நல்லிணக்கத்துடன் கூடிய நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் ‘இலங்கையர் தினம்’

நாட்டு மக்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் ‘இலங்கையர் தினமாக’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி 2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்ட உரையில் முன்மொழிந்துள்ளார். இந்நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12,13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பு மாநகர சபை மைதானத்திலும் மற்றும் விகாரமாதேவி பூங்கா […]
பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சார்கோசிக்கு சிறைத் தண்டனை

சட்டவிரோதமாக நிதி பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சார்கோசி சிறையில் அடைக்கப்பட்டார். பிரான்சில், 2007 முதல் 2012 வரை அதிபராக இருந்தவர் நிக்கோலஸ் சார் கோசி. இவர், அதிபர் தேர்தல் பிரசாரத்திற்காக லி பியா நாட்டின் முன்னாள் அதிபர் கடாபியிடம் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றார் என குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சமீபத்தில் வழங்கப்பட்ட உத்தரவில், சர்கோசிக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அவர், பாரிசில் உள்ள சிறையில் […]
உகாண்டாவில் பஸ் விபத்து : 46 பேர் உயிரிழப்பு

உகாண்டாவில் இரண்டு பஸ்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்தனர். உகாண்டா உள்ளிட்ட கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் சாலைகள் பொதுவாக குறுகியதாகவே இருக்கிறது. இதனால் அங்கு அடிக்கடி விபத்து நிகழ்கிறது. உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது. அங்கு சாலை விபத்துகளில் கடந்த 2023 ல் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் கடந்த ஆண்டு மட்டும் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது.
குறிகட்டுவான் இறங்குதுறையை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

போக்குவரத்து, யாத்திரிகர் பயணங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தியில் இறங்கு துறையின் முக்கியத்துவத்தை அடையாளங் கண்டு இடைநிலை வரவு செலவுத்திட்ட சட்டகத்தின் கீழ் குறிகட்டுவான் இறங்குதுறையை புனரமைக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நயினாதீவு மற்றும் நெடுந்தீவு போன்ற இரண்டு தீவுகளுக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் இணைக்கும் பிரதான சமுத்திர அணுகல் வழியாக குறிகட்டுவான் இறங்குதுறை பயன்படுத்தப்படுகின்றது. இவ் இறங்குதுறை மூலம் குறித்த தீவுகளுக்கு பயணம் […]
சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் யுவதி தற்கொலை!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி, ஐயனார் கோயிலடி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவருகின்றது. மேற்படி யுவதி கடந்த 15ஆம் திகதி தனக்குத் தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி யுவதி நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
திட்டமிடப்பட்ட லங்கா பிரீமியர் லீக் 2025 நடத்தப்படாது!

லங்கா பிரீமியர் லீக் (LPL) 2025 இந்த ஆண்டு திட்டமிடப்பட்டபடி நடத்தப்படாது என்று இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியாவுடன் இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான நாட்டின் பரந்த தயாரிப்புகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும், ஒரு பெரிய உலகளாவிய நிகழ்வை நடத்துவதற்கான அனைத்து இடங்களும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தரநிலைகளை […]
தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை

கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று புதன்கிழமை (22) ஆஜராகி 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் வீட்டிற்கு கடந்த 18ஆம் திகதி சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர், முகநூலில் கட்சியின் தலைவர், விடுதலைப் புலிகளின் தலைவர் ஆகிய இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை […]
சட்ட விவகாரங்கள் குறித்து கவனமாக செயற்படுமாறு ஊடகங்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

பொலிஸாரின் நடவடிக்கைகள், சட்ட விவகாரங்கள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய விடயங்கள் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடுவது குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸாரின் அனுமதியின்றி தடைசெய்யப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளிகளை ஊடகங்களில் வெளியிட தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைத்து ஊடகங்களில் வெளியிடவும் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தடைசெய்யப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளிகளை ஊடகங்களில் வெளியிடுவதால் பொலிஸாரின் விசாரணைகளில் பாதிப்பு ஏற்படலாம் அல்லது குற்றங்கள் […]
இலங்கையின் அபிவிருத்திக்கு தென்கொரியா தொடர்ந்து உதவும்

பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ (ஆலைழn டுநந) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பிலும், இலங்கையின் கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் கல்வித் துறையின் டிஜிட்டல் மயமாக்கலை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. குளியாப்பிட்டியில் அமைக்கப்படவுள்ள புதிய தொழில்நுட்ப தேசிய கல்வியியல் கல்லூரியை அபிவிருத்தி செய்தல் தொடர்பிலும் தொழிற்கல்வி தொடர்பான பாடங்களை தேசிய பாடத்திட்டத்தில் ஒருங்கிணைத்தல் தொடர்பிலும் […]
அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவரின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகி உள்ளது. இந்த விலை திருத்தங்கள் நேற்று (21) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாயாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ […]