ததாக நெதர்லாந்து சர்வதேச கோர்ட்டில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு அவருக்கு எதிராக சர்வதேச கோர்ட் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இஸ்ரேல்-காசா போர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. அதேசமயம் […]

ஹமாஸ் அமைப்புக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

ஹமாஸ் அமைப்பினர் சரியான நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால் அவர்களின் முடிவு மோசமாகவும், கொடூரமாகவும் இருக்கும்,” என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே, கடந்த இரு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சித்தன. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டு, 20 அம்ச திட்டத்தை வலியுறுத்தியதை அடுத்து, சில நாட்களுக்கு முன் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. போர் நிறுத்தம் […]

தமிழகத்திலும் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

சென்னை: திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மேலும் 9 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை ஒட்டி நகர்ந்தது. அடுத்த 12 மணி நேரத்தில், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில், வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

கொழும்பு – மன்னார் பேருந்து விபத்தில் பலர் காயம்

கொழும்பிலிருந்து மன்னார் செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் இன்று புதன்கிழமை (22) அதிகாலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவில் குறித்த விபத்து .இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.. -குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

வெள்ளை மாளிகை பாதுகாப்பு வாயிலில் வாகனம் மோதியது?

வெள்ளை மாளிகைக்கு வெளியே பாதுகாப்பு வாயிலில் வாகனம் மோதியுள்ளது. அந்த நேரத்தில் ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தார் என்று ரகசிய சேவை தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (21) இரவு வெள்ளை மாளிகைக்கு வெளியே உள்ள பாதுகாப்பு வாயிலில் ஒரு நபர் வாகனத்தை ஓட்டிச் சென்றதாக ரகசிய சேவை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 17வது மற்றும் E தெருக்களின் மூலையில் உள்ள வாயிலில் இரவு 10:30 மணிக்குப் பிறகு நடந்த விபத்துக்குப் பிறகு அந்த நபர் உடனடியாக கைது […]

யாழில் இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியவரின் வீடு பொலிஸாரால் சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம் முளவையில் இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவரின் வீடு இன்று (22) யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை சோதனை நடத்தப்பட்டது. அண்மைக்காலத்தில் இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்ட காணொளியை பதிவேற்றம் செய்தமை, சட்டவிரோத சொத்துக் குவிப்பு போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நபரின் வீட்டில் […]

நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் சிறு நிதிக் கடனாளிகள் தகவல்கள் திரட்டல்

நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் சிறு நிதிக் கடன்களை மீளச்செலுத்த முடியாதவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நுவரெலியா, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே மேற்படி நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. சிறு நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குறித்த உபகுழு அதன் தலைவர் […]

செவ்வந்திக்கு உதவிய மேலும் ஐவர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் உள்ள வீட்டின் உரிமையாளர், சந்தேக நபரை தப்பிச் செல்ல ஏற்பாடு செய்தவர் என்றும், படகை வழங்கியவர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர். இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஒன்பது பேரை […]