பாகிஸ்தான் – ஆப்கான் மோதல், சீன – சவூதி அரேபிய நாடுகள் சமதான முயற்சி!
பிராந்திய அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு ஏற்ற முறையில் தீவிரவாதத்தை ஒழிக்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் சீனவும் சவூதி அரேபியாவும் முன்வந்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அரசுடன் ஏற்பட்ட மோதலினால் மூடப்பட்ட பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் திறக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக பாகிஸ்தான் ருடே (pakistantoday) என்ற ஆங்கில நாளிதழ் இன்று செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் […]
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு கடவுச்சீட்டு செய்து கொடுப்பது யார்? நாமல் ரஜபக்ச கேள்வி!
போதைப்பொருள் உட்பட வேறு பல குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக தப்பிச் செல்ல வசதியாகக் கடவுச்சீட்டு செய்து கொடுக்கும் நபர்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊழல்மோசடி – அதிகாரத்துஸ்பிரயோகம் ஆகியவற்றை இல்லாதொழிப்பதாக கூறுகின்ற இந்த அரசாங்கம், சில பிரதான குற்றவாளிகள் இரகசியமாக கடவுச்சீட்டு செய்து கொண்டு, தப்பிச் செல்வதை ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீலங்கா […]
தீபாவளி பண்டிகையால் ஜொலித்தது அயோத்தி: 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை!
அயோத்தி சரயு நதிக்கரையில் நேற்று 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனை படைத்துள்ளது. தீபாவளியையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ராமர் கோயில் வளாகத்தில் நேற்று 22 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. ராமாயணக் காட்சிகள், கும்ப மேளா, மகளிர் முன்னேற்றம், பிரம்மோஸ் ஏவுகணை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்ட […]
பாராளுமன்ற உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்துவருமாறு சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவிப்பு!
“ஒக்டோபர் மாத சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வூட்டல் நிகழ்வை” முன்னிட்டு 2025 ஒக்டோபர் 22 ஆம் திகதி, அதாவது நாளைய தினம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் முடியுமாயின் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்துவருமாறு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார். அத்துடன், ஒக்டோபர் மாத சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வூட்டலை முன்னிட்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் நாளைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அணிவதற்காக அடையாளச்சின்னமொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அடையாளச்சின்னம் […]
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 127-ல் சுருண்டது ஆப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஹராரேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 127 ரன்களில் சுரண்டது. தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரன் 19 ரண்களும் அப்துல் மாலிக் 30 ரன்களும் அடித்தனர். அதன்பின் வந்த குர்பாஸ் 37 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் […]
உலக ஜூனியர் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தன்விக்கு வெள்ளிப்பதக்கம்!
உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தன்வி ஷர்மா, தாய்லாந்தின் அனயாபட் பிசிட் பிரீசாசக்கை எதிர்கொண்டார். 28 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் தன்வி ஷர்மா 7-15, 12-15 என்ற நேர் செட்டில் அனயாபட்டிடம் தோல்வியை தழுவினார். இதனால் அவர் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. உலக ஜூனியர் பேட்மிண்டனில் 17 ஆண்டுக்கு பிறகு பதக்கத்தை ருசித்த இந்திய […]
“நம் மீது வெளியே பாய்ந்தாலும் உள்ளே பாராட்டுவர்” – ஆஸ்திரேலியர் குறித்து கோலி மனம் திறப்பு!
விராட் கோலி தனது கடைசி ஆஸ்திரேலியப் பயணத்தில் ஆடி வருகிறார். ஆஸ்திரேலியர்களின் குணாதிசயம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் விராட் கோலி. நேற்று பெர்த் பவுன்ஸி பிட்சில் முதல் ஒருநாள் போட்டியில் மழை இடையூறு காரணமாக இந்திய அணி சோபிக்க முடியாமல் தோற்றது. இதில் விராட் கோலி ஆஸ்திரேலிய பவுன்ஸ் பிட்சில் எப்படி ஆடக்கூடாதோ அப்படி ஆடி அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதாவது முன்னங்காலை முன்னால் நீட்டி ஆஃப் ஸ்டம்ப் பந்தை ட்ரைவ் ஆடினால் இந்தியப் […]
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷாஹின் ஷா அஃப்ரிடி நியமனம்!
சால்ட், ஹாரி புரூக், ரஷீத் அபாரம்: நியூஸிலாந்தை ஊதி தள்ளிய இங்கிலாந்து!
கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று (அக்.20) நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி, நியூஸிலாந்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. முதல் போட்டி மழையால் முழுதும் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர், தவறாக முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார். இங்கிலாந்து போட்டு சாத்து சாத்து என்று சாத்தி எடுத்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 […]
”அடுத்த சிம்பொனியை எழுத இருக்கிறேன்” – இளையராஜா அறிவிப்பு!
புதிய சிம்பொனி ஒன்றை எழுத இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். லண்டனில் கடந்த மார்ச் 8-ம் தேதி ‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் பாரம்பரிய சிம்பொனி இசையை அங்குள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில் அரங்கேற்றம் செய்தார் இளையராஜா. உலகின் மிகச் சிறந்த ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து அவர் இதை அரங்கேற்றினார். அவரது இசைக் குறிப்புகளை நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பல்வேறு இசைக் கருவிகளில் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இதன்மூலம், ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை […]