பிரபல பாலிவுட் சினிமா நடிகர் அஸ்ரானி காலமானார்!
பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான கோவர்தன் அஸ்ரானி காலமானார். அவருக்கு வயது 84. அவர் அஸ்ரானி என சினிமா ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார். திங்கட்கிழமை (அக்.20) அன்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார். இதை அவரது மேலாளர் உறுதி செய்தார். சினிமா உலகில் சுமார் 5 தசாப்தங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஆறு படங்களை இயக்கி உள்ளார். சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘சோலே’ படத்தில் இவரது […]
“நான் சாதியால் நெருக்கடிக்கு ஆளானவன்” – மாரி செல்வராஜ் ஆதங்கம்!
நான் சாதியால் நெருக்கடிக்கு உள்ளான ஒரு ஆள்” என்று மாரி செல்வராஜ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். ‘பைசன்’ திரையிடப்பட்டு வரும் திரையரங்குகளுக்கு சென்று விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. இதற்காக திருநெல்வேலியில் உள்ள ராம் திரையரங்கிற்கு சென்றார்கள். இதில் இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷா விஜயன் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். பார்வையாளர்களுடன் உரையாடிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு ஆதங்கத்துடன் பதிலளித்துள்ளார் மாரி […]
‘தூம் 4’ படத்திலிருந்து அயன் முகர்ஜி விலகல்!
‘தூம் 4’ இயக்குநர் பொறுப்பில் இருந்து அயன் முகர்ஜி விலகியிருக்கிறார். அயன் முகர்ஜி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘வார் 2’. இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து ‘தூம் 4’ படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருந்தார். தற்போது அப்பொறுப்பில் இருந்து விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக வேறொருவரை இயக்குநராக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. ‘பிரம்மாஸ்திரா 2’ படத்திற்கான திரைக்கதையை எழுதும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் அயன் முகர்ஜி. அடுத்த ஆண்டு இதற்கான பணிகளைத் தொடங்கவிருப்பதால் தான் ‘தூம் 4’ […]
அரசாங்கத்திடமிருந்து அவசர வேலைத்திட்டமொன்று அவசியம்!
அனர்த்த நிலைமைக்கு மத்தியில் அனர்த்த முகாமைத்துவக் குழு மூலம் வழங்கப்பட வேண்டிய சேவைகளை அவசரமாக முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாத்தறை மாவட்டத்தில் நில்வலா அணைக்கட்டு பிரச்சினை காரணமாக அதிக அளவிலான விவசாய வயல் நிலங்கள் சேதமடையப் பார்க்கின்றன. எமக்கு கிடைக்கும் தகவல்களின் படி இந்த அனர்த்த நிலையால், 3 மனித உயிர்கள் பலியாகியுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 🟩 அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க நாமும் தயார். […]