பாதாளக் குழுவுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் கதறல்

சட்டம் தற்போது உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய தரப்புகளே அரசியல் பழிவாங்கல் என்று விமர்சித்து வருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், குற்றவாளிகள், பாதாள உலகக் குழுவினர், போதைப்பொருள் வியாபாரிகள் ஆகியோரைக் கைது செய்த பின்னர் அவர்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையிலேயே கைதுகள் இடம்பெறுகின்றன. இது அரசியல் பழிவாங்கல் அல்ல. அவ்வாறு கூறி சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்க […]

359,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கருவாட்டு தொகையில் மறைத்து வைத்து ஏற்றிச் செல்லப்பட்ட 359,000 போதை மாத்திரைகளுடன் வவுனியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர் கற்பிட்டியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

மலையகத்துக்கான ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு

இஹல கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (19) தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி தடம்புரண்ட ரயிலை மீள் தடமேற்றும் பணிகள் மேலும் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. இதனால் இன்று காலை 07 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ரயில் மீள் தடமேற்றும் நடவடிக்கையில் மேலும் தாமதம் ஏற்படக்கூடும் என்பதால், மேலும் இரண்டு ரயில் […]

இந்திய – ஆப்கானிஸ்தான் புதிய உறவு, முதலீட்டாளர்கள் காபூல் செல்லும் சந்தர்ப்பம்

இந்தியா – ஆப்கானிஸ்தான் புதிய உறவு தொடர்பாக அயல்நாடான பாகிஸ்தான் கோபமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இந்திய – ஆப்கானிஸ்தான் உறவு இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்ற தொனியில் என்டிரிவி (ndtv) ஊடகம் விமர்சனம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறிய பின்னர், 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அன்றில் இருந்து இந்த ஆண்டு முற்பகுதி வரையும் பாகிஸ்தான் அரசுடன் உறவைப் பேணி வந்த […]

கிளிநொச்சிக்கு அழைத்து செல்லப்பட்ட செவ்வந்தி, சாவகச்சேரி பெண் ஏமாற்றப்பட்டார?

சிங்கள  மொழி பேசத்  தெரிந்திருக்க வேண்டும் என்று பொய்கூறியே யாழ்ப்பாணம் சாவகச்சேரி பெண் நோபாளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனாலும் மேலும் உண்மைகளை அறியும் நோக்கில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன. கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை ஐரோப்பிய நாடொன்றுக்கு அனுப்பும் நோக்கில், செவ்வந்தியை ஒத்த தோற்றமுடைய சாவகச்சேரியை சேர்ந்த தக்சி என்ற பெண்ணை மற்றொரு சந்தேகநபரான சுரேஸ் கண்டுபிடித்திருக்கிறார். குறிப்பாக, பிரதான சந்தேகநபரான […]

ரசிய எரிவாயு நிலையம் மீது உக்ரெயன் தாக்குதல், ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு பாதிப்பு

உக்ரெய்ன் தலைநகர் கிவ்வில் இருந்து 1,700 கிமீ தொலைவில் ரசியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரேன்பர்க் எரிவாயு நிலையம் மீது உக்ரெயன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எரிவாயு நிலையத்தின் ஒரு பகுதி முற்றாக தீயில் எரிந்துள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ரொய்டர்ஸ் (Reuters) தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் இல்லையென ஒரேன்பர்க் பிராந்திய ஆளுநர் யெவ்ஜெனி சோல்ட்செவ் தெரிவித்துள்ளார். அதேநேரம் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக உக்ரெயன் தெரிவித்துள்ளது. இத் தாக்குதல் தொடர்பாக ரசிய பாதுகாப்பு […]