‘ஆட்டி’யில் உண்மை சம்பவக் கதை

‘மேதகு ; பாகம் 1’, ‘சல்லியர்கள்’ ஆகிய படங்களை இயக்கிய தி.கிட்டு இயக்கியுள்ள படம், ‘ஆட்டி’. லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அபி நட்சத்திரா, காதல் சுகுமார், சவுந்தர், பிரவீன் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்.24-ம் தேதி வெளியாகிறது. படம் பற்றி இசக்கி கார்வண்ணன் கூறும்போது, “இது பீரியட் கதையை கொண்ட படம். கொஞ்சம் வரலாற்றுப் பின்னணியிலும் இதன் கதை இருக்கும். சில உண்மைச் சம்பவங்களின் […]

‘பிளைண்ட்’ படம் மூலம் இயக்குநராகும் ஆர்.கே.சுரேஷ்

பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். இதில் அவர் கொடூர வில்லனாக நடித்திருந்தார். அடுத்து விஷாலின் ‘மருது’, ‘பில்லா பாண்டி’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’, ‘தலைவன் தலைவி’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களையும் தயாரித்து வரும் அவர், இப்போது இயக்குநராக அறிமுகமாகிறார். அவர் இயக்கும் படத்துக்கு ‘பிளைண்ட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்தை ஸ்டூடியோ 9 புரொடக் ஷன்ஸ் மூலம் மாதவி சுரேஷ் […]

சில மாவட்டங்களுக்கு ஒரு நாள் சேவை ஓட்டுநர் உரிமங்களை அச்சிடத் திட்டம்

அடுத்த ஆண்டு முதல் குருநாகல், பதுளை மற்றும் அம்பாறை மாவட்ட அலுவலகங்கள் மூலம் ஒரு நாள் சேவையின் கீழ் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இந்த ஒரு நாள் சேவை தற்போது வேரஹெர மற்றும் ஹம்பாந்தோட்டை அலுவலகங்கள் மூலம் மட்டுமே வழங்கப்படுகின்றது. மேலும், மோட்டார் போக்குவரத்துத் துறையின் வேரஹெர டிஜிட்டல் அமைப்புடன் 12 மாவட்ட அலுவலகங்கள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 13 மாவட்ட அலுவலகங்களும் இந்த அமைப்புடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் […]

தண்ணீர் தொட்டியில் விழுந்து இளைஞன் உயிரிழப்பு

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்துலுஓயா பகுதியிலுள்ள இறால் பண்ணையொன்றின் தண்ணீர் தொட்டியில் விழுந்து 24 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில் குறித்த இளைஞனுக்கு ஏற்பட்ட வலிப்பின் காரணமாக தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.ம.ச – ஐ.தே.க. பேச்சுவார்த்தை; சஜித் தரப்பு குழு அறிக்கை – புதனன்று கட்சி முகாமை பிரிவுக்கு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து செயலாற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கான பரிந்துரைகளை தயார் செய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை 22ஆம் திகதி கட்சி முகாமைத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தலைமையில் நியமிக்கப்பட்டிருந்ததுடன் குழு உறுப்பினர்களாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார் […]

மாகாணத் தேர்தல் தாமதம்; ஆணையத்தை சாடாதீர் – தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்

“தேர்தல் ஆணைக்குழு மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லையென்று ஆணைக்குழு மீது குற்றச்சாட்டு முன்வைக்கக் கூடாது. மாகாண சபைத் தேர்தல் இடம்பெறாமல் போனமைக்கு தேர்தல் ஆணைக்குழுவால் எந்தப் பொறுப்பையும் ஏற்க முடியாது” என்று தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஆணைக்குழு மீது குற்றச்சாட்டு முன் வைக்காமல், தாம் தம்மை நோக்கியே கைநீட்டிக் கொள்ள வேண்டும். இன்று மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அதிக அக்கறையுடன் பேசும் தரப்பினரிடம், இதே அக்கறை அந்தக் காலப்பகு […]

வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மஹா ஓயா படுகை மற்றும் தெதுரு ஓயா படுகைகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹா ஓயா படுகையின் சில துணை ஆறுகள் இதுவரை குறிப்பிடத்தக்க மழையைப் பெற்றுள்ளதால், மழை நிலைமை மற்றும் மஹா ஓயா படுகையிலுள்ள நீர்ப்பாசனத் திணைக்களம் பராமரிக்கப்படும் அளவிடும் கருவிகளின் […]

களனிவெளி மார்க்க ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது

களனிவெளி மார்க்கத்தில் ரயிலொன்று தடம் புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. களனிவெளி மார்க்கத்தில், கொஸ்கம மற்றும் அவிசாவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலொன்று தடம் புரண்டதால் அந்த மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் குறித்த பகுதியில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இன்று முதல் தென் மாகாணத்தில் GovPay செயலி மூலம் அபராத செலுத்தல்

தென் மாகாணத்தில் இன்று (20) முதல் GovPay செயலி மூலம் நேரடியாக அபராதம் செலுத்த முடியுமெனவும் குறித்த வசதி அடுத்த மாதம் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் 9 மாகாணங்களையும், இந்த திட்டத்துக்குள் உள்ளடக்கத் திட்டமிட்டுள்ளது. GovPay செயலி மூலம் தொலைபேசி அல்லது பிற சாதனத்தைப் பயன்படுத்தி எந்த இடத்திலிருந்தும் எளிதாகப் பணம் செலுத்த முடியுமென தெரிவித்துள்ளது.

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள வாகனத்தில் மோதி கடலில் விழுந்துள்ளது. விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கிய சரக்கு விமான நிறுவனமான Air ACTக்கு சொந்தமான போயிங் 747-481, எமிரேட்ஸ் EK9788 விமானமே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலைய வாகனத்தில் இருந்த இரண்டு பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், விமானத்தில் இருந்த நான்கு பணியாளர்கள் உயிர் பிழைத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். […]