கெசினோ வரி அதிகரிப்பு!

2025 அக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில், கெசினோ உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி தற்போதுள்ள 10 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (21) தாக்கல் செய்தார். இலங்கை குடிமகனிடமிருந்து வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம் தற்போதைய 50 அமெரிக்க டொலர்களில் இருந்து 100 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்படும். வெளிநாட்டினருக்கான நுழைவு கட்டணம் வர்த்தமானியால் அதிகரிக்கப்படவில்லை. இது கெசினோ வரி மற்றும் நுழைவு கட்டணங்களை 2025 பட்ஜெட் […]
தென் கொரிய பிரதி சபாநாயகரை சந்தித்தார் நாமல்!

தென் கொரியாவிற்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஒரு சுமுகமான கலந்துரையாடலுக்காக கொரிய தேசிய சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் ஜூ ஹோ-யங்கை சந்தித்தார். இலங்கையின் மரியாதைக்குரிய புத்த துறவியும் நீண்டகால நண்பருமான வண. யியோங்-டாம் லிமின் அழைப்பின் பேரில் ராஜபக்ஷவின் வருகை அமைந்துள்ளது. தனது விஜயத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் புச்சியோனில் உள்ள சியோக்வாங்சா விஹாரைக்கும் […]
“தங்கத்துக்காகவே வடக்கு முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றினர்”

தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லிம்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்ற ஓர் ஆய்வும் தற்போது வெளியாகியுள்ளது என்று, வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பு ஆய்வாளர் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரும் நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அஷ்-ஷஹீத் அஹமட் லெப்பை ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற போது அதில் அவர் மேற்கண்டவாறு […]
அதிரடியாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கத் திட்டம் – ஐ.தே.கவில் ஹரீனுக்கு புதிய பதவி!

ஐக்கிய தேசியக் கட்சி உடனடியாக அமலுக்கு வரும் வகையில் புதிய முக்கிய பதவியை உருவாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அரசியல் அணிதிரட்டல் பிரதி செயலாளர் நாயகமாக (Deputy Secretary General of Political Mobilization) நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட பதவி, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுத்துவதாகும். அதற்கு மேலதிகமாக, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்யும் ஆயிரம் […]
த்ரில் முடிவுடன் மகளிர் உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு முதல் வெற்றி!

நவி மும்பையில் நேற்று (21) இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகள் இடையே நடைபெற்று முடிந்த 2025ஆம் ஆண்டின் மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை பங்களாதேஷ் மகளிரை 07 ஓட்டங்களால் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியுடன் இந்த உலகக் கிண்ணத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள இலங்கை வீராங்கனைகள், உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பினையும் உயிர்ப்புடன் வைத்துள்ளனர். முன்னதாக போட்டியினா நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் […]
சிறுமி மீது சூடு வைத்த, தாயின் கள்ளக்காதலன்!

5 வயதுடைய சிறுமியின் தாயாரின் கள்ள காதலன், குறித்த சிறுமியின் உடல் முழுக்க சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்ததில் சிறுமி படுகாயமடைந்து ஞாயிற்றுக்கிழமை (19) அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சித்திரவதை செய்த நபர் தலைமறைவாகியுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். மட்டு. கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் கணவரை பிரிந்து தன் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பகுதியைச் சேர்ந்த திருமணம் முடித்த ஆண் ஒருவருடன் அறிமுகமாகி […]
இன்றும் 100 மி.மீ மழை பெய்யும் சாத்தியம்!

இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. பிற்பகல் […]
கொழும்பில் கடும் மழை. வீதிகளில் போக்குவரத்து நெரிசல் – அலுவலகங்களில் ஊழியர் வருகை குறைவு!

தொடர்ந்து மழை பெய்வதால், கொழும்பு நகர வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில வீதிகளில் வெள்ளம் நிற்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனச் சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பொரள்ளை, மருதானை, இராஜகிரிய பிரதேச வீதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, இலங்கைக்கு கிழக்காக விரிவடைந்து வரும் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை, சில மணி நேரத்தில் குறைவடையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, இன்று […]
அடங்க மறுத்தால் அழிவது உறுதி – ட்ரம்ப எச்சரிக்கை!

“ஹமாஸ் இயக்கத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. கடந்த 13-ம் திகதி எகிப்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி அல் சிசி தலைமையில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. எனினும் போர் நிறுத்தம் தொடங்கியபிறகும் ஹமாஸ் – […]
செயலிழந்த அரச இணைய சேவைகள் வழமைக்கு!

‘இலங்கை அரச கிளவுட்’ சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது. குறித்த சிக்கல் நிலை காரணமாக முடங்கியிருந்த அனைத்து அரச இணைய சேவைகளையும் இன்று (21) முதல் பொதுமக்கள் வழக்கம் போல் பயன்படுத்த முடியும் என அதன் பேச்சாளர் தெரிவித்தார். ‘இலங்கை அரச கிளவுட்’ சேவையில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக, பல அரச நிறுவனங்களால் இயக்கப்படும் இணைய சேவைகள் கடந்த ஒருவார […]