‘திரௌபதி 2 ‘பட பிரத்தியேக போஸ்டர் வெளியீடு

ரிச்சர்ட் ரிஷி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரௌபதி 2’ படத்தின் பிரத்யேக போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘திரௌபதி 2’ எனும் திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி முதன்மையான கதாபாத்திரத்தில் அரசராக தோன்றி நடிக்கிறார். இவருடன் ரக்க்ஷனா இந்து சுதன், நட்டி நடராஜ், வை. ஜி. மகேந்திரன், இயக்குநரும், நடிகருமான சரவண சுப்பையா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிலிப் ஆர். சுந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சரித்திர […]
மீண்டும் வெளியாகிறது விஜய் – சூர்யா இணைந்து நடித்த ‘பிரண்ட்ஸ்’

ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றி பெற்ற திரைப்படங்கள் மீண்டும் புதிய தொழில்நுட்பத்தில் மறு வெளியீடு செய்வது புதிய டிரெண்டாகி இருக்கிறது. அந்த வகையில் விஜய் – சூர்யா இணைந்து நடித்த ‘பிரண்ட்ஸ்’ திரைப்படம் மீண்டும் பட மாளிகையில் வெளியாகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திரையுலகத்திலிருந்து அரசியலுக்கு தாவிய விஜய் – திரையுலகத்தில் தொடர்ந்து இருந்தாலும் வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் சூர்யா- இந்த இருவரும் இணைந்து நடித்து 2001 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் ‘பிரண்ட்ஸ்’. […]
தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாதணி

2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்றும் துறவு மாணவர்களுக்கான பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் சிட்டைகளை 2025 பாடசாலை தவணை முடிவடையும் போது பயனாளிகளுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வவுச்சர்சிட்டைகள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சால் நலன்புரிக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள பரிசு வழங்கும் கைத்தொலைபேசி மென்பொருள் மூலம் ஸ்கான் செய்வதற்கு இயலுமாகும் வகையில் பிரத்தியேகக் குறியீட்டுடன் பாதுகாப்பாக அச்சிட்டு பயன்பெறுகின்ற மாணவர்களுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் கீழ்வரும் வகையில் […]
கோட்டை தொடக்கம் அவிசாவளை வரை புகையிரதப் பாதை

2025 ஆம் ஆண்டு வரவு -செலவுத்திட்டத்தின் மூலம் புகையிரதப் போக்குவரத்து நவீனமயப்படுத்தலின் கீழ் வினைத்திறனான புகையிரத சேவைகளை வழங்குதல் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக தற்போது இயங்கி வருகின்ற களனிவெளி புகையிரதப்பாதையை அவிசாவளையிலிருந்து மேலும் படிப்படியாக நீடிப்பதற்கு முன்மொழியப்பட்டு, அதற்குரிய அடிப்படை வேலைகளை ஆரம்பிப்பதற்கு 250 மில்லியன் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. களனிவெளி (கொழும்பு கோட்டை தொடக்கம் அவிசாவளை வரைக்குமான) புகையிரதப்பாதையை இரத்தினபுரி வரைக்கும் நீடிப்பதற்கான சாத்தியவளக் கற்கையை மேற்கொள்ளல் மற்றும் விரிவான திட்டத்தைத் தயாரித்தலுக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு […]
சட்டவிரோத சொத்துக்குவிப்பு: விமலின் வழக்குக்கு திகதி குறிப்பு

சுமார் 75 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் நிதியை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (22) திகதி நிர்ணயம் செய்தது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் முன் விசாரணைக்கு வந்தது, அவர் டிசம்பர் 18 மற்றும் ஜனவரி 20 ஆகிய திகதிகளை விசாரணைக்காக நிர்ணயித்தார். இலஞ்ச […]
அம்பலமாகிறது கடத்தல் வலையமைப்பு; செவ்வந்தியின் பின்னணி

பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளை படகு மூலம் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக கடத்தும் ஒரு வலையமைப்பை கொழும்பு குற்றப்பிரிவு அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வலையமைப்பு, இந்தியாவில் இருந்து கடல் வழியாக கேரள கஞ்சாவை நாட்டிற்கு கொண்டு வரும் குழுவுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் சக்திவாய்ந்த குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் உட்பட சுமார் 100 பேர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி குழுவைச் […]
அநுர அரசுக்கு சஜித் அணி சவால்

உங்களால் முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்குச் சவால் விடுக்கின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசின் வாக்கு வங்கி 23 இலட்சத்தால் குறைவடைந்தது. மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் இந்த நிலைமை மேலும் மோசமாகும். மீண்டும் 3 சதவீதத்துக்கு இறங்கிவிடுவோம் என அரசு அஞ்சுகின்றது. முடிந்தால் தேர்தலை நடத்துமாறு அரசுக்குச் சவால் விடுக்கின்றோம் என்றார். […]
யாழ். மேல் நீதிமன்றில் சுமந்திரனால் மனு!

ஆசிரியர் இடமாற்ற தீர்மானித்திற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காக, இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரின் மனுவில் கல்வித் திணைக்களத்தின் தீர்மானத்தின் படி, 290 ஆசிரியர்கள் தரவுகள் எவையுமின்றி, முறையற்ற விதமாக இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள் – பாராளுமன்றில் சாணக்கியன்

அமைச்சர் சத்துரங்க அபேசிங்க மற்றும் பிரதியமைச்சர் நஜீத் இந்திக்க ஆகியோர் கிங்ஸ்பெரி ஹோட்டலில் வர்த்தகர் ஒருவரை சந்தித்து கலந்துரையாடியதாக இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “களுத்துறை கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான மதுபான உற்பத்தி நிறுவனத்தை விற்பனை செய்வதற்காகவே இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இந்த அனுமதிப்பத்திரத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யவே முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. நான் குறித்த தனியார் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. அதற்கான […]
தங்கத்தின் விலை திடீரெனக் குறைந்தது!

நாட்டில் இன்றைய (22) தினம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது, ஒரு பவுன் தங்கத்தின் விலை 30,000 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று காலை 350,000 ரூபாவாக குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று பிற்பகலில் பவுன் ஒன்றின் விலை 340,000 ரூபாவாக மேலும் குறைவடைந்துள்ளது. அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் […]