போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் இன்று 22ஆம் திகதி புதன்கிழமை போதை மாத்திரை வியாபாரி ஒருவரும் சந்தேகநபர் ஒருவருமென இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 110 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டன. யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் […]

உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்!

உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அல்லது இளஞ்சிவப்பு மாதமாகக் கருதப்படும் ஒக்டோபர் மாதத்தில் இந்த விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டலுக்கான சின்னம் மற்றும் கைப்பட்டி அணிவிக்கும் நிகழ்வு இன்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஆளும் […]

நரம்பு விருத்திக் குறைபாடுகளைக் கொண்ட சிறுவர்களுக்கு ஐந்தாண்டு தேசிய வேலைத்திட்டம்

மனவளர்ச்சி குறைபாடு (ஒட்டிசம்) உள்ளிட்ட நரம்பு விருத்திக் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகளின் எண்ணிக்கை கடந்த சில தசாப்தங்களாக அதிகரித்துள்ளது. அதற்கமைய, மேலெழுந்துள்ள சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக சுகாதாரம், கல்வி மற்றும் சேவை வசதிகளை மேம்படுத்துவதற்கு ஐந்தாண்டு தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்பப் படிமுறையாக சர்வதேச தரநியமங்களுக்கு இணங்க மனவளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட நரம்பு விருத்திக் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகளுக்கான சிகிச்சை நிலையமொன்றை கொழும்பு சீமாட்டி றிச்வே சிறுவர் மருத்துவமனையில் நிறுவுவதற்கு 2025 ஆம் ஆண்டு […]

மின்சார சபை மறுசீரமைக்கப்படும்

பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட்டு, புதிதாக 6 நிறுவன கட்டமைப்புக்கள் உருவாக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் பதிலளித்ததாவது, வரிச்செலுத்தும் மக்களுக்கும், பொதுத் திறைச்சேரிக்கும், அரச வங்கிகளுக்கும் பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள […]

நுவரெலியாவில் ’பொது நிவாரண தினம்’

நுவரெலியா மாவட்ட டி.ஐ.ஜி. அலுவலகத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய திட்டமாக, ‘பொது நிவாரண தினம்’ நுவரெலியா மாவட்ட டி.ஐ.ஜி. பிரியந்த சந்திரசிறி தலைமையில், ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமைகளில் நடைபெறும் என்று நுவரெலியா மாவட்ட டி.ஐ.ஜி. அலுவலகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்குரிய சூழ்நிலைகள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஏற்படுத்தும் அழுத்தம், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவன அதிகாரிகளால் ஏற்படும் அழுத்தம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதிகள், பெண்கள் […]

இலங்கையில் மாகாண தேசியப் பாடசாலைகளில் 36,178 ஆசிரிய வெற்றிடங்கள்!

மாகாண மற்றும் தேசியப் பாடசாலைகளில் தற்போது 36,178 ஆசிரியர் காலியிடங்கள் இருப்பதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார், இதில் தேசியப் பாடசாலைகளில் 1,501 காலியிடங்களும் அடங்கும். மாகாணப் பாடசாலை காலியிடங்கள் பின்வருமாறு விநியோகிக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்: மேல் மாகாணம் – 4,630, தெற்கு – 2,513, மத்திய – 6,318, வடமேற்கு – 2,990, ஊவா – 2,780, வடமத்திய – 1,568, கிழக்கு – 6,613, சபரகமுவ – 3,994, […]

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடு ?

சபாநாயகருக்கு எதிராகவும் இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இரண்டு வீடுகளை பாவிப்பதாகவும், அதற்குரிய வாடகை பெறுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆகவே சபாநாயகர் அக்கிராசனத்தில் அமரமுடியாது என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை கடுமையாக சாடினார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது, ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினருக்கு எதிராக இலஞ்சம் அல்லது […]

கடற்படை தலைமையகத்திற்கு ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கல்லூரி தூதுக்குழு விஜயம்

கடற்படை தலைமையகத்திற்கு ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தூதுக்குழு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டது. ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கர்னல் Brandon Wood தலைமையிலான ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறியைப் பயிலும் மாணவர்கள் குழு,நேற்று அக்டோபர் 21 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தனர். இந்த உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கையில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் […]

ஊடகவியலாளர்களுக்கான நீதி விசாரணைகளில் முன்னேற்றம் உண்டு!

2010ஆம் ஆண்டு முதல் இன்றவில் 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே பல்வேறு வகையிலான தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று புதன்கிழமை (22) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 2010ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை படுகொலை, கடத்தல் மற்றும் தாக்குதல்களுக்கு இலக்கான ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதனையும் இவர்களின் […]

வசூலில் சாதனை படைத்த டீசல்!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் டீசல். இப்படத்தை இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி இயக்கியிருந்தார். இப்படத்தில் அதுல்யா ரவி, வினய், அனன்யா, காளி வெங்கட், யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 17ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், தங்கள் திரைப்படத்திற்கு குறைவான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதாக படத்தின் இயக்குநர் கூறியிருந்தார். இந்த நிலையில், டீசல் திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் […]